Wednesday, July 1, 2020

ஒரு உயில் - பல புரபேட்டுகள்

உயில் எக்சிகியூட்டர்

உயில் புரபேட் சட்டம் 1881 (The Probate and Administration Act 1881) அமலில் இருந்து வந்த காலம். ஒரு இந்து பெண் 20.12.1895-ல் ஒரு உயிலை எழுதி வைக்கிறார். அதில், பிரநாத் என்பவரையும் ஜடுநாத் என்பவரையும் எக்சிகியூட்டர்களாக (Executors) அதாவது உயிலில் சொல்லப் பட்டுள்ளவைகளை நிறைவேற்றுக் கொடுக்க வேண்டியவர்களாக நியமித்துள்ளார்.

இந்த உயிலை புரபேட் செய்வதற்காக, ஒரு Executor ஜடுநாத் மாவட்ட கோர்ட்டில் மனுச் செய்து 9.5.1896-ல் புரபேட் உத்தரவு பெற்று விட்டார்.

பின்னர், இன்னொரு Executor ஆன பிரநாத் என்பவர் அதே உயிலை, புரபேட் செய்ய வேண்டி, அவரும் மாவட்ட கோர்ட்டுக்கு 17.3.1897-ல் (முதல் புரபேட் பெற்ற பின்னர் ஒரு வருடம் கழித்து) மனுச் செய்கிறார்.

மாவட்ட நீதிபதி, இந்த மனுவை நிராகரிக்கிறார். இந்த உயிலில் Executors ஆக உள்ளவர் ஏற்கனவே புரபேட் உத்திரவு பெற்று விட்டார் என்றும், எனவே அந்த உயிலை மறுபடியும் புரபேட் செய்ய முடியாது என்றும் கூறி மறுத்து விட்டார்.

இதை எதிர்த்து, பிரநாத், அலகாபாத் ஐகோர்ட்டில் 1898-ல் அப்பீல் செய்கிறார்.

ஐகோர்ட் தனது தீர்ப்பில்: புரபேட் சட்டப்படி, பல Executors நியமிக்கப்பட்ட உயிலை, அந்த அந்த Executor தனித்தனியாக புரபேட் உத்தரவு பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி உள்ளது. எல்லோரும் கூட்டாகவும் புரபேட் ஆர்டர் பெறலாம், அல்லது அவரவர் தனித்தனியாகவும் பெறலாம் என்று அந்தச் சட்டத்தில் உள்ளது. எனவே இரண்டாவது Executor புரபேட் மனுவை ஏற்றுக் கொள்வதில் எந்தச் சட்ட சிக்கலும் இல்லை என்று தீர்ப்பு கூறி விட்டது.

**


No comments:

Post a Comment