Friday, August 7, 2020

பண்டார சந்நிதி

1917-ல் நடந்த வழக்கு: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் ஆதீனம் என்ற மடம் மிகத் தொன்மையான செல்வச் செழிப்புள்ள ஆதீனம். இதனால் இங்கு அடிக்கடி வழக்குகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம். இந்த மடத்துக்கு மடாதிபதியாக இருப்பவரை “பண்டாரசந்நிதி” என்பர். அப்போது சிவஞானம் என்பவர் இந்த மடத்தின் பண்டார சந்நிதியாக இருந்தார். இவர் இருந்தபோது, அவரின் அடுத்த வாரிசாக (இளைய பண்டார சந்நிதியாக) மாணிக்கவாசகம் என்பவரை 1903-ல் ஒரு பத்திரம் மூலம் நியமித்து இருந்தார். பின்னர் அதை ரத்து செய்து விட்டார். அதை எதிர்த்து மாணிக்கவாசகம் கும்பகோணம் சிவில் கோர்ட்டில் 1906-ல் வழக்குப் போட்டிருந்தார்.  வழக்கு போட்ட சிறது காலத்தில் பெரிய பண்டார சந்நிதியான சிவஞானம் இறந்து விட்டார். எனவே திருவம்பல தேசிகர் என்பவர், இறந்த பெரிய பண்டார சந்நிதியான சிவஞானத்தின் அடுத்த வாரிசு என்று இந்த வழக்கை இறந்தவருக்காக தொடர்ந்து நடத்த வருகிறார். சிவஞான பண்டார சந்நிதி அவரின் மரணப்படுக்கையில் ஒரு உயிலை எழுதி வைத்துள்ளதாகவும், அதன்படி திருவம்பல தேசிகரை அடுத்த வாரிசாக மடத்தின் பண்டார சந்நிதியாக நியமித்துள்ளதாகச் சொல்கிறார். 

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே மாணிக்கவாசகம் இறந்து விடுகிறார். மாணிக்கவாசகமும் அவரின் வாரிசு என்று ஒருவரை நியமித்து விட்டுச் செல்கிறார். இவர்களுக்குள் வழக்கு நடக்கிறது. கீழ்கோர்ட் தீர்ப்பின்படி, மாணிக்கவாசகத்தை பெரிய பண்டார சந்நிதி நீக்கியது செல்லாது என்று அவருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கொடுக்கிறது. மேலும் திருவம்பல தேசிகர் குறிப்பிடும் உயிலை நிரூபிக்கவில்லை என்றும் சொல்லி விடுகிறது. இதற்கிடையில் சோமசுந்தரம் என்பவர் மடத்தின் சொத்துக்களை நிர்வகித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருபனந்தாள் மடத்தினை நிர்வகித்து வந்தவர். இறந்த சிவஞான பண்டார சந்நிதி வயதானவர், ஞாபக சக்தி குறைவானவர். நிறைய கடன் வாங்கி இருந்தார். எனவே இவர் அருகில் உள்ளவர்களின் பேச்சைக் கேட்கும் கட்டாயத்தில் இருந்தார். ஏற்கனவே பிரதிவாதி கெட்ட நடத்தை உள்ளவர் என்று வழக்குப் போட்டிருக்கிறார். அவர் இவர்மீது மானநஷ்ட வழக்குப் போட்டார். பின்னர் இவரும் சமரசம் செய்து கொண்டுள்ளார்கள். எனவே மாணிக்கவாசகத்தை நீக்க வேண்டிய  அவசியம் ஏதும் இல்லாமல்  இருந்தது. எனவே மாணிக்கவாசகத்தை நீக்கியது செல்லாது என்று தீர்ப்பு உள்ளது. பெரிய பண்டார சந்நிதி சிவஞானம் வேறு இளைய பண்டார சந்நிதியை நியமிக்கக் கூடாது என்று தடையும் இருந்தது. இப்படி இருக்கையில், சிவஞானம் தன் பதவியை விட்டு விலகி பனாரஸ் போகிறார். அப்போது பிரதிவாதியின் எதிரியான சோமசுந்தரத்தின் தயவுடன் திருபனந்தாள் மடத்தில் தங்கிவருகிறார். அங்கிருந்து இந்த தர்மபுரம் ஆதீனத்தின் சொத்தினை மீட்க வழக்குப் போடுகிறார்.  இப்படியாக சிவஞானம் பல குழப்பங்களைச் செய்துள்ளார். Under the Hindu Law the property of a hermit or an ascetic is inherited by the preceptor and after him by his disciple (Mitakshara, Chapter II, Sec.8). In the case of Mahants or Heads of Mutt, the same rule would apply. It is now well establsihed that the rule of successin among the Matathhpathis must be deduced from the usage of the mutt. பொதுவாக ஒரு மடத்தின் அடுத்த வாரிசை, முன் மடாதிபதியே வாய்மொழியாகவோ அல்லது உயில் மூலமோ நியமிக்கலாம் என்று 1893-ல் ஒரு வழக்கில் தீர்ப்பாகச் சொல்லப் பட்டுள்ளது. எனவே ஏற்கனவே வாரிசாக நியமித்தவரை தகுந்த காரணம் இன்றி நீக்கிவிட முடியாது. முன் மடாதிபதி, பூசை நடத்தி, இளைய  மடாதிபதிக்கு அபிஷேகம் செய்து நியமிக்க வேண்டும். அப்படிச் செய்துவிட்டால், இளையவரை Sadhaka Acharya, or Co-adjustor என்பர். 

**

No comments:

Post a Comment