மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-10
இயற்கை
கார்டியனின் அதிகாரங்கள்;
இந்து
மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ன் பிரிவு 8-ன்படி, மைனர் குழந்தைக்கு
நன்மை அளிக்கும் எந்த காரியத்தையும் அந்த மைனருக்காக அதன் இயற்கை கார்டியன் செய்து
வரலாம். ஆனால், மைனரின் சொத்துக்களை இயற்கை கார்டியன் என்பவர் அந்த மைனரின்
தந்தையே ஆனாலும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, ஐந்து வருடங்களுக்கு மேல் நீண்டகால
குத்தகைக்கு விடவோ முடியாது.
அப்படி
இந்த சட்டக் கட்டுப்பாட்டை மீறி மைனரின் சொத்தை இயற்கை கார்டியன் விற்று விட்டால்
அதை மைனர் நினைத்தால் ரத்து செய்து விடலாம். It is voidable at the
instance of the minor. மைனர் சொத்தை கார்டியன் விற்க முடியாது
என்று இந்தச் சட்டம் சொல்வதால், மைனரின் சொத்தை உண்மையிலேயே உண்மையான காரணத்துக்கு
விற்பனை செய்ய வேண்டி நிர்பந்தம் இருந்தால், அந்த சொத்து இருக்கும்
மாவட்டத்திலுள்ள மாவட்ட கோர்ட்டில் கார்டியன் மனுச் செய்து காரணத்தை கூறி மைனரின்
சொத்தை விற்கலாம். அப்படி மனுச் செய்யும்போது, பிரிட்டீஸ் பழைய சட்டமான கார்டியன்ஸ்
& வார்டு சட்டம் 1890 சட்டத்தில் சொல்லியுள்ளபடி அதாவது அதன் பிரிவு 29-ன்படி மாவட்ட
கோர்ட்டில் மனுசெ செய்ய வேண்டும். அந்த மாவட்ட கோர்ட் அனுமதி கொடுக்க மறுத்து
விட்டால், உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்து கொள்ளலாம்.
பூர்வீகச்
சொத்தில் உள்ள மைனரின் பங்கு சொத்துக்கு இந்த பிரிவு-8 எந்த தடையும் செய்யாது,
அதாவது பூர்வீகச் சொத்தில் மைனரின் பங்கை கர்த்தா அல்லது மைனரின் கார்டியன்
விற்கலாம், அடமானம் செய்யலாம். கோர்ட் உத்தரவு பெறவேண்டிய அவசியம் இல்லை.
கூட்டுகுடும்ப உரிமை உள்ள மைனர் சொத்தில் கோர்ட் தலையிடாது. அதன் குடும்பத் தலைவரே
முழு உரிமையுடன் அந்த மைனரின் நன்மைக்காக காரியங்களை செய்து கொள்ளலாம். அவர்
கோர்ட்டின் முன்-அனுமதியைப் பெற தேவையில்லை. சட்டத்தில் அவசியம் இல்லை என்று
சொல்லியுள்ள போதிலும், அனுமதி பெற வேண்டும் என்று கார்டியன் விரும்பினால்,
உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்து கார்டியனாக நியமித்துக் கொள்ளலாம்.
பொதுவாக,
ஒரு மைனருக்கு இரண்டு கார்டியன்கள் இருப்பதில்லை. கோர்ட்டும் இரண்டு கார்டியன்களை
நியமிக்க மாட்டார்கள். ஆனாலும், மைனரை பார்த்துக் கொள்ள ஒரு கார்டியனும், மைனரின்
சொத்துக்களுக்கு ஒரு கார்டியனும் நியமிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டாம்.
**
No comments:
Post a Comment