மருமக்கதாயம் வழக்கு:
கேரளாவில் மலபார் பகுதியில் இந்த மருமக்கதாயம் சட்ட முறை பழக்கத்தில் உள்ளது. இது இந்து சாஸ்திர சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், இது அங்கீகரிக்கப்பட்ட இந்த சாஸ்திர சட்டமாக ஏற்கப் படவில்லை. இருந்தபோதிலும், இது அங்குள்ள நாயர் மக்களிடையே வெகுகாலம் பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. நாயர்கள் என்பவர்கள் இந்துக்கள்தான். அவர்களிடம் வாழ்க்கைமுறை, வழிபாட்டுமுறை இவைகள் அனைத்துமே இந்து சாஸ்திர சட்டத்தின் அடிப்படையிலேயே நடக்கும்.
இந்த மலபார் பகுதி, முன்னர், பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில், மதராஸ் மாகாணம் என்னும் மதாரஸ் பிரசிடென்சி (Madras Presidency) ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.
Hindu Law is not a lex loci
இந்து சட்டத்தைப்பற்றி, Mayne என்ற சட்ட ஆசிரியர் ஒரு விரிவான புத்தகம் எழுதி உள்ளார்.
அதில் இவ்வாறு சொல்கிறார்:
“In India, there is no lex loci, every person being governed by the law of his personal status.”
அதாவது Lex Loci = Law of the Local என்று சாதாரணப் பொருளில் சொல்லலாம். அப்படி என்றால், இந்தியாவில் இருப்பவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியை வைத்து சட்டம் (திருமணச் சட்டம், சொத்து வாரிசு உரிமைச் சட்டம் போன்றவை) அமைவதில்லை. மாறாக, எந்த மதத்தை பின்பற்றுகிறார்களோ, அந்தச் சட்டமே அவர்களின் சட்டமாக அமைகிறது என்று Mayne சொல்கிறார்.
மேலும் அவர் சொல்கிறார், இந்தியாவில் எந்த மாகாணத்தில் அவர் வசிக்கிறாரோ அங்குள்ள இந்து சாஸ்திர சட்டம் நடைமுறையில் இருக்கும் என்கிறார்.
அவரின் கூற்றுப்படி: “This law is not merely a local law. It becomes the personal law and a part of the status of every family law which is governed by it.”
1928-ல் நடந்த ஒரு வழக்கில் மதராஸ் ஐகோர்ட் தனது தீர்ப்பில் இப்படிச் சொல்லி உள்ளது.
Morarji v. Administrative General of Madras, (1928) 55 MLJ 478 = ILR 52 Mad 160.
“பொதுவாக ஒரு பிரிட்டீஸ் இந்தியன், தான் வாழப் போகும் பகுதியை மாற்றிக் கொள்ள முடியும். அந்த புதிய பகுதியில் உள்ள சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் இது ஒரு இந்துவுக்குப் பொருந்தாது. அவன் எங்கு சென்றாலும், இந்துவாகவே இருப்பான்.
இதை இப்படிச் சொல்வார்கள்: “Under that system of law, a Hindu carries along with him, his personal law, wherever he goes and he cannot get rid of that law.”
மருமக்க தாயம் சட்டம்:
மருமக்க தாயம் பழக்க வழக்கத்தை, சென்னை மாகாணம் 1932-ல் ஒரு சட்டமாகக் கொண்டு வந்தது. அதன் பெயர் The Madras Marumakkathayam Act of 1932.
அதில், “மருமக்க தாயி” என்றால் என்ன என்று சொல்லி உள்ளது. அதன்படி, அந்த சட்டப்படி வாரிசு உரிமை பெறுபவர் மருமக்கதாயி என்று அழைக்கப்படுவர் என்று விளக்கி உள்ளது.
Under that Act a “Marumakkathayee” is defined as “a person governed by the Marumakkathayam Law of Inheritance”.
மேலும், “மருமக்கதாயம்” என்றால் என்ன என்றும் சொல்லி உள்ளது. அதன்படி, “இந்த முறைப்படி, வாரிசு உரிமையானது, பெண்களின் மூதாதையர் வழிமுறையில் வரும்” என்றும், ஆனால் அது அலியசந்தானா வாரிசு முறை இல்லை என்றும் தெளிவு படுத்தி உள்ளது.
