Sunday, January 10, 2021

வக்ப் பொதுக் கொடை எது

  

வக்ப் பொதுக் கொடை எது

 

மிர்சா முகமத் அலி நமாசி (ஷியா முகமதிய பிரிவைச் சேர்ந்தவர்) என்பவர் 1930-ல் தனது சொத்துக்களைப் பொறுத்து ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைக்கிறார். அதில் கீழ்கண்ட தானதருமங்களைச் செய்யும்படி சொல்லியுள்ளார்.

1)      வசதியில்லாத தனது உறவினர்களுக்கு உதவவும், (30%)

2)     மொகரம் பண்டிகைமற்றும் ஷியா முஸ்லீம்களின் மற்ற பண்டிகைகளைக் கொண்டாடவும், (வருமானத்தில் 10%).

3)     வசதியில்லாத ஷியா முகமதியர்களின் திருமணத்தை நடத்தவும்வசதியில்லாத முகமதியர்களின் இறப்புச் செலவுகளைச் செய்யவும்

4)    செய்யது என்ற முஸ்லீம் சமுதாயத்துக்கு வேண்டிய நன்மைகளைச் செய்யவும்(20% மேற்கண்ட இரண்டுக்கும் சேர்த்து).

5)     ஷியா பிரிவைச் சேர்ந்த முகமதியர்களின் பண்டிகைகளை கொண்டாடவும்அதை ஒட்டிய தான தர்மங்களைச் செய்யவும்அந்த செட்டில்மெண்டில் சொல்லியுள்ளார்.

 

இந்த செட்டில்மெண்டை வக்ப் என்னும் தர்மமாக எழுதி வைத்துள்ளார். அதற்கு முத்தாவலி என்ற நிர்வாகியை நியமித்துள்ளார். அந்த முத்தாவலிஇந்த தர்மங்களை செய்யவும்இதில் குறிப்பிட்டுள்ள சதவிகிதத்தை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள அதிகாரமும் கொடுத்துள்ளார். 

 

மற்றவைகளை தருமம் என்று ஏற்கலாம் என்றும்ஆனால்தனது வசதியில்லாத உறவினர்களுக்கு உதவி செய்வதை தர்மம் என்று ஏற்க முடியாது என்று வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஏனென்றால் அது பொதுவான ஒரு சமுதாயக் கூட்டம் என்று கருத முடியாது. (பொதுமக்கள்ஒரு சமுதாயம்சாதிஒரு மதம்போன்றவைகளை ஒரு பொதுமக்களாக ஏற்கலாம். ஆனால்தன் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களை ஒரு சமுதாயக் கூட்டம் என்று ஏற்க முடியாது என்றும் அது தனி நபருக்கு செய்யும் உதவி என்பது வருமான வரித்துறையின் வாதம்).

 

Lord Parker of Waddington said: “A trust to be valid must be for the benefit of individuals, which this is certainly not, or must be in that class of gives for the benefit of the public which the Court in this County recognize as charitable in the legal as opposed to the popular sense of that term.  Moreover, if a trustee is given a discretion to apply trust property for purposes some of which are and some are not charitable, the trust is void for uncertainty.”

 

லார்டு பார்க்கரின் கூற்றுப்படி பார்த்தால்இந்த தானத்தில்முத்தாவலி இஷ்டம்போல தானத்தை மாற்ற முடியும் என்றும்அதிலும் குறிப்பாகவக்ப் ஏற்படுத்தியவரின் ஏழை உறவினர்களுக்கு கொடுத்திருப்பதால்அது தர்ம காரியமாக ஏற்க முடியாது என்பதால்இந்த வக்ப் என்னும் பொதுக் கொடையே சட்டப்படி செல்லாது என்று ஆகிறது.

 

இந்தியாவில் இதன் நிலை:

ஏழை உறவினர்களுக்கு கொடுத்த அல்லது எழுதி வைத்த வக்ப் என்னும் பொதுக் கொடையை பொது தர்மம் அல்லது பொது சமுதாயத்துக்கு கொடுத்த கொடையாக (தானமாக) ஏற்பதில்லை. அதிலும் முத்தவாலி அவரின் விருப்பத்துக்கு அந்த தானத்தை மாற்ற முடியும் என்பதால்இந்த கொடை மூலம் பயனடையும் பயனாளிகள் (Beneficiaries are not general public and not specific in nature) நிலையில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதால்இதை ஒரு பொதுக் கொடை அல்லது வக்ப் என்று ஏற்க முடியாது. 

 

எனவே இந்த வழக்கில்இந்த வக்ப் என்னும் பொதுக்கொடை மூலம் செய்யும் தர்மங்களை ஒரு தர்ம காரியமாக ஏற்க முடியாது என்றும்அதை ஒட்டி அதற்கு வரிச் சலுகை கொடுக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் 1944-ல் தீர்ப்பு சொல்லியுள்ளது.

The Commissioner of Income Tax vs Aga Abbas Ali Shirazi on 28-Jan-1944, (1944 -12 ITR 179 Mad).

**

No comments:

Post a Comment