Sunday, September 6, 2015

நிக்சன் வழக்கு


நிக்சன் வழக்கு:
US v. Nixon in 1974
US Supreme Court held that no president is above the law.

1972ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ரிச்சர்டு நிக்சன் ரிபப்ளிக் கட்சியில் (Republic Party) மறுபடியும் தேர்தலில் நிற்கிறார். அவரை எதிர்த்து நிற்கும் டெமாக்ரெட் கட்சியைச் (Democratic Party) சேர்ந்த செனட்டர் ஜார்ஜ் மெக்கோர்ன். 

தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர், டெமாக்ரட் கட்சி அலுவலகத்தில் புகுந்து சில பேப்பர்களை திருடிச் சென்று விட்டனர். யார் என்று தெரியவில்லை. விசாரனையில் அது நிக்சனின் ரிபப்ளிக் கட்சி ஆட்கள் தான் எனத் தெரியவருகிறது. மேலும், அது சம்மந்தமாக, நிக்சனும் ஏதோ பேசி இருக்கிறார். அதுவும் ஒரு டேப்பில் பதிவாகி உள்ளது. 

அமெரிக்க காங்கிரஸ் சபை இந்தப் பேச்சு அடங்கிய டேப்பை கேட்கிறது. அவர் கொடுக்க மறுக்கிறார். நான் ஜனாதிபதி என்றும் எனக்கு அந்த சலுகை உள்ளது என்றும், ஜனாதிபதி பேச்சை, காங்கிரஸ் சபை கேட்க முடியாது என்றும் கூறுகிறார்.

வழக்கு மாவட்ட கோர்ட்டுக்கு போகிறது. மாவட்ட கோர்ட் நிக்சனுக்கு எதிராக வருகிறது. அதன் அப்பீல் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு போகிறது. நிக்சன் அப்பீல் செய்கிறார். சுப்ரீம் கோர்ட், "ஜனாதிபதியின் பேச்சு, நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமாக இருந்தால் மட்டுமே அவருக்கு பிரிவிலெட்ஜ் (Privilege) என்னும் உரிமை உள்ளது. அவரின் தனிப் பேச்சுக்கள் எல்லாம் ஜனாதிபதி பேசிதாக ஆகாது" என்றும் எனவே அந்த பேச்சு அடங்கிய டேப்பை காங்கிரஸ் சபைக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு இடுகிறது.

Supreme Court declared that no president is above the law. ஜனாதிபதியாக இருந்தாலும் அவரும் சட்டத்துக்கு உட்பட்டவரே என்று ஒரே போடாக போட்டுவிட்டது. 

இந்த தீர்ப்பு வந்தவுடன் ஜனாதிபதி நிக்சன் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

No comments:

Post a Comment