Ignorance
of law is no excuse
சட்டம்
தெரியவில்லை என்பது மன்னிப்புக்கு ஒரு காரணம் இல்லை:
1897-ல்
ஒரு வழக்கில், வாதி, பிரதிவாதிக்கு அவரின் சொத்தின் பேரில் ரூ.1,000/- அடமானக்கடன்
கொடுத்திருக்கிறார். இப்படி சொத்தின் பேரில் அடமானக் கடன் கொடுத்திருந்தால், அவர் இரண்டு
விதமாக வழக்குப் போட்டு அந்தப் பணத்தை வசூல் செய்யலாம். ஒன்று: வெறும் பணத்தை மட்டும்
வசூல் செய்ய வழக்குப் போடலாம். (Simple money decree). மற்றொன்று:
அடமானச் சொத்தை ஏலத்துக்கு கொண்டு வந்து வசூல் செய்யலாம். (Mortgage decree). இதில் அந்தக் கடனைக் கொடுத்தவர் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். அல்லது
பணத்துக்கு டிகிரி வாங்கி விட்டு, பின்னர் அடமான டிகிரியும் வாங்கலாம்.
இங்கு
இந்த வாதி, வெறும் பணத்துக்கு மட்டும் வழக்குப் போட்டு டிகிரி வாங்கி வைத்துள்ளார்.
அதை நிறைவேற்ற மனுப் போடும்போது, சொத்தை ஏலத்துக்கு கொண்டுவரும்படி கேட்கிறார். ஆனால்
இவர் வாங்கி இருப்பதோ வெறும் பணத்தை வசூல் செய்யும் டிகிரி (Simple
money decree). இப்படி வெறும் பணத்துக்கு டிகிரி
வாங்கி இருந்தால், முதலில் எதிராளியின் சொத்தை அட்டாச்மெண்ட் செய்ய வேண்டும். பின்னர்
அதை ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும். அதை விட்டுவிட்டு நேரடியாகவே, அடமான டிகிரி போல
சொத்தை ஏலத்துக்கு கொண்டு வர முடியாது.
எனவே
பிரதிவாதி, வாதியின் மனுவை (சொத்தை ஏலத்துக்கு கொண்டுவரும்படி போட்ட மனுவை) ஆட்சேபனை
செய்கிறார். கோர்ட்டும் அவரின் ஆட்சேபனை சரிதான் என்று ஒப்புக் கொண்டு, அந்த டிகிரியை
நிராகரித்து விட்டது.
இந்த
மாதிரி சூழ்நிலையில், வாதி, அவர் வாங்கிய பண டிகிரியை விட்டு விட்டு, அடமான டிகிரி
கேட்டு புதிய வழக்கை போடுகிறார். அப்போது ஒரு தவறைச் செய்து விடுகிறார். இவருக்குச்
சேர வேண்டிய கடனே ரூ.1,000 மட்டும்தான். ஆனால் இவர் சொத்தின் அடமான டிகிரி கேட்பதால்,
அதை ஏலம் கொண்டுவர வேண்டும் என்பதாக நினைத்துக் கொண்டு, சொத்தின் மதிப்பான ரூ.1,200/-
க்கு வழக்கைப் போடுகிறார்.
அதில்,
பண டிகிரி வழக்கை போடும்போது, ரூ.1,000 என்பதால் முன்சீப் கோர்ட்டில் போட்டார். இப்போது
அடமானக் கடன் டிகிரி கேட்பதால், அதுவும் தெரியாமல் சொத்து மதிப்பான ரூ.1,200-க்கு டிகிரி கேட்பதால், சப் கோர்ட்டில் வழக்கைப் போடுகிறார்.
(அப்போது ரூ.1,000 வரை முன்சீப் கோர்ட்டில் வழக்குப் போடலாம். அதற்கு மேல் போனால் சப்கோர்ட்டில்தான்
வழக்குப் போடமுடியும் என்ற நிலை).
