Friday, July 24, 2015

"In rem" and "in personam"

In rem and In Personam
இந்த இரண்டும் எதிர் எதிர் அர்த்தத்தில் உள்ளவை. ஒரு பொருளின்மீது ஒருவரின் உரிமையைச் சொல்வது.
In rem - ஒரு பொருளின் மீது எனக்குள்ள உரிமையை உலகத்துக்கு எதிராக நிலைநாட்டிக் கொள்வதை in rem உரிமை அல்லது சொத்தில் (அசையும், அசையாச் சொத்து) எனக்குள்ள முழு உரிமை; (ஒரு பரந்த உலக உரிமை).
In personam – ஒரு பொருளில் எனக்குள்ள தனிப்பட்ட உரிமையை, என் எதிரியான ஒருவருக்கு எதிராக மட்டும் நிலைநாட்டிக் கொள்வது. இந்த உரிமை, அந்த ஒரு எதிரியைத் தவிர மற்றவர்களை (உலகத்தை) கட்டுப்படுத்தாது. (ஒரு சிறு தனிப்பட்ட உரிமை).
ஒருவரை, மற்றவர் அசிங்கமாக திட்டிவிட்டார் என்றால், திட்டு வாங்கியவர், திட்டியவர்மீது மானநஷ்ட வழக்கு தொடுப்பார். அந்த உரிமை திட்டு வாங்கியவரின் தனிப்பட்ட உரிமை அல்லது பெர்சனல் உரிமை அல்லது right in personam. திட்டுவாங்கியரின் மகனோ மகளோ தன் தகப்பனுக்காக அந்த உரிமையை எடுத்த வழக்கு போடமுடியாது. ஒருவேளை அவர் இறந்துவிட்டால் அவருடன் அந்த உரிமையும் இறந்துவிடும். அவரின் வாரிசுகள் அந்த உரிமையை எடுத்து வழக்கை தொடர முடியாது. எனவே தனிப்பட்ட உரிமையை right in personam என லத்தீன் மொழியில் சொல்கிறார்கள்.
மாற்றாக, ஒருவருக்கு ஒரு சொத்தில் உரிமை உள்ளது. அதை மற்றவர் பிரச்சனை செய்கிறார். அந்த சொத்தினை கைவசம் வைத்திருப்பர் நீதிமன்றத்தில் வழக்கு போடுவார். அந்த வழக்கில் அவரின் உரிமை (சொத்து அவருக்கு மட்டுமே முழுஉரிமை என்பது) உறுதி செய்யப்படும். அந்த உரிமையானது உலகம் முழுக்க உள்ள எல்லோருக்கும் தெரிவிக்கும் உரிமையாகும். அவ்வாறு சொன்ன தீர்ப்பு உலகத்தில் உள்ள எல்லோரையும் கட்டுப்படுத்தும். இதை right in rem அல்லது உலகறிய சொன்ன உரிமை எனலாம். அவர் உயிருடன் இல்லையென்றாலும் அவரின் வாரிசுகள் அந்த உரிமையை கேட்கலாம். உரிமை சாகாது.
எனவே right in personam என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை என்றும்; right in rem  என்பது உலகறிய சொன்ன உரிமை அல்லது சொத்தில் (அசையும் அசையா சொத்துக்கள்) அவருக்குள்ள நிரந்தர உரிமையை உலகறிய சொல்வது என்றாகும்.
உதாரணமாக ஒரு வழக்கை எடுத்துக் கொள்வோம்.
ஒரு சொத்தை நாம் அனுபவிப்பதை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தரவு செய்வதாக இருந்தால் அவர்மீது injunction தடை வழக்கு போட்டு அந்த தொந்தரவை தடுக்கலாம். இது தொந்தரவு பக்கத்துவீட்டுக்கார், சொத்தின் உரிமையாளருக்கு எதிராக கொடுத்துவரும் தொந்திரவு. அதாவது அவருக்கு மட்டும் கொடுக்கும் தொந்தரவு, அதாவது அவர் இந்த சொத்தை அனுபவிக்க கொடுக்கு தொந்தரவு. அது, சொத்துக்கு கொடுக்கும் தொந்தரவு இல்லை; எனவே இதில் வழங்கிய கோர்ட் தீர்ப்பு, சொத்துக்காரருக்கு மட்டுமே கொடுத்த தனிமனித உரிமை தீர்ப்பு. எனவே இதை judgment in personam என்பர். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது வழக்கை போட்டவர் இறந்து விட்டால் அத்துடன் வழக்கும் முடிந்துவிடும். பாதிக்கப்பட்டவர் இறந்தால் அவரின் தனிமனிதஉரிமையும் இறக்கும் என்ற தத்துவப்படி இது நடக்கும். இத்துடன், ஒரு சொத்தில் வாடகை வாங்கும் உரிமை அதன் சொந்தக்காரருக்கு உள்ளது. அது அவர்களின் இருவருக்கும் உள்ள தனிப்பட்ட உரிமையாகும். இதையும் right in personam என்பர். இந்த உரிமையை மற்றவர்மீது கேட்க முடியாது. அந்த வாடகைகாரரிடம் மட்டுமே கேட்கமுடியும். ஆக எந்த தனிப்பட்ட உரிமையாக இருந்தாலும் அது right in personam எனலாம்.
ஆனால், பக்கத்து வீட்டுக்காரர், அந்த சொத்தில் தனக்கு ஏதோ உரிமை இருப்பதாகவோ, அல்லது அதன் ஒருபகுதி தனக்கு சொந்தம் என்றும் சொத்தின் உரிமையாளருக்கு எதிராக உரிமை கொண்டாடுகிறார் என்றால், சொத்தின் உரிமையாளர், தான் மட்டுமே முழு உரிமையாளர் என்றும், பக்கத்து வீட்டுக்காரருக்கு என் சொத்தில் எந்த உரிமையும் கிடையாது என்றும் declaration உரிமை வழங்கும் வழக்கை போடுகிறார் என்றால், அதில் கிடைக்கும் தீர்ப்பை judgment in rem என்பர். இந்த உலகறிய உரிமை வழங்கிய தீர்ப்பானது, பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக மட்டுமல்ல, அடுத்த தெருக்காரருக்கும் அடுத்த ஊர்க்காருக்கும் ஏன் உலகத்துக்கும் எதிரான தீர்ப்பு என்பதால் இதை judgment in rem என்பர். இந்த தீர்ப்பை வைத்துக் கொண்டால், யாருமே இனி, இவரின் சொத்தில் அதுமாதிரி உரிமை கேட்க முடியாது. முடிவான தீர்ப்பு இது. ஒருவேளை, இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, அந்த வழக்கைப் போட்டவர் இறந்துவிட்டால், அவரின் வாரிசுகள் அந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாம். அந்த உரிமை சாகாது. சாக உரிமையுள்ள இத்தகைய வழக்குகளில் மட்டுமே வாரிசுகள் வழக்கை தொடர்ந்து நடத்த முடியும். rem என்றால் லத்தீன் மொழியில் உலகம் என்று பொருளாம்.

No comments:

Post a Comment