Monday, January 11, 2021

கோர்ட் டிகிரியை பதிவு செய்ய வேண்டியது அவசியமா

 கோர்ட் டிகிரியை பதிவு செய்ய வேண்டியது அவசியமா

 

இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள மண்டபம் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில்ஒரு சமுதாய மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடித்து வந்தார்கள். அங்கு கடலில் உள்ள  ஒரு சிறு நிலப் பகுதியில்  (Foreshore) அப்படி பிடித்த மீன்களை காய வைப்பதும்குவித்து வைப்பதும்கனோ (Canoe) என்னும் சிறு படகையும்பெரும் படகையும் (boatஅங்கு நிறுத்தி வைப்பதும்மீன் பிடி வலைகளை காய வைப்பதும் போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார்கள்.

 

அதை அந்த நிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சேபனை செய்தார்கள். எனவே அதை எதிர்த்து 1920-ல் இராமநாதபுரம் சப் கோர்ட்டில் சிவில் வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில் 1930-ல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு (Compromise Decree ) அதை ஒட்டி கோர்ட் டிகிரி கொடுத்தது. இந்த சமாதான டிகிரியில்அவர்கள் 21 வருடங்களுக்கு தொடர்ந்து மீன் பிடிக்கவும்அந்த நிலத்தை குத்தகையாக வைத்துக் கொள்ளவும்அதற்காக வருடம் ரூ.7500 கொடுக்க வேண்டும் என்றும், 21 வருட முடிவில் அந்த கடலில் உள்ள நிலப் பகுதியை (Foreshore) திரும்ப ஒப்படைத்து விட வேண்டும் என்றும், முடிவு செய்து அதை ஒட்டி கோர்ட் சமாதான டிகிரியாக தீர்ப்புக் கொடுத்தது. 

 

இந்த வழக்கில் அவர்கள் கேட்டது அந்த நிலத்தை உபயோகப்படுத்த உரிமை கோரினர். ஆனால் சமாதான டிகிரியில்வழக்குக்குச் சம்பந்தமில்லாமல்அந்த நிலப்பகுதியை குத்தகை உரிமை கேட்டுஅதற்கு ஒப்புக் கொண்டுஅந்த டிகிரியை வாங்கி உள்ளார்கள்.

 

பின்னர் சில ஆண்டுகள் கழித்துதொடர்ந்து அந்த ஒப்புக்கொண்ட குத்தகைத் தொகையைக் கொடுக்கவில்லை என்பதால்அவர்கள் மீது சமாதான கோர்ட் டிகிரியை வைத்து வழக்குப் போட்டார்கள். ஆனால்அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள்இந்த கோர்ட் சமாதான டிகிரியை (தீர்ப்பை) பத்திரமாக பதிவு செய்யாததால் அதைக் கொண்டு வழக்குப் போட முடியாது என்று வாதம் செய்தார்கள். 

 

சொத்துரிமைச் சட்டம் 1882

பொதுவாக சொத்துக்களை விற்பனைமற்றும் பரிமாற்றம் செய்யும் போதுஅதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சொத்துரிமைச் சட்டம் 1882-ல் பிரிவு 17(1)-ல் சொல்லியுள்ளது.

அதன்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் எவை என்று சொத்துரிமைச் சட்டம் பிரிவு 17(1)-ல் சொல்லியுள்ளது:

1.     Sec.17(1)(a) சொத்தின் தானப் பத்திரம். (Gift deed)

2.     Sec.17(1)(b) சொத்தின் உரிமைகளை மாற்றும் பத்திரம் (கிரயம்அடமானம்போன்றவைகள்). (Sale deed, Mortgage deed etc)

3.     Sec.17(1)(c) சொத்தின் உரிமைகளை மாற்றிக் கொடுத்த பத்திரத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை பெறும் போது எழுதிக் கொள்ளும் பத்திரம். (Receipt of money acknowledged in respect of immovable property).

4.     Sec.17(1)(d) சொத்தின் குத்தகைப் பத்திரம். (Lease deeds).

5.     Sec.17(1)(e) சொத்தின் பேரில் வாங்கிய டிகிரியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் அசைமெண்ட் பத்திரம் (Assignment deed of Court decree regarding immovable property).

 

மேலும்மேற்சொன்னவற்றுக்கு விதிவிலக்காக எந்த எந்த பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று சொத்துரிமைச் சட்டம் பிரிவு 17(2)-ல் சொல்லியுள்ளது. அவை:

 

அதில் எல்லாக் கோர்ட் டிகிரிகைளையும் (சொத்து சம்மந்தபட்ட டிகிரி உட்பட) கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி உள்ளது. 