சப்கோர்ட்
என்ன சொல்லிவிட்டது என்றால்: அடமான டிகிரி கேட்டாலும்,
கடன் தொகைக்குத் தான் வழக்குப் போட முடியும். எனவே உங்கள் வழக்கின் தொகை ரூ.1,000-ம்
தான். ஆனால் நீங்கள் சொத்தின் மதிப்பான ரூ.1,200-க்கு வழக்குப் போட்டுள்ளீர்கள். இது
தவறு. மேலும் உங்கள் வழக்கின் மதிப்பு ரூ.1,000 என்பதால், நீங்கள் முன்சீப் கோர்ட்டில்தான்
வழக்குப் போட முடியும். உங்கள் வழக்கு சப்கோர்ட்டுக்கு வராது. எனவே உங்களை வழக்கை முன்சீப்
கோர்ட்டில் போடவும் என்று வழக்குப் போட்ட அன்றே வழக்கின் பேப்பர்களை வாதிக்குத் திருப்பிக்
கொடுத்து விட்டது.
முன்சீப்
கோர்ட்டில்: எனவே வாதி, காலதாமதமாக, அதாவது 12 மாதங்கள் கழித்து,
முன்சீப் கோர்ட்டில் அந்த வழக்குப் பேப்பர்களை தாக்கல் செய்கிறார். முன்சீப் கோர்ட்
என்ன சொல்லி விட்டது என்றால்: நீங்கள் காலதாமதமாக வந்ததால் உங்கள் வழக்கை ஏற்றுக் கொள்ள
முடியாது என்று தீர்ப்புச் சொல்லி விட்டது. ஆனால் வாதி என்ன சொல்கிறார் என்றால்: எனக்கு
சட்ட நடைமுறை தெரியாததால்தான், நான் அறியாமல் சப்கோர்ட்டில் வழக்கை போட்டு விட்டேன்.
எனவே என்னுடைய தவறு நியாயமானது என்பதால், அதனால் ஏற்பட்ட காலதாமதத்தை மன்னிக்க வேண்டும்
என்று கேட்கிறார். ஆனால் முன்சீப் கோர்ட் சொல்வது என்னவென்றால்: இந்த வழக்கில் காலதாமதம்
என்பது இந்திய லிமிடேசன் சட்டம் பிரிவு 5-ல் சொல்லப்பட்டுள்ளதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்படி சட்டம் தெரியவில்லை என்று சொல்வதை (mistake of law) என்பதை ஒரு தகுந்த காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதே சட்டத்தில் பிரிவு 14-ல்
சொல்லி உள்ளதை எடுத்துக் கொள்ள முடியாது என்றும் மறுத்து விட்டது.
இந்திய
லிமிடேசன் சட்டம் (Limitation Act) பிரிவு-5:
மனுவை
காலதாமதமாகக் கோர்ட்டில் தாக்கல் செய்தால், காலதாமதம் நியாயமான காரணம் என்று கோர்ட்
நினைத்தால், அந்தக் காலதாமதத்தை கோர்ட் மன்னித்து, மனுவை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி
உள்ளது.
Any
appeal or application may be admitted after the prescribed period, if the
Applicant satisfies the Court that he had sufficient cause for not preferring
the application within such period.
இந்திய
லிமிடேசன் சட்டம் (Limitation Act) பிரிவு-14:
ஒரு
வழக்கை, தவறுதலாக வேறு ஒரு கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டு, அதன்பின்னர் அது முறையான
விசாரிக்கும் கோர்ட் இல்லை என்று பின்னர் தெரியவந்தால், அதனால் ஏற்படும் காலதாமதம்
என்பது மன்னிக்கக் கூடியதுதான். ஆனால், அந்தத் தவறை வேண்டுமென்றே செய்திருக்கக் கூடாது.
உண்மையிலேயே தெரியாமல் செய்திருக்க வேண்டும். (Bona fide mistake).
மாவட்ட
கோர்ட்டுக்கு அப்பீல்:
இந்த
முன்சீப் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, வாதி, மாவட்ட கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார்.
அங்கு: “சட்டம் தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்று கூறமுடியாது,” என்று மாவட்ட கோர்ட்
கூறிவிட்டது. The District Judge applied the ruling that a litigant
proceeding on an error of law, could not be held to be proceedings in good
faith.
இந்த
வழக்கில் என்ன சட்டப் பிரச்சனை என்றால்:
பிரிவு-5-ன்படி,
காலதாமதத்துக்கு தகுந்த காரணம் (sufficient cause) சொல்ல
வேண்டும். ஆனால் அதில் ஒரு சிக்கல் என்னவென்றால்: எனக்கு சட்டம் தெரியாமல் இந்தக் காலதாமதம்
ஏற்பட்டது என்று சொன்னால், “சட்டம் தெரியவில்லை” என்பது சரியான காரணம் என்று பிரிவு
-5 ஏற்றுக் கொள்ளவில்லை (Not a sufficient
cause under Sec.5).
