Saturday, September 5, 2015

Suspension

Suspension cannot be extended beyond 90 days

அக்சய்குமார் சௌத்திரி வழக்கு;
(விசாரனையே இல்லாமல், சஸ்பென்சன் உத்தரவை மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியாது என தீர்ப்பு)

அக்சய்குமார் ஒரு காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இவர் காஷ்மீரில் எஸ்டேட் அதிகாரியாக இராணுத்தில் இருக்கிறார்.  அவரிடம் ஒரு தவறு பற்றி விளக்கம் கேட்கப்படுகிறது. அவரும் அந்த தவறை ஒப்புக்கொண்டு விளக்கமும் அளித்துவிட்டார். 2011 செப்டம்பரில்  சஸ்பெண்ட் ஆகிறார். மறுபடியும் 180 நாட்களுக்கு அந்த சஸ்பெண்ட் உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. மூன்றாவது முறையாக மறுபடியும் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. நான்காவது முறையாக 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. ஐந்தாவது முறையும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு.

கேட் என்னும் ட்ரிபூனலில் வழக்கு. குறிப்பிட்ட காலத்துக்கு மேல் தேவையில்லாமல், விசாரனையும் இல்லாமல், சஸ்பெண்ட் உத்தரவை நீடிக்க முடியாது என கேட் சொல்கிறது. அரசு ரிட் மனு போடுகிறது. அரசுக்கு சஸ்பெண்ட் உத்தரவை நீட்டிக்க அதிகாரம் உண்டு என்கிறது. அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வருகிறது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்கு வருகிறது.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 6வது திருத்தத்தில் "எவருடைய வழக்கையும் காலவரம்புக்குள் முடித்துவிடவேண்டும்" என்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது.

பழைய மாக்ன கார்ட்டா (1215 வருடம்) சட்டத்திலும், யாருடைய உரிமையையும் நீதி இழுத்தடிக்காது என்று கூறியுள்ளது.

1948ல் ஏற்பட்ட மனித உரிமை சட்டத்தின் ஆர்ட்டிகிள் 12லிலும் ஒருவரின் தனிமை, குடும்பம், தொடர்புகள், மரியாதை, கௌரவம் இவைகளில் சட்ட தேவையில்லாமல் தலையிட முடியாது. அதே சட்டத்தின் ஆர்ட்டிகிள் 6(1)ல் ஒருவரின் சிவில் வழக்கு, கிரிமினல் வழக்கு விசாரனைகளை சீக்கிரமே முடித்து விட வேண்டும்; காலதாமதப் படுத்தக் கூடாது என்று அந்த சட்டம் சொல்கிறது.

இந்திய அரசியல் சாசன சட்டம் ஆர்ட்டிகிள் 21லும் அவ்வாறே, ஒருவரின் வாழ்வும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது.

பொதுவாக வழக்குகளில், குற்றம் செய்தவர்தான் அந்த வழக்கை இழுத்தடிப்பார். "delay is a known defence tactic"

ஒவ்வொரு வழக்கும் எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்க முடியாது. நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஏன், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டே, "சீக்கிரம் ஒரு வழக்கை முடிக்கலாமே ஒழிய, குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்க முடியாது" என்று சொல்லி உள்ளதாம்.


எனவே இந்த வழக்கில், சஸ்பெண்ட் செய்யப்பட்டவருக்கு சார்ஜ் ஷீட் கொடுக்காமல் 90 நாட்களுக்கு மேல் இருந்தால், அந்த சஸ்பெண்ட் உத்தரவை மேலும் நீட்டிக்க முடியாது. அப்படி நீட்டிக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியான காரணம் வேண்டும் என்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment