Circuit Courts
அமெரிக்க சர்க்யூட் கோர்ட்
என்பது ஒரு அப்பீல் கோர்ட் ஆகும். பல மாநிலங்களுக்கு ஒரு சர்க்யூட் கோர்ட் இருக்கும். அமெரிக்காவின் மொத்தமுள்ள 50 மாநிலங்களில்
11 சர்க்யூட் கோர்ட்டுகளும், வாஷிங்டன் டிசியில் ஒரு சர்க்யூட்
கோர்ட்டும் உள்ளன. இது இல்லாமல் பெடரல் சர்க்யூட் கோர்ட்டுகள் மூன்றும் உள்ளன. மாவட்ட
கோர்ட்டின் தீர்ப்புகளின் மீது இந்த சர்க்யூட் கோர்ட்டுகளில் அப்பீல் செய்யலாம். இது
அந்தந்த மாநில சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலே, அமெரிக்க சுப்ரீம்
கோர்ட்டுக்கு கீழே உள்ள அதிகாரம் கொண்டவைகள். இந்த கோர்ட்டுகளில் மொத்தம் 180 நீதிபதிகள்
உள்ளனர். இவர்களை அமெரிக்க காங்கிரஸ் என்னும் மக்கள்சபை மாநிலங்கள் சபை கமிட்டி முடிவு
செய்து பின்னர் அமெரிக்க ஜனாதிபதி அந்த நீதிபதிகளை நியமிப்பார். இவர்களும் அமெரிக்க
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளைப் போலவே ஆயுட்காலம் வரை நீதிபதி பதவியில் இருப்பர். (இந்தியாவில்
வயது உச்சவரம்பு உள்ளது. இந்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 65 வயதில் பதவியிலிருந்து
ஓய்வு பெற்றுவிடுவர்).
பொதுவாக, ஒரு வழக்கு அந்தபகுதியில் உள்ள முதல்நிலை கோர்ட்டில் நடக்கும். அதில் ஜூரி
மற்றும் நீதிபதி இருந்து வழக்கை விசாரிப்பர். நடந்த நிகழ்ச்சிகளை ஜூரிக்கள் விசாரித்து
யார்மீது தவறு உள்ளது என்று சொல்வர். அதை சட்டப்படி முடிவு செய்து நீதிபதி தண்டனையோ
தீர்ப்பையோ வழங்குவார். அதில் தோற்றவர், அதன்மீது மாவட்ட கோர்ட்டில்
அப்பீல் செய்வர். மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இந்த பெடரல் சர்க்யூட் கோர்ட்டில்தான்
மறுஅப்பீல் செய்ய முடியும். (ஆனால் இந்தியாவில், மாவட்ட கோர்ட்டின்
தீர்ப்பை எதிர்த்து வரும் அப்பீல்களை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கும்
அதிகாரம் கொண்டது.) அதனால்தானோ என்னவோ இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் வழக்குகள்
மிக அதிகமாக தேங்கி இருக்கின்றன. மிக அதிக காலமும் எடுத்துக் கொள்கின்றன. இந்திய சுப்ரீம்
கோர்ட்டின் கிளைகளை தென்மாநிலங்களில் ஏதாவது ஒரு நகரில் நிருவ வேண்டும் என்ற கோரிக்கையை
வைக்கின்றனர். அதற்குப் பதிலாக, இந்திய சுப்ரீம் கோர்ட் தன்னுடனை
பணிகளை குறைத்துக் கொண்டு, இந்திய சாசன சட்டம் சம்மந்தப்பட்ட
வழக்குகளை மட்டும் விசாரித்துக் கொண்டால் போதும். அமெரிக்காவில் அப்படித்தான் உள்ளது
எனவே அங்கு ஒன்பது நீதிபதிகளே போதுமானது என்று சுருக்கிக் கொண்டனர். இந்தியாவில் சுப்ரீம்
கோர்ட் கிளைகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அமெரிக்காவைப் போலவே
"சர்க்யூட் கோர்ட்டுகளை நியமித்துவிட்டால், மாநிலங்களில்
உள்ள அப்பீல் வழக்குகளை அந்தந்த சர்க்யூட் கோர்ட்டுகளே பார்த்துக் கொள்ளும்,
வீணாக டில்லிவரை போகத் தேவையில்லை. நீதியைத் தேடி நாம் போகக்கூடாது,
நீதியானது நாம் இருக்கும் இடத்தை தேடிவரவேண்டும் என்று யாரோ சொல்லியுள்ளார்.
ஆனால், இந்தியாவில் அது கனவாகவே இருந்துவிடுமோ! பார்க்கலாம்,
காலம் மாறும்! மாறத்தானே வேண்டும்!!
No comments:
Post a Comment