Tuesday, June 2, 2020

பணம் பெறாமல் எழுதிக் கொடுத்த பத்திரம் செல்லுமா?


பணம் பெறாமல் எழுதிக் கொடுத்த பத்திரம் செல்லுமா?

ஒரு சொத்தை வாங்குவதற்காக விற்பவரும்  வாங்குபவரும் ஒரு கிரய அக்ரிமெண்ட் போட்டுக் கொள்கிறார்கள். இது நடந்தது 1949-ல். அதில் முன்பணமாக ரூ.200 கொடுக்கப்படுகிறது. மூன்று வருடங்களில் கிரயம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது.

இதற்கிடையில் கிரயம் வாங்குவதாகச் சொல்லியவர், அந்த கிரயம் வாங்கும் உரிமையை வேறு ஒருவரான சின்னக் கவுண்டனுக்கு மாற்றி Assignment பத்திரம் எழுதிக் கொடுத்து விடுகிறார். ரூ.200 ரொக்கமாகப் பெற்றுக் கொண்டதாகச் சொல்லி எழுதப்பட்டுள்ளது.

இதன்பின்னர், அவ்வாறு அசைண்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் கடனாளி ஆகிவிட்டேன் என்று இன்சால்வன்சி மனுபோடுகிறார். Provincial Insolvency Act ன்படி Official Receiver நியமிக்கப்படுகிறார்.

ரிசீவர் நடவடிக்கையின்படி, இந்த அசைண்மெண்ட் பத்திரம் என்பது, கடன்காரர்களை ஏமாற்றுவதற்காக எழுதிக் கொண்ட பத்திரம் என்றும் உண்மையில் பணமே கொடுப்பபடவில்லை என்றும், எனவே இது செல்லாது என்றும் சேலம் சப் கோர்ட்டில் வழக்கு வருகிறது. சேலம் சப்கோர்ட் தீர்ப்புப்படி, இந்த அசைண்மெண்ட் செல்லாது என்று சொல்கிறது.

அதை எதிர்த்து சேலம் மாவட்ட கோர்ட்டுக்கு அப்பீல் போகிறது. அங்கு, இந்த அசைண்மெண்ட் பத்திரத்தில் ரூ.200 ரொக்கமாகக் கொடுக்கப்பட்டதாக பத்திரம் சொல்கிறது. ஆனால், உண்மையில் ரூ.200 கொடுக்கபடவில்லை. பொதுவாக, கிரயப் பத்திரங்கள் எழுதிக் கொள்ளும்போது, கிரயத் தொகைகளை ரொக்கமாக அன்றே பெற்றுக் கொண்டதாக எழுதிக் கொண்டாலும், சில நேரங்களி்ல் அவ்வாறு அன்றே பணம் கொடுத்திருக்க மாட்டார்கள். அவ்வாறான சூழ்நிலைகளில் விற்றவர் பணம் வரவில்லை என்று வசூல் செய்யும் உரிமை மட்டுமே அவருக்கு உண்டு. அதற்காக கிரயத்தை ரத்து செய்து விட முடியாது. சொத்தின் உரிமை மாறி விட்டால் அதை ரத்து செய்ய முடியாது. வரவேண்டிய பாக்கிப் பணத்தை மட்டும் வசூல் செய்யும் உரிமை மட்டுமே உண்டு என்பது சட்டம்.

இந்த வழக்கில் ரூ.200 அன்றே கொடுக்கப்பட்டதாக எந்த சாட்சியமும் இல்லை என்பதால் அது இன்னும் பாக்கியாகவே உள்ளதாக மாவட்ட கோர்ட் கருதுகிறது. எனவே அந்த பணத்தை வேண்டுமானால் Official Receiver பெற்றுக் கொள்ளலாம். Assignment பத்திரம் செல்லாது என்று சொல்லிவிட முடியாது. மேலும், அதன்பொருட்டு கடன்காரர்களை ஏமாற்றும் நோக்கில் பணம் பெறாமல் எழுதிக் கொடுத்த பத்திரம் என்று முடிவு செய்ய முடியாது என்று மாவட்ட கோர்ட் தீர்ப்புச் சொல்லி விட்டது.

அதை எதிர்த்து Official Assignee சென்னை ஐகோர்ட்டில் ரிவிஷன் மனு தாக்கல் செய்கிறார்.  பொதுவாக ரிவிஷன் மனுக்களில், கீழ்கோர்ட் கொடுத்த சட்டம் அல்லாத சாட்சியம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் தலையிட முடியாது. It is well settled that in such revision petitions, the findings of  fact cannot be canvassed or set aside unless they are proved to be perverse or based on no evidence.

ரூ.200 க்காக இவ்வளவு பிரச்சனை, வழக்கு என்றால் இல்லை. சொத்தின் மதிப்பு ரூ.1200 மேலேயே இருக்கும். அக்ரிமெண்ட் குறைவான தொகைக்கே போடப்பட்டு உள்ளது. எனவே இதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் இந்த வழக்கு. யார் இந்த சொத்தை கிரயம் வாங்குவார்களோ அவர்கள் நான்கில் ஒரு பங்கு தொகை கொடுத்தால் போதும் அந்த முழுச் சொத்தும் கிடைத்துவிடும்.

ஐகோர்ட் தனது தீர்ப்பில், மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டாலும், ரூ.200 இன்னும் கொடுக்கப்படாமலேயே இருப்பதால், அதற்கு வட்டி 12% சேர்த்து கொடுத்துவிட வேண்டும் என்று உறுதி செய்தது.

**

 


No comments:

Post a Comment