Friday, June 19, 2020

சர்வஸ்வதனம் வகைத் திருமணம்

Sarvasvadanam Marriage
சர்வஸ்வதனம் வகைத் திருமணம்
1896-ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு இது. 
(1896) 6 MLJ 319 Judgement by Justice Parker.
கேரளாவில் ‘மங்கம்பள்ளி இல்லம்’ என்ற குடும்பத்தில், கடைசியாக ஒரு மகள் மட்டும் இருக்கிறாள். அவளின் தந்தைக்கு ஆண் வாரிசுகள் கிடையாது. இவர்கள் நம்பூதிரி பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் நம்பூதிரி பிராமணமக் குடும்ப வழக்கப்படி, ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசுகள் இல்லாமல் போய் விட்டால், பெண் குழந்தை மட்டும் இருந்தால், அவளை திருமணம் செய்து கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பிவிட மாட்டார்கள். மாறாக, அந்த பெண்ணுக்கு ஒரு கணவனைப் பார்த்து அவனை பெண்ணின் வீட்டுக்குக் கூட்டி வந்து திருமணம் செய்து கொடுத்து, அந்த மருமகனை, மாமனார் வீட்டோடு வைத்துக் கொள்வார். (தமிழகத்தில் வீட்டுக்கு மாப்பிள்ளையாகச் செல்வது போல). இதைச் சர்வஸ்வதனம் வகைத் திருமணம் என்று நம்பூதிரி பிராமண சமுதாயத்தில் ஒரு பழைய பழக்கமாக இருந்ததாம். ஆனாலும், இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், அந்த மகள் பெற்றுக் கொள்ளும் மகனை, அந்த  மகளின் தகப்பன், தன் மகனாகக் கருதிக் கொள்வாராம். அந்த பேரனுக்கு அவரின்  சொத்துக்கள் போய் சேரும். 
இப்படியொரு ஏற்பாட்டைச் செய்யவில்லை என்றால், அவரின் சொத்துக்கள் அவரின் பங்காளிகளுக்குப் போய் சேர்ந்து விடும். ஆண் வாரிசு இல்லாத சொத்துகள் பங்காளிகளுக்கே போகும். அவரின் மகளுக்கு போகாது என்று இந்து சாஸ்திர சட்டம் சொல்கிறது. 
இந்த மங்கம்பள்ளி இல்லத்தின் குடும்பத் தலைவருக்கு ஆண் குழந்தை இல்லை. ஒரேயொரு மகள் மட்டுமே. எனவே அவர் மகளுக்கு இந்த சர்வஸ்வதனம் முறைப்படி திருமணம் செய்கிறார். மருமகன் வீட்டோடு மாப்பிள்ளையாக வந்து விட்டார். காலம் ஓடுகிறது. வகுர் இறந்து விட்டார். அவரின் மகளும் இறந்து விட்டார். அவளுக்கு குழந்தை ஏதும் இல்லை. 
இப்படிப்பட்ட சூழ்நிலையில், வீட்டோடு வந்த மாப்பிள்ளைக்கு சொத்து போகுமா என்பதே இந்த வழக்கு. இந்த சர்வஸ்வதனம் திருமண முறைப்படி, திருமணம் நடக்கும்போது, அந்த மகளின் மகனை, அந்த மகளின் தந்தை தன் குழந்தையாக எடுத்துக் கொண்டால் மட்டுமே, தொடர்ந்து ஆண் வாரிசு இருப்பதாகக் கருதி இந்தச் சொத்துக்கள் அந்த வளர்ப்புப் பேரனுக்குப் போகும். ஆனால் இங்கு, அப்படி ஒரு ஆண் குழந்தை பிறக்கவில்லை. 
இருந்தாலும், இறந்த மனைவியின் சொத்து தனக்கு வரவேண்டும் என்று கணவர் கேட்கிறார். பங்காளிகள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. குழந்தை இல்லை என்பதால், சொத்து அவரின் மகளுக்கு வரவில்லை என்றும், அதில் அவளின் கணவன் உரிமை கோர முடியாது என்றும் சொல்லி விட்டார்கள்.
எனவே இறந்தவளின் கணவன்  ஒரு சிவில் வழக்கைப் போட்டு மனைவியின் சொத்தைக் கேட்கிறார். 
இதேபோல், எற்கனவே 1884-ல் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. Vasudevan v. Secretary of State for India, (1883) ILR 11 M.157.

No comments:

Post a Comment