Erchakkanayanur
palayapat
மதுரை
மாவட்டத்தில் எர்சக்க நாயகனூர் என்று ஒரு பாளையம் இருந்தது. அதன் கடைசி பாளையக்காரர்
கதிர்வேலு சாம் நாயக். அவருக்கு ஆண் குழந்தை ஏதும் இல்லை. இரண்டு மனைவிகளை மட்டும்
விட்டுவிட்டு 1886 பிப்ரவரியில் இறந்து விட்டார். மதுரை கலெக்டர், அந்த பாளையத்தை நிர்வாகம்
செய்ய வேண்டி கோர்ட் ஆப் வார்டு நியமிக்க வேண்டுமா என்று ஆய்வு செய்தார்.
பொதுவாக
பாளையங்கள் என்பது ஒரு சிறு மன்னர் ஆட்சி போல. அதன் சொத்துக்கள் வாரிசுகளுக்குள் பாகப்
பிரிவினை செய்து கொள்ள முடியாது. மூத்த மகன் அடுத்த மன்னனாக வருவான். இப்படிப்பட்ட
எப்போதுமே பிரிக்க முடியாத சொத்தை இம்பார்ட்டிபில் எஸ்டேட் என்பர். (Impartible
Estate). அரச குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள்
அந்த எஸ்டேட்டில் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவனாம்சம் பெற்றுக் கொள்வார்கள். சொத்தில்
அவர்களுக்கு உரிமை ஏதும் இல்லை.
எர்சக்க
நாயகனூர் பாளையத்தின் கடைசி பாளையக்காரரான கதிர்வேலு சாம் நாயக், ஆண் குழந்தை இல்லாமல்
இரண்டு மனைவிகளை மட்டும் விட்டு இறந்து விடுகிறார். எனவே ஆண் வாரிசு இல்லை என்பதால்,
மதுரை கலெக்டர் Court of Wards மூலம் பாளைத்தை
(ஜமீனை) நிர்வகிக்க வேண்டுமா என்று விசாரனை செய்கிறார்.
இரண்டு
மனைவிகளுக்குள் சொத்துப் பிரச்சனை வருகிறது. இளைய மனைவி வழக்குப் போடுகிறார். சொத்து பிரிக்ககூடியாதா அல்லது பிரிக்க முடியாத இம்பார்டிபில்
சொத்தா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த
பாளையத்தின் முன்கதை:
இந்த
பாளையத்தின் முதல் பாளையக்காரர் முத்தலகிரி நாயக். இவர் பிரிட்டீஸ் அரசிடம் 1815-ல்
இந்த பாளையத்தைப் பெறுகிறார். அவருக்கு ஒரே மகன், சின்ன ஓபல நாயக். இவர் இரண்டாவது
பாளையக்காரர் ஆகிறார். இவர் ஆண் வாரிசு இல்லாமல் 1835-ல் இறந்து விடுகிறார். அவருக்கு
இரண்டு மனைவிகள் மட்டும், பாப்பம்மாள் மற்றும் சின்னம்மாள். அவர்களுக்குள் சண்டை. சிவில்
வழக்கு 1836-ல் வருகிறது. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது பாப்பம்மாள் இறந்து விடுகிறார்.
பின்னர் சின்னமாளும் இறந்து விடுகிறார். எனவே சின்ன ஓபல நாயக்கின் மகளான வீரகாமு அம்மாள்
இந்த பாளையத்துக்கு சொந்தக்காரி ஆகிறாள். அவள்
1882-ல் இந்த பாளையத்தை அவளின் மகனான கதிர்வேலு நாயக்குக்கு உரிமை கொடுத்து விடுகிறாள்.
**
அந்த
கதிர்வேலு நாயக் இப்போது இறந்த பின்னர், அவரின் இரு மனைவிகளுக்குள் இந்த வழக்கு. அந்த
பாளையம் இம்பார்டிபில் எஸ்டேட் வகையாக (பாகம் பிரிக்க முடியாத எஸ்டேட்டாக) இருந்தால்,
மூத்த மனைவி அனுபவித்து வருவாள். பாகம் பிரிக்கும் எஸ்டேட்டாக இருந்தால் இரண்டு மனைவிகளுக்கும்
சரி சம பங்கு கிடைக்கும்.
ஒரு
பாளையம் என்பது இம்பார்டிபில் எஸ்டேட்டா, இல்லையா என்பது அங்குள்ள நடைமுறையைப் பொறுத்ததே.
அந்த குடும்பத்தின் முன் பழக்க வழக்கத்தை வைத்தே சொல்ல முடியும்.
**
இந்த
பாளையம் எப்படி உருவானது:
இந்த
பாளையம் 1758-ல் உருவானது. அதிலிருந்து இன்றுவரை இது பாகப்பிரிவினை ஆகவே இல்லை. இந்த
பாளையத்தை கொடுத்ததற்கு உரிய சாசனம் (Sanad) ஏதும்
இல்லை. ஆனால், சர் தாமஸ் மன்ட்ரோ 1822-ல் இங்குள்ள எல்லா ஜமீன்தாரர்களுக்கும் அறிக்கை
அனுப்பி, அவர்களின் ஜமீன் பழக்க வழக்கம் என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு, இந்த பாளைத்திலிருந்து
மன்ரோவுக்கு பதில் அனுப்பி இருந்தார்கள். அதில், “எங்களின் மூதாதையர்கள் ராயர் பகுதியைச்
சேர்ந்தவர்கள், ராயரின் ஆட்சிகாலத்தில் அவருக்கு எங்களின் மூதாதையர்கள் உதவியும் நம்பிக்கையுமாய்
இருந்தனர். எங்கள் மூதாதையர், பசுமலைக்குப் பக்கத்தில் உள்ள காடுகளைத் திருத்தி விளைநிலங்களாக்கினர்.