 

ஆனாலும் அதிலும் ஒரு விதிவிலக்காகஅந்த வழக்கில் சம்பந்தம் இல்லாத சொத்தைப் பற்றி ஒரு டிகிரியை கோர்ட் கொடுத்தாலும்அல்லது பார்ட்டிகளின் வழக்குக்கு சம்பந்தம் இல்லாத சொத்தைப் பற்றி ஒரு டிகிரியை (சமாதான டிகிரி உட்பட) பெற்றிருந்தால்அப்படிப்பட்ட டிகிரியை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று விளக்கியுள்ளது.

 

வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்தின் டிகிரி – பதிவு அவசியம் இல்லை:

அதாவதுவழக்கில் சம்மந்தபட்ட சொத்தாக இருந்தால்அப்படிப்பட்ட டிகிரியை (சமாதான டிகிரி உட்பட) பத்திரமாக பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பிரிவு 17(2)-ல் சொல்லியுள்ளது.

 

வழக்கில் சம்பந்தம் இல்லாத சொத்தின் டிகிரி – பதிவு அவசியம்:

 

ஆனால்வழக்கில் சம்பந்தமில்லாத ஒரு சொத்தைஅந்த வழக்கில் ஒரு டிகிரியாக (சமாதான டிகிரி உட்பட) பெற்றிருந்தால்அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெளிவு படுத்தியுள்ளது. 

 

எனவே இந்த வழக்கில்மீனவர்கள் பெற்ற சமாதான டிகிரி என்பது வழக்குச் சொத்து (கடலுக்குள் இருக்கும் ஒரு நிலப்பகுதி -Foreshore) பற்றியே உள்ளது. எனவே அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று வழக்குப் போட்டவர்களின் வாதம்.

 

ஆனால்இந்த விதிவிலக்கு என்பதுபிரிவு 17(1)(b) & 17(1)(c) வகை சொத்து மாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்லி உள்ளது. அப்படிப் பார்த்தால்குத்தகை உரிமை (Lease) என்பது பிரிவு 17(1)(d)-ல்வருகிறது. அதற்கு இந்த விதிவிலக்குப் பொருந்தாது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த சொத்து மாற்றுச் சட்டம் 1882-ஐ, 1929-ல் திருத்தம் செய்து திருத்தல் சட்டம் கொண்டு வந்தார்கள். அதன்படியும்இந்த பிரிவு 17(1)(d)- (Lease) அந்த விதிவிலக்குக்குள் கொண்டு வரவில்லை.

 

எனவேமுடிவாக:

வழக்கில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து டிகிரி வாங்கி இருந்தால், (சமாதான டிகிரி உட்பட)அதை பத்திரமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெள்ளத் தெளிவாகிறது.

 

ஆனால்அந்த வழக்கில் சம்மந்தமில்லாத சொத்தைப் பொறுத்து அந்த வழக்கில் ஒரு டிகிரி வாங்கி இருந்தால், (சமாதான டிகிரி உட்பட)அதை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று விதிவிலக்கில் சொல்லி உள்ளது.

 

ஆனாலும்அப்படி வழக்குக்கு சம்பந்தமில்லாத சொத்து என்பது பிரிவு 17(b) & 17(c) க்கு மட்டுமே பொருந்தும்குத்தகை சம்மந்தப்பட்ட டிகிரி வழக்கின் சொத்துக்கு சம்மந்தப்படாத சொத்தாக இருந்தாலும்அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே சட்டம் சொல்கிறது. 

 

பிரைவி கவுன்சில் வழக்கான Hemanta Kumari Debi vs Midnapore Zamindari Co, AIR 1919 PC 79 என்ற வழக்கில் தீர்ப்பாகபிரிவு 17(1)(b) & (c) இவைகளுக்கு மட்டுமே என்று சொல்லியுள்ளதால்குத்தகை என்பது இதில் வராது என்பதால்அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே தீர்ப்பு கூறியுள்ளது.

 

A lease is, of course, a non-testamentary instrument which operates to create a right in immovable property; but inasmuch as leases are dealt with separately in a later clause the rules of construction of statutes preclude the respondent calling in aid Clause (b).

 

எனவே இந்த வழக்கில் அந்த சமாதான டிகிரிகுத்தகை சம்மந்தப்பட்டு இருப்பதால்அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தீர்ப்புச் சொல்லியுள்ளது.

 

E.S.Kasim Marakkayar and others vs P.R.M.K.Muhammad Abdul Rahiman, dated 25 January 1944, AIR 1944 Mad 273.

**

 

 

No comments:

Post a Comment