Friday, August 7, 2020

பொதுக் கோயில்

Public Temple:

1957-ல் நடந்த வழக்கு: செங்கல்பட்டு மாவட்டம், வடமதுரை கிராமத்தில் உள்ள ஶ்ரீசுப்பிரமணியசாமி கோயில் உள்ளது. இது 1927-ம் வருடச் சென்னை சட்டம் II of 1927 (Madras Act II of 1927) சொல்லியுள்ளபடி “கோயில்” என்ற விளக்கத்துக்குள் வருமா என்பது கேள்வி. Temple means a place by whatever designation known, used as a place of public religious worship and dedicated to, or for the benefit of, or used as of right by, the Hindu community or any section thereof, as a place of religious worship என்று விளக்கி உள்ளது. The Hindu Religious Endowment Board, Madras இந்த கோயில் பொதுக்கோயில் என்று சொல்கிறது. அதை எதிர்த்து, அதன் hereditary trustee போர்டுக்கு மனுக் கொடுக்கிறார். அதில் இது தனியார் கோயில் என்கிறார். வழக்கு மாவட்டக் கோர்ட்டுக்கு போகிறது. அங்கு இது பொதுக் கோயில்தான் என்று தீர்ப்பு வருகிறது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டுக்கு அப்பீல் வருகிறார். இங்கு இது பொதுக்கோயில் என்று சொல்வதற்குறிய ஏதும் இங்கு இல்லை என்று தர்மகர்த்தாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் வருகிறது. தற்போதைய தர்மகர்த்தாவின் தாய் மாமா ராஜூ முதலியாருக்கு வடமதுரையில் நிலம் இருந்தது. அவர் சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டார். அங்கு மிகுந்த பணம் சம்பாதித்து விட்டார். ஆனால் அவருக்கு மனைவியோ குழந்தைகளோ இல்லை. தற்போதைய தர்மகர்த்தாதான் (சகோதரி மகன்) ஒரே உறவு. எனவே வடமதுரையில் 1919-ல் ஒரு தர்ம சத்திரம் கட்டுகிறார். அதற்குறிய தர்ம காரியங்களுக்காக தேவைப்படும் செலவுகளுக்கு இந்த வடமதுரை நிலத்தை சத்திரத்துக்கு எழுதி வைக்கிறார். பின்னர் அதில் ஶ்ரீசுப்பரிமணியசாமி, ஶ்ரீவள்ளி, ஶ்ரீதேவசேனா சிலைகளை நிறுவுகிறார். அதன் சிலசாசனம் (கல்வெட்டு) அங்கு வைக்கப்படுகிறது. அதில் “இங்கு நான் ஶ்ரீசுப்பிரமணியசாமிக்கு கோயில் கட்டி உள்ளேன். ஶ்ரீவள்ளி, ஶ்ரீதேவசேனா சிலைகளும் வைத்துள்ளேன். கும்பாபிஷேகமும் செய்துள்ளேன். அதற்குறிய அன்றாட பூசை செலவுகளுக்கும் பஞ்சபர்வ உத்சவம் போன்றவற்றுக்கு செட்டில்மெண்ட் பத்திரத்தை 1937-ல் எழுதி வைத்துள்ளேன். இதன்படி, என் காலத்துக்குப் பின்னர், யாரும் நடந்து வரத் தவறினால், அவர்கள் பெனாரஸ் காராம் பசுவைக் கொன்ற பாவத்துக்கு ஆளாவார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தில் “வடமதுரையில் உள்ள எனக்குச் சொந்தமான 27 செண்ட் நிலத்தில் ஶ்ரீசுப்பிரமணியசாமிக்கு கோயிலும், வாகன மண்டபமும், குருக்கள் வசிக்க வீடும், சமையல்கட்டும் கட்டி உள்ளேன். மேலும் உற்சவ விக்கரங்களும் (வீதி உலா செல்வதற்கு) அவைகளுக்கு உரிய வாகனம், நகைகள் செய்து வைத்துள்ளேன். காலை, அந்திகாலப் பூசைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளேன். பின்பகுதியில் நந்தவனம் (பூந்தோட்டம்) ஏற்படுத்தி உள்ளேன். அந்த மலர்களைக் கொண்டு சாமிகளுக்கு பூசை செய்ய வேண்டியது. இவைகள் அனைத்தும் சூரியன் சந்திரன் உள்ளவரை எந்த இடையூறும் இல்லாமல் நடந்து வர வேண்டியது. இந்த நிலத்தைக் கோயிலுக்கே எண்டோவ்மெண்ட்  செய்துள்ளேன். அதை என் காலத்துக்குப் பின்னர் நிர்வகிக்க, எனது மைத்துனர் மகன் கல்யாண சுந்தர