“Under that Act, a “Marumakkathayam”is defined as “the system of inheritance in which descent is traced in the female line but does not include the system of inheritance known as the Aliyasantana.”
1939-ல் இதைப் பற்றிய ஒரு வித்தியாசமான வழக்கு:
இதைப்பற்றி இங்கு ஒரு பிரச்சனை உள்ள வழக்கு அப்போது சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. P.S.Venkataraman v. Srimathi A.C.Janaki, (1939) 1 MLJ 520.
இந்த வழக்கில், வெங்கடராமன் என்பவர் ஒரு இந்து பிராமின். ஜானகி என்ற பெண் கேரளா மலபாரைச் சேர்ந்த “நாயர்” என்னும் தரவாடு சாதியைச் சேர்ந்தவர். அதுவும் அப்போது கேரளாவில் மலபார் பகுதியில் ஒரு மதிப்புமிக்க சாதி. வெங்கடராமன், ஒரு பிலிம் கம்பெனியில் மேனேஜிங் டைரக்டராக இருக்கிறார். அங்கு இந்த ஜானகி என்ற நாயர் பெண்ணும் வேலை செய்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னைக்கு பக்கத்தில் உள்ள திருநீர்மலையில் உள்ள கோயிலுக்குச் சென்று அங்கு இந்து திருமண முறைப்படி திருமணம் செய்து கொள்கின்றனர். இது நடந்தது 21 டிசம்பர் 1934-ல். அதிலிருந்து 4 பிப்ரவரி 1935 வரை (சுமார் ஒன்றரை மாதங்கள்) அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். பின்னர் அந்த பெண், கேரளாவுக்கு செல்கிறார். அங்கு போனபின்னர், சென்னைக்கு திரும்பி வர மறுக்கிறார். எனவே கணவன் வெங்கடராமன் ஒரு வழக்குப் போட்டு, மனைவி தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்று கேட்கிறார். (For Restitution of Conjugal Rights).
ஆனால், மனைவியோ, தான், அப்படி ஒரு திருமணமே செய்து கொள்ளவே இல்லை என்றும், அவருடன் சேர்ந்து கணவன்-மனைவியாகவும் வாழவில்லை என்றும் மறுக்கிறார். அவள், கேரளாவுக்கு சென்றவுடன், இந்த பிலிம் கம்பெனி வேலையை ராஜினாமா செய்து விட்டார். மேலும், அப்படி ஒரு திருமணம் நடந்திருந்தது என்று வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும், அது சட்டப்படி செல்லாது என்றும், இந்த சென்னை சிவில் கோர்ட் அதை விசாரிக்கும் அதிகாரமும் இல்லை என்றும் சொல்லி வாதம் செய்கிறார்.
அவளின் சட்ட வாதம் என்னவென்றால்:
“நான் (ஜானகி) ஒரு இந்து. கேரளாவில் வடக்கு மலபார் பகுதியில் உள்ள கோட்டயம் தாலுகாவில் XXX கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்களின் நாயர் சாதி வழக்கப்படி மருமக்கதாயம் சட்டம் தான் செல்லும். (அதாவது திருமணம், சொத்து வாரிசு உரிமை போன்றவற்றுக்கு). எனவே சென்னை மருமக்கதாயம் சட்டம் 1932-ன் படி, வெங்கடராமன் வழக்கில் சொல்லும் திருமணம் செல்லாது என்றும், எனவே வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றும் கேட்கிறார்.
மேலும், “இந்த 1934 டிசம்பர் திருமணத்தின் போது, வெங்கடராமனுக்கு ஏற்கனவே அவருடைய பிராமின் சாதியில் திருமணம் ஆகி, மனைவியும் உயிருடன் இருக்கிறார். அவருடன் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார். எனவே சென்னை மருமக்கதாயம் சட்டம் 1932, பிரிவு 5-ன்படி, மருமக்கதாயம் பழக்கத்தைக் கொண்டுள்ள ஜானகி, ஏற்கனவே திருமணம் ஆகி உள்ள வெங்கடராமனை திருமணம் செய்தால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாத திருமணம் ஆகிவிடும்” என்றும் வாதம் செய்கிறார் அந்தப் பெண்ணின் வக்கீல்.
ஆனால், வெங்கடராமனின் பதில் வாதம் என்னவென்றால்:
“நான் ஏற்கனவே திருமணம் ஆனவன்தான். நான் அந்த மனைவியுடன் தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும், இந்த ஜானகியை, நான் இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டேன். ஏற்கனவே எனக்கு ஒரு மனைவி இருப்பது, இந்த ஜானகிக்கு நன்றாகவே தெரியும். அந்த விபரம் தெரிந்துதான், அவள் சம்மதப்பட்டு என்னை திருமணம் செய்து கொண்டாள். அந்த திருமணம் சென்னைக்கு அருகே உள்ள திருநீர்மலை கோயிலில் நடந்தது உண்மைதான். அதை நிரூபிக்க என்னிடம் கண்ணியமான சாட்சிகள் உள்ளனர்” என்றும், மேலும், “ஜானகி சொல்வதுபோல, மருமக்கதாயம் சட்டப்படி இந்த திருமணம் செல்லாது என்பது தவறு. அவள் மருமக்கதாயம் சட்ட முறையை அல்லது பழக்க வழக்கத்தை பின்பற்றுவள் கிடையாது. அந்த திருமணத்துக்கு முன்னரே, அவள், அவளின் சார்ந்த நாயர் சாதி வழக்கமான, மருமக்கதாய முறையை (திருமணம், சொத்து வாரிசு உரிமை போன்றவை) தள்ளி வைத்துவிட்டுத்தான், என்னைத் திருமணம் செய்து கொண்டாள்”, என்று பதில் வா தம் செய்கிறார்.
விசாரனைக் கோர்ட்டான, சென்னை கீழ்கோர்ட், வெங்கடராமனின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவரின் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது.
சென்னை ஐகோர்ட்டுக்கு வெங்கடராமனின் அப்பீல் வழக்கு:
வழக்கு, அப்பீல் கோர்ட்டான சென்னை ஐகோர்ட்டுக்கு வருகிறது. சென்னை ஐகோர்ட்டில், “ஜானகி, மருமக்கதாயி சட்ட முறையைக் கொண்டவரா? அப்படி என்றால், இந்த திருமணம் செல்லுமா? அல்லது அவள், மருமக்கதாயி சட்ட வழக்கத்தை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டாரா? என்ற சட்டக் கேள்விகளை எழுப்பி விசாரனை செய்தது.
மலபார் பகுதியில் நாயர் சாதியில் இந்த மருமக்கதாயி சட்ட முறை, பழக்க வழக்கத்தில் இருந்து வருகிறது. அது இந்து மத கொள்கைகளில் ஒரு பகுதியா என்று விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. (அதாவது, இது மித்தாட்சரா சட்ட முறையா அல்லது தயாபாக சட்ட முறையா, திராவிடா என்னும் மதராஸ் மித்தாட்சர முறையா, இப்படி உள்ள பல முறைகளில் எந்த முறையில் இந்த மருமக்கதாயி முறை வரும் என்று விசாரிக்க அவசியம் இல்லை).
ஆனால், இந்த மருமக்கதாயி முறை என்பது ஒரு Customary law என்னும் ஒரு பகுதியில் வெகுகாலமாக தொடர்ந்து பின்பற்றும் பழக்க வழக்கம் தான். மேலும், நாயர் சாதியில் உள்ளவர்கள் இந்துக்கள்தான். அதில் சந்தேகமில்லை. இவர்கள் பழைய மதராஸ் பிரசிடென்சி (Madras Presidency) என்னும் பிரிட்டீஸ் ஆண்ட சென்னை மாகாணத்தில் வசிப்பவர்கள். (கேரளாவின் ஒரு பகுதியும் பழைய சென்னை மாகாணத்தில் அப்போது இருந்தது).
Mayne என்ற சட்டவல்லுநர் கூற்றுப்படி, In India, there is no lex loci, every person being governed by the law of his personal status.
அதாவது, இந்தியாவில், அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு என்று தனியாக சட்டம் ஏதும் இருந்ததில்லை. அவர்களுக்கு என்று மதச் சட்டம்தான் இருக்கிறது. இந்துக்கள் எங்கு வசித்தாலும் இந்து சட்டமே செல்லும். அவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாக வசித்தாலும், அப்போது அவர்களுக்கு இந்துச் சட்டமே செல்லும். (இந்து சட்டம் என்பது, திருமணம், சொத்து வாரிசு உரிமை, தத்து எடுப்பது, போன்றவைகள் மட்டும்).
ஆனாலும், இந்த இந்துக்களில் வேறு வேறு School என்னும் கொள்கைகள் உள்ளன.
இந்தியாவின் பெரும்பகுதியில் இந்து மித்தாச்சரா கொள்கையே பின்பற்றப் படுகிறது. (The Hindu Law of Mitakshara School).
பெங்கால் பகுதியில் இந்து தயாபாக முறை பின்பற்றப்படுகிறது. (The Hindu Law of Dayabhaga School).
ஒவ்வொன்றிலும் சிறிய வேறுபாடுகள் மட்டும்தான் உண்டு.
(மித்தாட்சர முறையில், கோபார்சனர்கள் (தந்தை, மகன், பேரன், கொள்ளுப் பேரன்) என்னும் இவர்களுக்குள், தந்தை உயிருடன் இருக்கும்போதே, மகன், பேரன், கொள்ளுப் பேரன், பூர்வீகச் சொத்தில் பங்கு கேட்க முடியும்;
ஆனால், தயாபாக முறையில், தந்தை உயிருடன் இருக்கும்போது, மகன், பேரன் போன்றோர் பங்கு கேட்க முடியாது. தந்தை இறந்த பின்னர்தான் பங்கு பெற முடியும்.
இதை ஒரு வேடிக்கையாக, ஆங்கிலேயே சட்ட வல்லுநர் (Cool Brooke) சொல்கிறார். “மித்தாச்சரா முறையில் உயிருடன் இருக்கும்போது பங்கு கிடைக்கும், ஆனால் தயாபாக முறையில், செத்தால்தான் பங்கு கிடைக்கும்” என்று வேடிக்கையாகச் சொல்லி உள்ளார். ஆனாலும் உண்மை அதுதான்).
இங்கு இந்த வழக்கில், மருமக்கதாயம் சட்ட முறை என்பது ஒரு இந்து முறை. அதைப் பின்பற்றும் மக்கள் மலபார் பகுதியில் உள்ளனர். அவர்கள் வேறு இடத்துக்கு குடி பெயர்ந்து வந்து விட்டால், அந்த மருமக்கதாயி முறை அவர்களுடன் வருமா அல்லது வராதா என்ற கேள்வி உள்ளது.
“இந்துக்கள் எந்த முறையைப் பின்பற்றினாலும், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்தால்தான், அந்த சட்டம் அவர்களுக்குச் செல்லும் என்றும், அவர்கள் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டால், அந்த சட்டம் அவர்களைத் தொடர்ந்து செல்லாது என்று எங்கும் சொல்லவில்லை.
Mayne கூற்றுப்படி, ஒரு இந்து எங்கு சென்றாலும், இந்து சட்டமும் அவனைத் தொடர்ந்தே செல்லும் என்றே சொல்கிறது. இந்தப் பிரச்சனையை வேறு ஒரு வழக்கில் அலசி உள்ளனர்.
அது Morarji v. Administrative General of Madras, (1928) 55 MLJ 478 = ILR 52 Mad 160.
இந்த வழக்கில் அப்போதைய ஐகோர்ட் நீதிபதி, வெங்கடசுப்பாராவ் அவர்கள், இந்து எங்கு சென்றாலும், அவனுக்கு இந்து மதச் சட்டம்தான் செல்லும், அவன் போகும் பகுதியில் உள்ள சட்டத்தை ஏற்க முடியாது என்று சொல்லி உள்ளார்.
“While ordinarily a British Indian subject can change his domicile and acquire a new law along with a new domicile, this right is denied to a Hindu. Under a system of law, a Hindu carries all along with him his personal law wherever he goes and he cannot get rid of that law.
இந்த ஜானகி வழக்கில்: Thus, once it is known that a person is a Nair and belongs to a Malabar tarward, it follows that the personal law by which he is governed is the Marumakkathayam law of Malabar, except in so far as that law has been modified or altered by statute.
இந்த ஜானகி வழக்கில், அவள் மலபார் நாயர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவளுக்கு அவளின் சாதி வழக்கப்படி, மருமக்கதாயம் சட்டமே செல்லும். அவள் எங்கு சென்றாலும், அது அவளைத் தொடர்ந்தே வரும். அவள், மருமக்கதாயம் சட்டத்தை சேர்ந்தவள் என்று ஒப்புக் கொண்டால், அந்த மதராஸ் மருமக்கதாயம் சட்டம் 1932-ன்படி, அவள், ஏற்கனவே திருமணம் ஆன ஒருவனைத் திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டபடி செல்லாத திருமணம் ஆகிவிடும் என்று சொல்லி உள்ளது. (இந்து திருமணச் சட்டத்திலும் இதே சட்ட நிலைதான் உள்ளது).
இந்த சட்ட நிலையை வெங்கடராமனுக்காக ஆஜரான அவரின் வக்கீல் ராஜா ஐயர் ஒப்புக் கொண்டு விட்டார். (அப்போது இவர் சென்னை ஐகோர்ட்டில் பிரபலமான வழக்கறிஞர்). ஆனாலும், மற்றொரு விதமாக அவரின் வாதத்தை வைக்கிறார். அது, “அந்த ஜானகி, திருநீர்மலையில் திருமணம் செய்தபோது, அவளின் சட்டமான மருமக்கதாயம் சட்டத்தையும், பழக்க-வழக்கத்தையும் உதறிவிட்டுத்தான், வெங்கடராமனை திருமணம் செய்து கொண்டாள் என்று வாதம் செய்கிறார். (அதாவது இந்து பெண் அவளின் திருமணத்தின்போது, இந்து மதத்தை விட்டு விட்டு, வேறு மதத்துக்கு மாறி விடுவதுபோல என்று அவரின் வாதம் உள்ளது).
அப்படியும் யோசித்தால், Is a person by a mere declaration can renounce the personal law by which he/she is governed?
அதுபோல, தானே தன்னை மதம் மாறியதாகச் சொல்லிக் கொண்டு ஒரு திருமணத்தை செய்தால் அது சட்டப்படி சரி என்று சொல்வதற்கு, எந்த சட்டமோ, கோர்ட்டின் முன்தீர்ப்புகளோ இல்லை என்பதை இரண்டு பக்க வக்கீல்களுமே ஒத்துக் கொண்டனர்.
Hindu Law-வின் சட்ட வல்லுநர் Mayne அவர்களின் கூற்றுப்படி:
“A man cannot alter the law applicable to himself by a mere declaration that he is not a Hindu. He can only alter his existing status by becoming a member of such a religion as would destroy that status and give him a new one.”
இந்த ஜானகி வழக்கில், அவள் நாயர் சாதியை விட்டு, விலகி விட்டாள். அதன்பின்னர், பிராமின் பையனைத் திருமணம் செய்து கொண்டாள் என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை. அப்படியென்றால், அவள் பிராமினாக மாறி விட்டாளா? சாதி மாற முடியுமா?
1863-ல் நடந்த பிரைவி கவுன்சில் வழக்கான Abraham v. Abraham (1863) 9 MIA 195 என்ற வழக்கில், பிரைவி கவுன்சில் தனது தீர்ப்பில், It does not permit a man to abdjure his class and make a law for himself. என்று சொல்லி உள்ளது.
எனவே, ஜானகி, மலபார் பகுதியில் வசித்தபோது, நாயர் சாதியில் இருந்தார் என்றும், அவர் மதாரஸ் பட்டணத்துக்கு வேலைக்கு வந்தபின்னர் பிராமின் சாதிக்கு மாறிவிட்டார் என்றும் சொல்லும் வாதம் ஏற்புடையது இல்லை. அவள் மருமக்கதாயம் முறையைக் கொண்டவள் என்பதால், அந்த சட்டப்படி, ஏற்கனவே திருமணம் ஆன ஒருவனை, அவள் திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்று சென்னை ஐகோர்ட் தனது தீர்ப்பில் சொல்லி விட்டது.
**
No comments:
Post a Comment