Stillbirth
கருவில் இருக்கும் குழந்தையானது
5 மாதங்களுக்கு மேலாகி, அதற்குப் பின் தன் தாயின் வயிற்றுக்கு உள்ளேயே
இறந்து பிறந்தால் அதை ஸ்டில்பெர்த் (stillbirth) என்கிறார்கள்.
தாயின் வயிற்றிலிருந்து
உயிருடன் பிறந்த குழந்தையை லிவ்-பெர்த் (live birth) என்கிறார்கள்.
(பிறந்த பின்னர், சிறுநேரம் கழித்து இறந்திருந்தாலும் லிவ்-பெர்த்
தான்.
ஆனால் தாயின் வயிற்றுக்கு உள்ளேயே
இறந்து,
பின்னர் பிறந்தாலும், அல்லது இறந்த குழந்தையை சிசேரியன் மூலம் எடுக்கப் பட்டாலும்
அதையும் ஸ்டில்பேர்ன் Stillborn or stillbirth என்கிறார்கள். (குழந்தை,
தாயின் வயிற்றில் இறந்து, பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து இயற்கை
பிரசவம் மூலம் பிறக்குமாம். அதனால் தாய்க்கு ஒரு தொந்தரவும் வராதாம். அதற்கு பின்னரும்
இறந்த குழந்தை பிறக்கவில்லை என்றால் தான் தாய்க்கு பிரச்சனையாம்).
கருவானது உருவாகி 5 மாதங்களுக்கு
முன்னரே இறந்திருந்தால், அதை miscarriage கருச்சிதைவு என்கிறார்கள்.
ஸ்டில்பெர்த் (இறந்து
பிறந்த) குழந்தைகளை சில நாடுகளில், அந்த குழந்தை "பிறந்தது" என்றே பதிவு செய்ய வேண்டும் என சட்டம் உள்ளதாம்.
லிவ்-பெர்த் என்னும் உயிருடன்
பிறந்து,
பின்னர் சிறு நேரத்தில் இறந்த குழந்தையையும் பதிவு செய்யப்படவேண்டும்.
இங்கிலாந்து சட்டப்படி, ஸ்டில்-பெர்த் குழந்தைகள் இறந்து பிறந்ததை பதிவு செய்ய வேண்டுமாம். ஆனால்,
ஸ்காட்லாந்தில் அதுபோல ஸ்டில்-பெர்த் குழந்தைகளை பதிவு செய்ய அவசியம்
இல்லையாம்.
அமெரிக்காவில், கருவில் இறந்து பிறந்த குழந்தையை ஸ்டில்பெர்த் என்று சொன்னாலும், 5 மாதங்களுக்கு மேல் ஏற்படும் கருக்கலைப்பையும் ஸ்டில்பெர்த் கணக்கில்தான் வைத்துக்
கொள்வார்களாம்.
Still என்பது motionless
நகர்வு இல்லாமல் அல்லது உயிரில்லாத என்ற பொருளில் stillbirth
என்பதை "இறந்து பிறந்த குழந்தை" என்று பொருள் கொள்ளலாம்.
இந்தியாவில் இந்த சட்டம்;
பிறப்பு இறப்பு பதிவுச்
சட்டம் 1969 என்று இந்தியாவில் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. அதன்படி எல்லா பிறப்புகளையும்
இறப்புகளையும் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இதில் பிறந்த குழந்தையை பதிவதுடன், Stillbirth என்னும்
"இறந்து-பிறந்த" குழந்தையையும் அவ்வாறே பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம்
உள்ளது. அந்த சட்டத்தில் பிறப்பு என்றாலே "உயிருடன் பிறந்த குழந்தையையும்"
"இறந்தே பிறந்த குழந்தையையும்" சேர்த்தே "பிறப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல்
live-birth உயிருடன் பிறந்து பின்னர் சிறிது நேரத்தில் இறந்த குழந்தையை,
பிறந்த குழந்தையாகவும், பின்னர் இறந்த குழந்தையாகவும்
இரண்டு பதிவுகளையும் செய்ய வேண்டுமாம்.
**
No comments:
Post a Comment