பாகப் பிரிவினை-7
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவர் (ஆணோ,
பெண்ணோ) இறந்துவிட்டால், அவரின் வாரிசுகள் அவரின் சொத்தை கீழ்கண்ட வாரிசுக்
கணக்குப்படி சொத்தைப் பிரித்துக் கொள்வார்கள்.
இறந்தவர் கிறிஸ்தவ ஆணாக இருந்தால், அவரின்
மனைவி, இறந்த கணவனின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு பாகம் பெறுவார். அவரின்
குழந்தைகள் (மகன்களும் மகள்களும்) மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கு சொத்தை எத்தனை
மகன், மகள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் சரிசமமாக பங்கிட்டு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
அதேபோல, இறந்தவர் கிறிஸ்தவ பெண்ணாக
இருந்தால், அவரின் கணவர், இறந்த மனைவியின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக்
கொள்வார். மீதி உள்ள மூன்றில் இரண்டு பங்கு சொத்தை அவளின் குழந்தைகள் சரிசமமாக பகிர்ந்து
கொள்வார்கள்.
இறந்தவருக்கு (கணவனோ, மனைவியோ) பிள்ளைகள்
ஏதும் இல்லையென்றால், அவரின் மனைவி/அல்லது கணவர் மூன்றில் ஒரு பங்கை
எடுத்துக்கொண்டு மீதியை அவரின் தகப்பனாருக்கு கொடுக்க வேண்டும்.
தகப்பனாரும் இல்லையென்றால், அவரின் தாயாரும்
சகோதர சகோதரிகளும் சரிசமமாக எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment