மியூச்சுவல் உயில்: Mutual Will
இது ஒரு வித்தியாசமான உயில். உதாரணம் சொல்லித்தான் விளக்க முடியும்;
கணவன் மனைவி இருவரும் தனித்தனியே சொத்து வைத்திருக்கிறார்கள்; இவரும் ஒருவருக்கு
ஒருவர் உயில் எழுதி வைத்துவிட விரும்புகிறார்கள்; அதாவது கணவன் இறந்தால் கணவனின்
சொத்து மனைவிக்கு போய் சேரும்; அதே உயிலில் மனைவியும் உயில் எழுதி, அதன்படி மனைவி
இறந்தால் மனைவியின் சொத்து கணவனுக்குப் போய் சேரும் என்று ஒருவருக்கொருவர் உயில்
எழுதி ஒரே உயில் பத்திரத்தில் எழுதி வைத்துக் கொள்வார்கள்.
இப்படி எழுதிக் கொள்வதில் பிரச்சனை ஒன்றும் இல்லை; ஆனால், அந்த
மியூச்சுவல் உயிலில், அவர்கள் இருவரும் இறந்தபின்னர் இருவரின் சொத்தும் யாருக்குச்
செல்லவேண்டும் என்று எழுதியிருந்தால், அப்போது ஒரு சட்ட சிக்கல் வந்துவிடும்.
உதாரணமாக, கணவன் முதலில் இறக்கிறார். உயில்படி கணவன் சொத்து
மனைவிக்கு வந்துவிடுகிறது. கணவன் சொத்தையும் மனைவி தனது சொத்தையும் சேர்த்து
அனுபவித்து வருகிறார். இப்போது, மனைவி ஏற்கனவே எழுதிவைத்த மியூச்சுவல் உயிலை,
கணவன்தான் இல்லையே என்று ரத்து செய்ய முடியாது. இது கிட்டத்தட்ட ஏமாற்றுவதுபோல்
ஆகும் என்று சட்டம் சொல்கிறது. மனைவி அப்படி அந்த உயிலை ரத்து செய்தால் அந்த ரத்து
செல்லாது.
இரண்டு பேரும் உயிரோடு இருக்கும் காலத்தில் இருவருமே சேர்ந்து அந்த
மியூச்சுவல் உயிலை ரத்து செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment