Friday, July 24, 2015

Contempt of Court

Contempt of Court
கோர்ட் ஒரு உத்தரவை தீர்ப்பாக வழங்கினால், அந்த உத்தரவை அதில் சொல்லியுள்ளபடி மதித்து நடந்து கொள்ள வேண்டும். அதை மதிக்காமல் இருக்க கூடாது. அவ்வாறு மதிக்காமல் நடந்து கொண்டால், மதிக்காதவர் மீது, கோர்ட்டை அவமதித்ததாக "அவமதிப்பு நடவடிக்கை" எடுக்கப்படும். அதில் அவரை சிறை வைப்பதோ, நஷ்டஈடு வசூலிப்பதோ, அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்வதோ ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அதிகாரமானது கோர்ட்டுக்கு இருப்பதால்தான், அந்த கோர்ட் அதிகாரம் மிக்கதாக இருக்கிறது, இருக்க முடியும். கோர்ட்டின் மரியாதையும் இதில்தான் அடங்கியுள்ளது. "Rule of law is the foundation of democratic society and the judiciary is its guardian." 'இந்த சமுதாய மக்களின் சுமுக வாழ்வுக்கு சட்டம் இன்றியமையாதது; அந்த சட்டத்தை பாதுகாப்பது நீதிமன்றங்களின் கடமையாகும்.' இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை யாரும் மீறிவிடாமலும், ஏளனமாக நடத்திவிடாமலும் இருக்கவும், நீதிமன்றங்கள் அவைகளை பாதுகாப்பதில் எந்தவித தடையும் வந்துவிடக் கூடாது. அவ்வாறு யாராவது சட்டத்தை மதிக்காமல் நடந்து கொண்டாலும் இந்த நீதிமன்றம்தான் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நீதியை காப்பாற்றும் பொறுப்பும் உள்ளவை. நீதிமன்றங்கள் எந்த தடையும் இல்லாமல், எந்த மிரட்டல், கட்டாயம் இல்லாமல் தீர்ப்பை வழங்கவும் நீதிபதிகளுக்கும் நீதிமன்றத்திற்கும் சுதந்திரம் வேண்டும். எனவே இவைகளை கருத்தில் கொண்டே, நீதிமன்ற அவமதிப்பு சட்டம் The Contempt of Court Act  கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் இல்லையென்றால் கோர்ட்டின் தீர்ப்புகள் ஒரு கேலி கூத்தாகிவிடும்.
ஒரு சிவில் வழக்கில் கீழ்கண்ட விஷயங்களை கோர்ட் அவமதிப்பு என கருதுவதற்கு காரணமாக இருக்கும்.
1)-ஒரு கோர்ட்டின் உத்தரவு இருக்க வேண்டும்.
2)-ஒரு கோர்ட்டுக்கு, அதிலுள்ள வழக்காடிகள் ஒரு உறுதிமொழியை கொடுத்திருக்க வேண்டும்.
3)-அந்த கோர்ட் உத்தரவை, அந்த வழக்கிலுள்ள வழக்காளிகள் மீறி இருக்க வேண்டும் அல்லது அந்த உறுதிமொழியை மீறி இருக்க வேண்டும்.
4)-அவ்வாறு கோர்ட் உத்தரவை மீறி இருப்பது "வேண்டுமென்றே" மீறியதாக இருக்க வேண்டும்.
5)-சிவில் கோர்ட் அவமதிப்பு வழக்குகளில், கோர்ட் உத்தரவு இருந்து அதை மீறினால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிபதியையும், நீதியையும், நீதிமன்றத்தையும் "தவறான நோக்கத்துடன்" அவமதிப்பாக பேசினால் கிரிமினல் அவமதிப்பாகும்.



No comments:

Post a Comment