எனவே
மாவட்ட கோர்ட்டும் வாதியின் அப்பீல் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. அதை எதிர்த்து
ஐகோர்ட்டுக்கு மேல் அப்பீல் போகிறார் வாதி.
ஐகோர்ட்டில்:
இந்த
வழக்கின் சட்ட சிக்கலைத் தீர்ப்பதற்கு அலகாபாத் ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் விசாரிக்கிறது.
தலைமை
நீதிபதியின் தீர்ப்பு:
வாதி,
உண்மையில் தெரியாமல்தான், சப்கோர்ட்டில் வழக்கைப் போட்டு விட்டார். அதில் கெட்ட எண்ணம்
ஏதுமில்லை. ஏன் இந்த வழக்கை முதலிலேயே முன்சீப் கோர்ட்டில் போட்டிருக்கக் கூடாது என்று
இப்போது நாங்கள் கேட்கக் கூடாது. சட்டம் தெரியாமல் வாதி இப்படிச் செய்ததை பிரிவு 14-ன்படி
மன்னிக்கத் தகுதி இல்லாதவரா என்பதே கேள்வி. பல நீதிபதிகள், இப்படிப்பட்ட தவறுகளை (mistake
of law) நல்லெண்ணத்தின் பால் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளலாம் என்று
சொல்லி உள்ளார்கள்.
எங்கள்
முன்னர், இந்த வாதியின் வழக்கு போல, வேறு ஒரு முன்தீர்ப்பை யாரும் காண்பிக்கவில்லை.
எங்களிடம்
பல முன் வழக்குகளை காண்பித்தார்கள். அவை எல்லாமே பிரிவு 5-பற்றியதே. அதில் ‘பொருத்தமான
காரணம்’ (sufficient cause) என்றால் என்ன என்றே அலசப்பட்டுள்ளது.
பாம்பே
ஐகோர்ட் வழக்கான: Sita Ram Paraji v. Nimba,
ILR 12 Bom. 320, என்ற வழக்கில், பாம்பே ஐகோர்ட், “சட்டம் தெரியவில்லை
என்று சொல்வது, பிரிவு 5-ன்படி ‘பொருத்தமான காரணமாக’ (sufficient reason) இருக்க முடியாது என்று சொல்லியுள்ளது. அப்படி சொல்லி இருப்பது என்னைப் பொறுத்தவரை
சரி என்று ஒப்புக் கொள்ள முடியவில்லை. இது எப்படி இருக்கிறது என்றால், “எனக்கு லிமிடேசன்
சட்டம் என்று ஒரு சட்டம் இருப்பதே தெரியாது” என்று வாதி சொன்னால், அதற்கு வேண்டுமானால்
பொருத்தமாக இருக்கும்.
கல்கட்டா ஐகோர்ட் வழக்கான: Huro
Chunder Roy v. Surnamoyi, ILR 13 Cal. 266, என்ற வழக்கில், அதன் நீதிபதிகள்,
“பிரிவு-5-ஐப் பொறுத்தவரை, தகுந்த காரணம் (Sufficient cause)
என்பது ஒவ்வொரு வழக்கின் தன்மையைப் பொறுத்தும், அந்த நீதிபதி தன் அதிகாரத்தைப் பயன்
படுத்தி முடிவு எடுக்க வேண்டிய விஷயம் ஆகும்” என்றும், மேலும் அந்த வழக்கில், பிரிவு
5-ல் காலதாமத்தை மன்னிக்க, நியாயமான தவறு (Bona fide mistake)
ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை
மறுத்து விட்டார்கள். (அதாவது நியாயமான காரணத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியுள்ளார்கள்).
மதராஸ்
ஐகோர்ட் வழக்கான: Krishna v. Chathappan,
ILR 13 Mad. 269, என்ற வழக்கில், பிரிவு-5-ஐப் பற்றிச் சொல்லும்போது,
“சட்டம் தெரியவில்லை (mistake of law) என்று சொல்லி இருப்பதை,
சரியான காரணம் (sufficient cause) என்றே எடுத்துக் கொள்ளலாம்
என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். மேலும், “ஒரு சில சூழ்நிலைகளில், உண்மையில் நியாயமாக
தெரியாமல் ஒரு சட்டத் தவறைச் செய்திருந்தால், அதை ஏற்கலாம் என்பது ஒரு நியாயமான நியதிதான்.
