Monday, June 29, 2020

வழக்குகள் - 8

வழக்குகள் 8

இந்தியாவுக்கு வெளியே நடக்கும் குற்றங்கள்

1902-ல் நேபாளத்தில் (பழைய பிரிட்டீஸ் இந்திய எல்லைக்கு வெளியே) ஒரு குற்றத்தை காளிச்சரண் செய்கிறார். அவர் அப்போதைய பிரிட்டீஸ் சிட்டிசன் ஆவார்.

ஆனால் அவரை பிரிட்டீஸ் இந்திய நீதிமன்றமான கொராக்பூர் செசன்ஸ் நீதிமன்றம் விசாரனை செய்து தண்டிக்கிறது. அப்போதுதான் தெரிய வருகிறது. அவர் பிரிட்டீஸ் சிட்டிசன் என்றும், குற்றம், பிரிட்டீஸ் இந்திய எல்லைக்கு வெளியே நேபாளத்தில் நடந்தது என்று.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டீஸ்-இந்திய நீதிமன்றம், நேபாள மன்னர் அரசாங்கத்திடம் முன் அனுமதி பெற்று இருக்கவேண்டும். இதை வழக்குப் போடுவதற்கு முன்னரே பெற்று இருக்க வேண்டும் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 188-ல் சொல்லப் பட்டுள்ளது. அவ்வாறு பெறவில்லை என்றால் அந்த வழக்கின் தீர்ப்பு செல்லாது. எனவே காளிசரணை விசாரனைக்கு உட்படுத்திய பின்னரே இது தெரிய வந்ததால், அதற்குப் பின்னர் நேபாள அரசின் அனுமதியைப் பெறுகிறார்கள். இது சரியா?

இது போலவே பிரிட்டீஸ் இந்தியாவுக்குள்ளே பல சமஸ்தானங்கள் தனியாக இயங்கிக் கொண்டிருந்தன. பிரிட்டீஸ்-இந்திய சிட்டிசன், அதன் பகுதி இல்லாத வேறு சமஸ்தான எல்லைக்குள் குற்றம் செய்திருந்தால்,  அவர்கள் மீது வழக்குப் போட வேண்டுமென்றால், அந்த சமஸ்தானத்தின் முன் அனுமதி பெற்றுத் தான் கிரிமினல் வழக்குப் போட முடியும்.

Sec.188 of the Criminal Procedure Code provides that no charge as to an offence committed beyond the limits of British India, or by a British subject in the territories of any Native Prince or Chief of India, shall be enquired into in British India unless the Political Agent for the territory in which the offence is said to have been committed, certifies that the charge ought to be enquired into in British India.

இந்த வழக்கில் காளிச்சரண் ஒரு பிரிட்டீஸ் இந்தியர். அவர் பிரிட்டீஸ் இந்திய எல்லைக்கு வெளியே உள்ள நேபாளத்தில் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார். எனவே சிஆர்பி சட்டம் பிரிவு 188ன்படி நேபாள மன்னர் அரசின் முன் அனுமதியைப் பெற்று வழக்குப் போடவில்லை. மாறாக, வழக்கை விசாரித்த பின்னர் அப்படிப்பட்ட அனுமதியைப் பின்னர் பெற்றுள்ளார்கள். எனவே அந்த குற்ற விசாரனை செல்லாது என்று தீர்ப்பு.

வேறு ஒரு வழக்கான, Queen-Empress v. Ram Sundar, (1896) ILR 19 All 109  என்ற வழக்கில் இதே போன்று நடந்துள்ளது. இதில் குற்றவாளியான ராம் சுந்தரும் மற்ற ஒருவனும் நேபாளத்தில் ஆள் கடத்தல் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை பிரிட்டீஸ் இந்திய மாஜிஸ்டிரேட் விசாரித்து தண்டனை கொடுத்து இருக்கிறார். நேபாள மன்னர் அரசின் முன் அனுமதி பெறவில்லை. ஆனால் பின்னர் பெற்று இருக்கிறார்கள். இந்த தண்டனைத் தீர்ப்பு செல்லாது என்று அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்புச் சொல்லியுள்ளது.

மற்றொரு வழக்கான, The Sessions Judge v. Sundara Singh, 6 Ind Cas 308, என்ற வழக்கில், இந்தக் குற்றவாளி பிரிட்டீஸ் இந்திய பிரஜை. இவன் கொள்ளை வழக்கில் சம்மந்தப்படுகிறான். இவன் கொள்ளையடித்த பகுதியானது புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குள் உள்ளது. இவன் மீது வழக்குப் போட வேண்டுமானால், கொள்ளை நடந்த இடத்தில் உள்ள கோர்ட்டில்தான் வழக்குப் போட முடியும். அந்த இடம் புதுக்கோட்டை சமஸ்தானம் என்பதால், அந்த சமஸ்தான அரசின் அனுமதி பெற்றுத்தான், பிரிட்டீஸ் இந்திய எல்லையில் உள்ள கோர்ட்டில் வழக்குப் போட முடியும். இந்த வழக்கில் அப்படி முன் அனுமதியைப் பெறவில்லை. எனவே வழக்கு விசாரனை சட்டப்படி செல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்புச் சொல்லி உள்ளது.

மற்றொரு வழக்கான, Sirdar Meru v. Jetha Bhai Amirbhai, (1906) 8 Bom. LR 513, என்ற வழக்கில், மேரு என்பவனை தாக்கி அவன் காலை ஒடித்து விடுகிறார்கள். இது நடந்தது பரோடா சமஸ்தான எல்லைக்குள் (இது பிரிட்டீஸ் இந்திய எல்லை இல்லை).  எனவே மேருவை ஆனந்த பகுதியில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள். (இது பிரிட்டீஸ் இந்திய எல்லைக்குள் உள்ளது). வழக்கை ஆனந்த் பகுதியில் உள்ள மாஜிஸ்டிரேட் கோர்டில் போடுகிறார்கள். அந்த மாஜிஸ்டிரேட் அந்த வழக்கை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். கிரிமினல் நடைமுறைச் சட்டம் 179-ன்படி, குற்றம் நடந்த இடத்தில் வழக்குப் போடலாம். அல்லது அதன் தொடர்ச்சியாக நடந்த குற்றநிகழ்வு இடத்தில் வழக்குப் போடலாம். உதாரணமாக: பரோடா சமஸ்தான எல்லைக்குள் அவன் காலை ஒடித்து விட்டார்கள். அவனை ஆனந்த நகரில் உள்ள மருத்துவ மனையில்  சேர்த்த பின்னர் அதனால் இறந்து விட்டால், இந்த வழக்கை, குற்றம் நடந்த இடமான பரோடாவிலும் போடலாம். அவன் அந்தக் காயத்தால் இறந்துவிட்ட ஆனந்த் நகரிலும் போடலாம். அப்படி இறப்பு நடந்து ஆனந்த நகரில் உள்ள கோர்ட்டில் (பிரிட்டீஸ் இந்திய கோர்ட்) போடும்போது பரோடா சமஸ்தானத்தின் முன் அனுமதி  தேவையில்லை. மாறாக, கால் ஒடிந்தது பரோடா சமஸ்தான எல்லையில். ஆனந்த் நகரில் சிகிச்சைக்காக மட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளார். இங்கு ஒரு குற்ற நிகழ்வும் நடக்கவில்லை. எனவே ஆனந்த் நகர கோர்ட்டில், பரோடா சமஸ்தானத்தின் முன் அனுமதி இல்லாமல்  வழக்குப் போட முடியாது என்று மாஜிஸ்டிரேட் மறுத்து விட்டார்.

**.


No comments:

Post a Comment