மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-11
இந்து
மைனர் சொத்தை கோர்ட் அனுமதி இல்லாமல் விற்றால்....?
மைனர்
சொத்துக்களை அவரின் இயற்கை கார்டியன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அது
மைனரின் நன்மைக்காக இருக்க வேண்டும் என்றும், இந்து மைனாரிட்டி &
கார்டியன்ஷிப் ஆக்ட் 1956ன் பிரிவு 8ல் சொல்லப் பட்டுள்ளது. ஆனாலும் அசையாச்
சொத்துக்களை கோர்ட் அனுமதியில்லாமல் விற்க முடியாது என்றும் சொல்லி உள்ளது,
அவ்வாறு கோர்ட் அனுமதி கொடுக்கும்போது, அந்த விற்பனையானது மைனரின் அவசியத்துக்காக
விற்கப்பட்டால் மட்டுமே கோர்ட் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்
பட்டுள்ளது.
கோர்ட்
அனுமதியைப் பெறாமல் மைனரின் சொத்தை, தகப்பனார் கார்டியனாக இருந்து விற்று
இருந்தால் அந்த கிரயத்தை அந்த மைனர் 18 வயது முடிந்து மேஜர் வயதை அடைந்தவுடன்
அதிலிருந்து மூன்று வருடங்களுக்குள் அந்த கிரயத்தை செல்லாது என கோர்ட் மூலம்
தீர்ப்பு வாங்கலாம். அதில் மைனரின் நன்மைக்காக இந்த சொத்து விற்கப்படவில்லை என்று
கூறித்தான் தீர்ப்பை வாங்க முடியும். அவ்வாறான வழக்குகளை அந்த மைனர் 18 வயது
முடிந்து மூன்று வருடங்களுக்குள் அதாவது அவரின் 21 வயதுக்குள் வழக்கு போட்டுவிட
வேண்டும். இதற்குப்பின் அதாவது 21 வயது முடிந்தவுடன் அப்படி ஒரு வழக்கை போட
முடியாது என லிமிடேஷன் சட்டம் பிரிவு 60-ல் சொல்லப்பட்டுள்ளது. (The
Limitation Act Section 60).
பல
மைனர்கள் இருந்து, அவர்கள் எல்லோரும் கார்டியனின் மைனர் சொத்தின் கிரயத்தை ரத்து
செய்ய வேண்டிய நிலை இருந்தால், இது கூட்டாக வழக்குப்போடும் நிலை. இதில் மூத்த
மைனருக்கு 21 வயதுக்கு மேல் ஆகிவிட்டிருந்தால் அவர் வழக்கு போட முடியாது. ஆனால்,
இளைய மைனருக்கு 21 வயதுக்கு கீழே இருந்தால் அவர் தனியே தன் பாகத்துக்கு வழக்கை
போடலாம் என்றும், கூட்டுகுடும்ப சொத்துக்களில் மூத்த மைனர் கர்த்தாவாக இருக்க
வேண்டி இருந்தால், அவருக்கு 21 வயது முடிந்தவுடனேயே இளைய மைனர்களுக்கு அவ்வாறு 21
வயது வரவில்லை என்றாலும் எல்லோருமே வழக்குப் போடும் உரிமையை இழந்துவிடுவர் என லிமிடேஷன்
சட்டம் பிரிவு 7ல் சொல்லப் பட்டுள்ளது. ஏனென்றால் கூட்டுக்குடும்பச் சொத்தில்
கர்த்தாவின் (மேனேஜரின்) உரிமை பறிபோய் விட்டால், ஜூனியர் மெம்பர்களின் உரிமையும்
கூடவே பறிபோய்விடும் என்று இந்த விதி கூறுகிறது. ஏனென்றால் இது ஒரு கூட்டான
உரிமையாகும்.
**
No comments:
Post a Comment