பிரிவு-14-ல், தெரியாமல் ஒரு வழக்கை வேறு கோர்ட்டில் போட்டு விட்டால், அது தவறாக இருந்தபோதும்,
அது நியாயமான தவறாக (bona fide mistake) இருந்தால், அதை ஏற்றுக்
கொள்ளலாம் என்று வழக்காட வருபவர்களுக்கு சாதகமாகவே இந்த பிரிவு சட்டத்தை இயற்றி உள்ளார்கள்.
எனவே
நாங்களும் எங்கள் தீர்ப்பாக: “பிரிவு 5 என்பது காலதாமதத்தை
மன்னிப்பது தொடர்பாக அந்தக் கோர்ட்டுக்கு கொடுக்கப்பட்ட அதிகார வரம்பு ஆகும். எனவே
நியாயமான காரணம் (Sufficient cause) என்பதற்கு மிக
இணக்கமான அல்லது பரந்த விளக்கத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு மதிப்புமிகுந்த
நீதியை (substantial justice) கொடுக்க முடியும். வாதி, வேண்டுமென்றே
ஒரு தவறைச் செய்யாத போது, உண்மையில் அவர் தெரியாமல் ஒரு தவறைச் செய்திருப்பதால், அவருக்கு
பிரிவு 14-ன்படியே தீர்வு கிடைக்க வேண்டியவர் என்றே முடிவு செய்கிறோம்.
மொத்தம்
மூன்று நீதிபதிகள் ஒரே தீர்ப்பை சொன்னதால், மேலே சொன்ன தீர்ப்பே இறுதி செய்யப்பட்டது.
**
Judgment
by Justice John Edge Kt. CJ:
There
can be no doubt that in this case, the plaintiff was prosecuting his suit in
the Court of the Sub-Court in good faith. The mistake, if there was one, arose
through ignorance of law and will not exclude the plaintiff from the indulgence
of Sec.14 of Limitation Act 1877. (the then Limitation Law).
That
a mistake of law can be made in good faith, most Judges would probably admit
from their own personal experiences on the Bench. We have not been referred any
case law on this point directly, whether a person who had prosecuted a civil
proceeding in good faith in a Court which having defective jurisdiction, was
excluded from the protection of Sec.14 of the Limitation Act, if has made a
mistake of law as to the correct Court.
The
question as to what was sufficient cause under Sec.5 is discussed in Sita Ram Paraji
v. Nimba, ILR 12 Bom. 320. The Bombay Court held that ignorance of law cannot
be recognised as a ‘sufficient reason’ for delay under Sec.5. But this opinion
is really went too far. No doubt, if a litigant alleged that he had never heard
of the Indian Limitation Act, his ignorance of the existence of such an Act
would not be ‘sufficient cause’ under Sec.5.
The
Calcutta High Court in Huro Chunder Roy v. Surnamoyi, ILR 13
Cal.266, the learned Judges decided, with regard to Sec.5, as to what is ‘sufficient
cause’ that it is for the Judge in each case to exercise his discretion having
regard to the particular facts established before him; and they declined to
hold that a bona fide mistake as to the period of limitation could not in any
circumstances be a valid ground for the admission of an appeal (with delay) under
Sec.5.
The
Madras High Court in Krishna v. Chathappan, ILR 13 Mad. 269,
the learned Judges said in reference to Sec.5: “We are not prepared to hold
that a mistake of law is no circumstances a sufficient cause within the meaning
of Sec.5”. “The true rule is whether under the special circumstances of each
case the appellant acted under an honest, though mistaken belief, formed with
due care and attention.
Sec.14
of Limitation Act indicates that the Legislature intended to show indulgence to
a party acting bona fide under a mistake.
We
think that Sec.5 gives the Courts a discretion which in respect of jurisdiction
is to be exercised in the way in which judicial power and discretion ought to
be exercised upon principles which are well understood. The words ‘sufficient
cause’ receiving a liberal construction so as to advance substantial justice
when no negligence, nor inaction, nor want of bona fides is imputable to the applicant.”
**
I
agree with this view. I myself am conscious of having made many mistakes of
law, and in my opinion Sec.14 is applicable to such a case as this.
I
would alllow the appeal and set aside the judgment of the Court below.
**
Ref: Allahabad
High Court, Brij Mohan Das v. Mannu Bibi and another, (1897) ILR 19 All 348.
No comments:
Post a Comment