Sunday, September 6, 2015

டிங்கர் வழக்கு (மாணவனுக்கு அரசியல் தேவையா)

Tinker v. Des Moines Podcast

1969ல் நடந்த வழக்கு; அப்போது வியட்நாம் சண்டை நடக்கிறது. அப்போது அமெரிக்கவாவின் ஐயோவா மாநிலத்தில் உள்ள டெஸ் மாய்னஸ் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவியும் அவளின் தம்பியும் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து, அதன்மூலம், அமெரிக்க அரசின் வியட்நாம் கொள்கைக்கு எதிராக பள்ளிக்கு வருகின்றனர். 

பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை என்றும், அந்த கருப்பு பேட்ஜை கழற்றிவிடும்படியும் கேட்கிறது. "இது எங்களின் அமெரிக்க பேச்சுரிமை சார்ந்தது" எனவே நாங்கள் கையில் கட்டியுள்ள அந்த பேட்ஜை கழற்ற மாட்டோம் என்கிறார்கள். அவர்களை பள்ளியை விட்டு சஸ்பெண்ட் செய்கிறது நிர்வாகம்.

இவர்கள், மாவட்ட கோர்ட்டுக்கு போகிறார்கள். மாவட்ட கோர்ட், பள்ளி சொல்வதுதான் சரி என்கிறது. சர்க்யூட் கோர்ட் ஆப் அப்பீலுக்கு போகிறார்கள். அங்கும் இதே நிலைதான். மாணவர்களுக்கு எதுக்கு அரசியல் என்கிறது. அசரவில்லை இருவரும், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கே போகிறார்கள். 

அங்கு, அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தின் 1-வது திருத்த சட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமை என்பது அடிப்படை உரிமை என்றும், அதை ஒவ்வொருவரும் அனுபவிக்க முடியும் என்றும், மாணவர்களின் இந்தப் பேச்சுரிமையை அவர்கள் பள்ளிக்கூடத்தின் கேட்டுக்கு (வாசலுக்கு) வெளிலேயே விட்டுவிட்டு பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டும் என பள்ளி நிர்வாகம் எதிர்பார்த்தது, இந்த அமெரிக்க அரசியல் சாசன சட்டம் 1-வது திருத்தமான பேச்சுரிமைக்கு எதிரானது என்று ஒரே போடாக போட்டுவிட்டது.

வேறு வழியின்றி அந்த மாணவர்களை பள்ளி மறுபடியும் சேர்த்துக் கொண்டது. இந்த தீர்ப்பை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் அப்போதிருந்த 9 நீதிபதிகளில் 7 பேர் மாணவர்களுக்கு சாதகமாகவும், 2 பேர் எதிராகவும் கொடுத்தனர். 

"Students don't shed their constitutional rights at the school house gates." --Supreme Court.


No comments:

Post a Comment