Sunday, June 21, 2020

கிரிமினல் நடைமுறைச் சட்டம் 1861 (பழைய சட்டம்)

பழைய கிரிமினல் நடைமுறைச் சட்டம் 1861

1889-ம் வருடம். விசாகபட்டினம் கவர்னரின் ஏஜெண்ட்,  ஒரு கொலை வழக்கை விசாரிக்கிறார். அதன் தீர்ப்பாக மனிதனுக்கு மரணத்தை உண்டாக்கினான் (Culpable homicide not amounting to murder) என்று அவனுக்கு தண்டனை கொடுக்கிறார். அதை எதிர்த்து அப்பீல் செய்யப் படுகிறது. அதில், அவன் கொலை செய்தான் (murder) என்று கண்டு, வழக்கை மறுவிசாரனைக்கு அனுப்புகிறது. அந்த விசாரனையை கவர்னரின் ஏஜெண்ட் செய்யாமல், விசாகபட்டின மாவட்ட நீதிபதி விசாரனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு.

Culpable homicide not amounting to murder =ஒருவன் ஒரு குற்றச்செயலைச் செய்யும் போது, மற்றவன் மரணம் அடைந்தால் அது இந்த வகையைச் சேரும். வேண்டுமென்றே அந்தச் செயலை செய்யவில்லை. ஆனால் அவன் செயலால் மற்றவன் இறக்கிறான்.

Murder = இங்கு, ஒருவனைக் கொல்ல வேண்டும் என்றே முன்னரே முடிவு செய்து, அதற்குறிய முயற்சி செய்து கொல்வது, திட்டமிட்ட கொலை என்ற வகையைச் சேரும்.

செசன்ஸ் கோர்ட் விசாரித்து இது கொலை குற்றம் தான் என்று முடிவு செய்து அதற்குத் தண்டனையாக நாடு கடத்தும் தண்டனை கொடுக்கிறது.

அதை எதிர்த்து குற்றவாளி சென்னை ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். கவர்னரின் ஏஜெண்ட்டும் இந்த வழக்கை அவரிடமிருந்து செசன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றியதை எதிர்த்து அப்பீல் வழக்குப் போட்டுள்ளார்.

மெட்ராஸ் ஆக்ட் 24 /1839 ன்படி விசாகபட்டினம், கன்சம் பகுதிகளுக்குள் வரும் கிரிமினல் வழக்குகளை அங்குள்ள கவர்னரின் ஏஜெண்ட் தான் விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும் என்று உள்ளது.

1861-ல் தான் புதிய கிரிமினல் நடைமுறைச் சட்டம் அமலுக்கு வந்தது. In 1862, the first Code of Criminla Procedure (Act XXV of 1861) came into force, but in that Code it was provided by Sec.455 that the Act should not take effect in any part of the territories in British India not subject to the general regulations of Bengal, Madras or Bombay, until the same should be extended by the Governor-General of India in Council. எனவே இந்த புதிய கிரிமினல் நடைமுறைச் சட்டம் விசாகபட்டினத்துக்கு அமலுக்கு வரவில்லை. எனவே செசன்ஸ் கோர்ட்டுக்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்பது வாதம்.

ஆனால், சென்னை அரசின் அறிவிக்கை 1862ல் வந்துள்ளளது. அதன்படி, கிரிமினல் நடைமுறைச் சட்டம் 1861 விசாகபட்டினத்துக்கு மார்ச் 1862ல் நடைமுறைக்கு வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதியில் கவர்னரின் ஏஜெண்ட்டுக்கு கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் நிறுத்திப்பட்டு விட்டது என்பது தெளிவாகிறது.

இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட் கொடுத்த தண்டனையான நாடு கடத்தும் தண்டனை சரியானதே. வாழ் முழுதும் நாடு கடத்தும் தண்டனை என்பது   தூக்குத் தண்டனைக்கு மாற்றானதுதான். குற்றவாளிகள் இருவரும் கத்தியில் குத்தி கொலை செய்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் எந்தவித கோபத்துக்கும் அப்போது ஆளாகவில்லை (without provocation) என்பதைக் கொண்டும் அவர்களின் செயல் கொலை என்பதையே சாரும் என்று செசன்ஸ் கோர்ட் கொடுத்த தீர்ப்பு சரியானதே என்று சென்னை ஐகோர்ட் சொல்லி விட்டது.

**


No comments:

Post a Comment