போலிச் சான்றிதழ்?
டெல்லி யூனியன் பிரதேசத்தின் ஆம் ஆத்மி
கட்சி மாநில சட்ட அமைச்சராக இருந்தவர்
டோமர் . இவரின் முழுப்பெயர் 'ஜீதேந்தர் சிங் டோமர்.'
இவர் படித்து வாங்கியதாகச் சொல்லும் படிப்புச்
சான்றிதழ் போலி என்று டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த
சனிக்கிழமையன்று, டெல்லி மாஜிஸ்டிரேட், இவரை மேலும் 2 நாட்களுக்கு
(திங்கட்கிழமைவரை) போலீஸ் காவலில் (கஸ்டடிக்குள்) வைத்து விசாரித்துக் கொள்ள
அனுமதி அளித்துள்ளார்.
அரசு வக்கீல் சொல்கிறார், "பிகாரில் பகல்பூரில்
உள்ள 'தில்கா மஞ்சில் பல்கலைகழத்தின்' ரெக்கார்டுகள்
கிழிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இதில் பல்கலைகழக
அலுவலர்களும் சம்மந்தபட்டிருக்கக்கூடும் என்றும் சந்தேகம் இருப்பதாக சொல்கிறார்.
டோமர் ஏற்கனவே கொடுத்திருந்த பண்டல்கண்ட் பல்கலைகழகத்தின் மைக்ரேஷன் சான்றிதழும்
போலி என்றும் கூறுகிறார்.
ஆர்டிஐ சட்டத்தின்படி கேள்வி கேட்டபோது, தில்கா மஞ்சில்
பல்கலைக்கழகம் 'இது சரியான சான்றிதழ்தான்' என்று கொடுத்த பதிலும் போலி என்று கூறுகிறார் அந்த அரசுவக்கீல். ஆர்டிஐ பதிலே
அந்த பல்கலைக்கழகம் கொடுக்கவில்லையாம்.
எனவே, மந்திரி டோமர் மீது, ஏமாற்றுதல்,
போலிஆவண மோசடி (forgery),கூட்டுசதி (conspiracy) ஆகிய பிரிவில் காவல்துறை
வழக்கு பதிவு செய்துள்ளதாம்.
ஆனால் இவரின் வக்கீல் சொல்வது, 'ஏற்கனவே எல்லா
இடத்துக்கும் சென்று சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இனியும் போலீஸ் கஷ்டடி தேவையில்லை;
உண்மையில் அவரை மிரட்டுவதற்கே போலீஸ் மேலும் அவகாசம் கேட்கிறது.
விசாரனை செய்ய ஒன்றுமில்லை. வேறு யாருடைய தூண்டுதல் பேரிலேதான் காவல்துறை இந்த
குற்றத்தை சுமத்துகிறது.
டோமரை விலக்கிவிட்டுவிட்டு மற்றொரு மந்திரியான
கப்பீல் மிஸ்ராவை சட்ட அமைச்சராக்கி உள்ளது ஆம் ஆத்மி.
டோமரை கைது செய்வதற்கு சற்று முன்னர்தான் டோமருக்கே நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாம். இது தவறு என்கிறார்.
அரசு வக்கீல் சொல்கிறார், 'எல்லா வகையிலும்
சாட்சியம் இருப்பதாலும், போலி சான்றிதழ் என கருதுவதாலும்
அரெஸ்ட் செய்ததாக கூறுகிறார்.'
செசன்ஸ் கோர்ட்டில் இடைக்கால பெயில் கேட்டதற்கு
செசன்ஸ் கோர்ட் மறுத்துவிட்டது. போதிய ஆவணங்கள் இன்னும் இந்த கோர்ட்டுக்கு
வரவில்லை என்று காரணம் சொல்லியுள்ளது.
**
கோர்ட் சொல்கிறது, On this, the court observed that there were
hundreds of records in a university regarding a student -- like admission
register, fee slips, classroom records and teacher records.'
ஒரு மாணவன் படிக்க வேண்டும் என்றால், அவனைப் பற்றி அந்த
பல்கலைக்கழகத்தில் பல்வேறு ரெக்காடுகள் தானாகவே உருவாகி இருக்கும். இதைக் கொண்டே முடிவு
செய்து கொள்ளலாம் என கோர்ட் சொல்கிறது.
**
ஒருவருடைய படிப்பு சான்றிதழை சரிபார்க்க
இந்தியாவில் போதுமான வசதியும் இல்லை; இதனால்தான் போலி சான்றிதழ்கள் உருவாகின்றன. லாயம்
சரியாக பூட்டப்பட்டிருந்தால், குதிரை எங்கும் ஓடிவிடாது.
இதைச் செய்வதில், கல்வி நிறுவனங்களுக்கோ, பல்கலைகழகங்களுககோ, அரசுக்கோ என்ன சிரமம் இருக்கப்
போகிறது. டாக்டர்கள் முதல் வக்கீல்கள் வரை பல போலிகள் உலவும் காலம் இது.
ஓட்டுபவன் சரியாக ஓட்டினால், வண்டி ஒழுங்கான
பாதையில்தானே ஓடும்!
**
No comments:
Post a Comment