எனவே ராயர், அந்த பகுதியை எங்களின் மூதாதையருக்கு ஜகீர் (ஜமீன்) உரிமை வழங்கினார்.
இப்படித்தான் இந்த பகுதி எங்களுக்குப் பட்டயம் கொடுக்கபட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும்,
Nelson’s
Manual நெல்சன் புத்தகத் தொகுதியில் இந்த எர்சக நாயக்கனூர் என்பது திண்டுக்கல்
பாளையத்தில் ஒரு பகுதி. இதை 1757-ல் ஹைதர் அலி கைப்பற்றுகிறார். இடையிடையே கைப்பற்றுவதும்
பறிகொடுப்பதுவுமாக, கடைசியாக 1788ல் திப்பு சூல்தானின் ஆட்சிக்கு வருகிறது. பின்னர்
1790-ல் பிரிட்டீஸ் கர்னல் ஜேம்ஸ் திண்டுக்கல் பகுதியைக் கைப்பற்றுகிறார்.” என்று அந்த
பத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கின் பார்ட்டிகள் அதை மறுக்கிறார்கள். பிரிவு
57 இந்திய சாட்சியச் சட்டத்தின் படி, இந்த மாதிரி சரித்திரக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களை
சாட்சியமாக கோர்ட் ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறது.
எனவே
இந்த எர்சக நாயக்கன் பாளையம் என்பது திண்டுக்கல் பாளையத்தின் ஒரு பகுதியா என்ற கேள்வி
எழுகிறது. 16-ம் நூற்றாண்டில் விஸ்வநாத் நாயக் இந்தப் பகுதியை அவரின் பாளையமாக கொண்டு
ஆண்டு வந்தார். இந்த மதுரைக் கோட்டை பகுதியில்,
மொத்தம் 72 உள் கோட்டைப் பகுதிகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு தலைவனின் கைவசம் இருந்தது.
அவனுக்குப் பின்னர் அதன் உரிமை அவனின் வாரிசுக்கு சென்றது. பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில்
அந்த உரிமை அப்படியே தொடர்ந்தது. கவர்னருக்கு வரி கொடுக்க வேண்டும். போர்க்காலத்தில்
போர்வீர்களும் ஆயுதங்களும் கொடுத்து உதவ வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் பாளையங்கள் ஒப்புக்
கொண்டன.
1861-ல்
நடந்த பிரைவி கவுன்சில் (லண்டன்) வழக்கான நர்கண்டிபாளையம் என்ற வழக்கில் பாளையம் என்பது
ஒரு இராஜாங்கம் மாதிரி. இது ஒரு கூட்டுக் குடும்பம் போன்றது. பாளையத்தின் நிர்வாகத்தையோ,
சொத்துக்களையோ பங்கு பிரித்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்புச் சொல்லி உள்ளது.
மற்றொரு
வழக்கான, 1863-ல் பிரைவி கவுன்சில் வழக்கான சிவகங்கை ஜமீன்தார் வழக்கான கட்டம்ம நாச்சியார்
vs.
ராஜா சிவகங்கை (1863) 9 MIA 543) என்ற வழக்கில்
இது ராஜாங்கம் என்பதால் பங்கு பிரிக்கமுடியாத சொத்துரிமை கொண்டது என்று தீர்ப்புச்
சொல்லி உள்ளது.
நெல்சன்
மானுவல் புத்தகத்தின்படி, இந்த எர்சக நாயக்கனூர் பாளையம் என்பது திண்டுக்கல் பகுதியில்
உள்ள 24 பாளையங்களில் ஒன்று. இந்த பாளையம் 500 சக்கரம் வரி கொடுக்க வேண்டும் என்று
உள்ளது.
மேலும்
முத்துவடுகநாத தேவர் vs. துரைசிங்கத் தேவர் (1881)
LR 8 IA 99 என்ற வழக்கிலும் இந்த மாதிரியான பாளையங்கள் பாகம் பிரிக்க
முடியாதவையே என்று தீர்ப்பு கூறி உள்ளது.
மற்ற
பாளையங்களின் நடைமுறை:
மதுரை,
திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பாளையங்களும், ஜமின்தாரிகளும் எப்படி பங்கு பிரித்துக்
கொள்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். தென்னங்குடி பாளையம், சென்டையூர் பாளையம் இவற்றில்
மனைவிகள் பொது அனுபவத்தில் இருக்கிறது என்று தெரியவருகிறது.
எனவே
இந்த வழக்கில் உள்ள இரு மனைவிகளும் பொதுவில் இந்த பாளையத்தை நிர்வகித்து வரவேண்டியது
என்று தீர்ப்பு.
**
No comments:
Post a Comment