Texas v. Johnson
தேசியக் கொடியை எரிப்பது குற்றமா என்ற கேள்வியுடன் இந்த வழக்கு ஆரம்பிக்கிறது.
1984ல் நடந்த வழக்கு; அப்போது ரிபப்ளிக் கட்சியின் தேசிய மாநாடு நடக்கிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள டலாஸ் நகரில் இந்த மாநாடு நடக்கிறது. எதிர் கோஷ்டிகள் அப்போது தெருவில் ஊர்வலம் வருகின்றனர். அங்குள்ள சிட்டி ஹாலை ஊர்வலம் நெருங்கியவுடன், அதில் ஒருவரான் ஜான்சன் என்பவர் அமெரிக்க தேசியக் கொடியை மண்ணெண்ணை ஊற்றி எரிக்கிறார். தேசியக் கொடியை எரிப்பது குற்றம் என்று அவரை கைது செய்கின்றனர். சிறையில் அடைக்கின்றனர். அவர் மீது அங்குள்ள மாநில சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. ஆம், அவர் செய்தது தவறு இல்லை என என்று டெக்ஸாஸ் மாநில சுப்ரீம் கோர்ட் சொல்லி விட்டது.
ஜான்சனை விடவில்லை, டெக்சாஸ் மாநில அரசானது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறது "அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தின் 1-வது திருத்த சட்டத்தின்படி, எல்லோருக்கும் பேச்சுரிமை கொடுக்கப் பட்டிருக்கிறது. கொடியை எரிப்பது என்பது ஒருவகை பேச்சுரிமைதான். என் கோபத்தை அதில் அவ்வாறு காண்பிக்கிறேன். என் எதிர்ப்பு எண்ணத்தைக் காண்பிப்பதும் ஒரு பேச்சுரிமைதானே? எனவே இதில் என்ன குற்றம் இருக்கிறது" என்று கேட்கிறார் ஜான்சன்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டிலுள்ள 9 நீதிபதிகள் இந்த வழக்கின் வாதத்தைக் கேட்கிறார்கள். அதில் 5 பேர் ஜான்சன் செய்தது சரிதான் என்றும், அவருக்குள்ள பேச்சுரிமைப்படி அவர் நடந்து கொண்டதாக கருதலாம் என்று தீர்ப்பு சொல்லிவிட்டார்கள். மீதியுள்ள 4 பேர் எதிரான தீர்ப்புக் கொடுத்தார்கள்.
"Burning the American flag was symbolic speech and protected by the First Amendment."
"கொடியை எரிப்பதும் ஒருவகைப் பேச்சுரிமைதான்" என்றது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்.
No comments:
Post a Comment