Kim Davis
கிம் டேவிஸ்:
அமெரிக்காவில் ஒரே பால் இன திருமணத்தை, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்
சட்டபூர்வமாக்கி உள்ளது. ஓபர்ஸ்பெல் வழக்கில் இந்த உலகப் பிரசித்தி பெற்ற தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. Obergefell v. Hodges, 576 US 2015. அமெரிக்க
அரசியல் சாசன சட்டத்தின் 14வது திருத்த சட்டப்படி, எல்லோருக்கும்
சம உரிமை உண்டு. அதன்படி ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுபோல, ஒரு ஆணும் ஆணும் ஏன் சேர்ந்து வாழக் கூடாது. அதை தடை செய்வது இந்த சட்டத்த்தின்படி
எல்லோருக்கும் சம உரிமை என்பதை மறுப்பதாகும் என்கின்றனர். இந்த தீர்ப்பின் முடிவின்படி,
ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்ளலாம். அதுபோல பெண்ணும் பெண்ணும் திருமணம்
செய்து கொள்ளலாம்.
ஆனால்,
கென்டுகி மாநிலத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் இந்த
கிம் டேஅவிஸ் என்ற பெண்மணி, இவ்வாறான திருமணத்தை பதிவு செய்யும்
அதிகாரியாக உள்ளார். அவர், இப்படிப்பட்ட திருமணத்தை பதிவு செய்ய
மாட்டேன் என்று மறுத்து வருகிறார். "நான் இறைவனின் விருப்பத்துக்கு மாறாக செயல்பட
மாட்டேன்" என்றும் கூறி வருகிறார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காமல்
இப்படி அவர் நடந்து கொள்வது "கோர்ட் அவமதிப்பாகும்" என்பதால், அவர்மீது கோர்ட் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி ஐந்து நாட்கள் சிறையில் வைக்கப்பட்டார்.
கோர்ட் சொல்கிறது,
"கெம் டேவிஸ் பெண்மணியின் சொந்த கருத்தை அவர் வேலை செய்யும் அலுவலகத்தில்
செயல்படுத்த முடியாது. அவர் சட்டத்தைத்தான் மதித்து செயல்படுத்த வேண்டும். ஆண்டவன்,
ஆணையும் பெண்ணையும் மட்டும்தான் சேர்ந்து வாழ படைத்துள்ளான் என்று அவர்
கருதினால் , அது அவரின் சொந்த கருத்தே என்று கோர்ட் கூறியுள்ளது.
அவரை ஐந்து நாட்கள் சிறைக்கு பின் விடுதலை செய்த கோர்ட், "வேலைக்கு போனதும், உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் இந்தகைய
திருமண சர்டிபிகேட் வழங்கும் கீழ் அதிகாரிகளை தடை செய்யக் கூடாது" என்று கோர்ட்
நிபந்தனை விதித்துள்ளது.
இப்போது இது அமெரிக்காவில் அரசியல் ஆக்கப் பட்டுள்ளது. ஒரு
கூட்டம், கிம்
டேவிஸ் செய்தது சரி என்கிறது. மற்றொரு கூட்டம் கிம் டேவிஸ் செய்தது தவறு என்கிறது.
No comments:
Post a Comment