Sunday, May 31, 2015

International Criminal Court


International Criminal Court (ICCC):
Fatou Bensoudaஅனைத்து உலக கிரிமினல் கோர்ட்டின் தலைமை வழக்கறிஞராக, கேம்பியா நாட்டைச் சேர்ந்த வக்கீல் பெண்மணியான பட்டோ பென்சோடா (Fatou Bensouda) என்பவர் 2011ல் இருந்து பணிபுரிந்தற்காக, அவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன; அனைத்துலக சூரிஸ்ட் அவார்டு கிடைத்துள்ளது; டைம் மேகசின் என்னும் புகழ்பெற்ற பத்திரிக்கையானது உலகில் மிக அதிகாரமிக்க 100 பேர்களில் இவரும் ஒருவர் என கணித்துள்ளது; ஆப்ரிக்க கண்டத்திலுள்ள பெண்மணிகளில் தன் பதவியை திறம்பட செய்துவரும் 50 நபர்களில் இவரும் ஒருவர் என சொல்லியுள்ளனர்; இவர் இனைத்துலக கிரிமினல் கோர்ட் விவகாரங்களில் வழக்குகளில் பலவருட அனுபவம் பெற்றவர்; இதுவரை பெண்களுக்கு கிடைத்த உரிமைகளில், அவை கிடைப்பதற்காக பாடுபட்டதில் இவருக்கும் பெரும் பங்குண்டு;

"ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படும்போது, இரண்டுவகையான துன்பங்களுக்கு உள்ளாகிறார்; ஒன்று, கொடுமைக்காரர்களால் அவள் உடல் அளவில் துன்பமும், மற்றொன்று, அவர் சார்ந்த சமுதாய மக்களே அவளை ஒதுக்கி வைப்பதும் என இரண்டு கொடுமைகள்" என்று கூறுகிறார்;

"காலம் மெதுவாகவே சில விஷயங்களே ஏற்றுக் கொள்ளும்; ஆணும் பெண்ணும் சமமாக கருதும் உலகம் ஒருநாள் மலரும்" என்கிறார்.
"Equality for woman is progress for all."

No comments:

Post a Comment