முதலியாரை தர்கர்த்தா டிரஸ்டியாக நியமித்துள்ளேன். அவருக்குத் துணையாக மேலும் ஐந்து பேரை (வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை) நியமித்துள்ளேன். வருடா வருடம் மார்ச்  மாத முடிவில் கணக்கு வழக்குப் பார்த்து நிர்வகிக்க வேண்டியது. என் மைத்துனர் மகனின் காலத்துக்குப் பின்னர் அவரின் நேர் வாரிசுள் தர்மகர்த்தாவாக இருந்து வர வேண்டியது. ஐந்து மெம்பர்களில் யாராவது இறந்துவிட்டால், விலக நேரிட்டால், வேறு ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டியது. என் மைத்துனர் மகன் அல்லது அவரின் நேர் வாரிசுகள், தர்மகர்த்தா வேலைகளைச் செய்யத் தவறினால், ஐவரில் ஒருவரை தர்ம கர்த்தாவாக நியமித்துக் கொள்ள வேண்டியது. தர்ம கர்தாவாக இருப்பவர், இந்த ஊர் வழக்கப்படி கோயில் நிகழ்வுகளில் “முதல் மரியாதை” பெறத் தகுதி உள்ளவர்” என்று எழுதப் பட்டுள்ளது. எனவே முழுக்க முழுக்க  அவரின் பணத்தைக் கொண்டே எல்லாம் செய்துள்ளார். குருக்களுக்குச் சம்பளமும் சொத்தின் வருமானத்தில் இருந்தே கொடுக்கப் படுகிறது. ஆனாலும், ஸ்வசஸ்தம்பம்  (Dwajasthambam), பலிபீடம் இவைகள் அங்கு உள்ளன என்று தற்போதைய தர்மகர்த்தா ஒப்புக் கொண்டுள்ளார். கர்பகிரகம், மண்டபம் உள்ளது. கந்தசஷ்டி, ஆருத்ரா, விநாயசதூர்த்தி போன்ற பண்டிகை காலங்களில் வீதி உலா எடுத்துச் செல்லப்படுகிறது. அப்போது யாரேனும் பக்தர்கள் தீப ஆராதனை செய்ய விரும்பினால், அங்கு நின்று அதை ஏற்றுக் கொள்ளப்ப படுகிறது. குருக்களின் கூற்றுப்படி, இது தனியார் கோயில் என்றும் இங்கு “ஆத்மார்த்த” பூசை மட்டும், அதாவது இந்தக் கோயிலை உருவாக்கியவரின் நன்மைக்காக மட்டும் பூசை நடத்தப்படும் என்று சொல்கிறார். கிராமத்து மக்கள் யாரும் வழிபட  வரமாட்டார்கள் என்றும், அர்ச்சனை, உற்சவம் நடத்த மாட்டார்கள் என்றும் சொல்கிறார். தர்மகர்த்தாவும்  அவரின் வாரிசுகள் மட்டுமே எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் சொல்கிறார். அதே ஊரில் உள்ள மற்றொரு கோயிலின் டிரஸ்டியாக இருப்பவர், “நான் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இருந்தாலும் நான் இந்தக் கோயிலுக்குப் போவதில்லை. ஆனாலும் ஊர் மக்கள் வீதிஉலாவில் தீபாராதனை வழிபாடு செய்வார்கள்” என்று கூறியுள்ளார். ஆனால், இந்து அறநிலையத் துறை அதிகாரி “இது ஒரு பொதுக்கோயில்தான் என்றும், பொதுமக்கள் தினமும் வந்து வழிபடுகிறார்கள்” என்று சொல்கிறார். இது ஒரு பொதுக்கோயில் என்பதற்கு, பொதுமக்கள் வந்து வழிபட வேண்டும், மற்றும் இந்து சமுதாயத்துக்கு வழிபாட்டுக்காக ஒப்படைக்கப் பட்டிருக்க  வேண்டும். மேலே சொல்லி உள்ளவற்றை வைத்துப் பார்க்கும்போது இது பொதுக்கோயில் என்றே முடிவு செய்கிறது.  The temple like the existence of Dwajasthambam and Bali-peedam and Utsava Vigrahams, the carrying of the deity in procession and accepting Deepa-ardana from the members of the public public, it appears to be conclusively established that the institution in question is a place of public religious worship dedicated to, or for the benefit of, the Hindu community in the village as a place of relgious worship. Therefore the temple was not a private temple, but a public temple.

**

No comments:

Post a Comment