Sec.370-A IPC
Human Trafficking
ஆள்
கடத்தல்/ஆள் அடிமை போன்ற குற்றங்கள் இதுவரை கண்டுகொள்ளப் படவில்லையாம். இந்திய
தண்டனைச் சட்டம் 1860ல் இதற்கு ஒரு தண்டனையும் கொடுக்கவில்லை. அதனால், சிறுவர்களை கடத்துவது,
வேலைக்கு வைத்துக் கொள்வது, பிச்சை எடுக்க
உபயோகப்படுத்துவது, மற்ற குற்றச் செயல்களுக்கு உபயோகப்
படுத்துவது போன்றவற்றுக்கு பல குழந்தை கடத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.
ஒரு வருடத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள்
கடத்தப்படுகின்றதாம். அவற்றில் நான்கில் ஒருவர் மட்டுமே மீட்டப்படுகின்றனர்
என்கிறார்கள். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
எனவே இந்தப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டி, ஜஸ்டிஸ் வர்மா கமிட்டியை
அரசு அமைத்து யோசனை கேட்டது. அந்த கமிட்டியின் அறிக்கையின்படி சில வழிமுறைகள்
சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 370-ஏ என்று ஒரு
புதிய பிரிவு புகுத்தப்பட்டுள்ளது.
அந்த புதிய பிரிவு 370-ஏன்படி--
"எவரும், ஆசை வார்த்தை சொல்லியோ, பணம்
கொடுத்தோ, மிரட்டியோ, வேலைக்கு
வேண்டும் என்று சொல்லியோ, ஏமாற்றியோ, பயம்
உண்டாக்கியோ, ஒருவரை வேலைக்கு சேர்த்தாலும், அடிமைப் படுத்தினாலும், வேறு இடத்துக்கு அழைத்துச்
சென்றாலும் அவ்வாறு கடத்திச் செல்பவர், மனிதனைக் கடத்தும்
குற்றம் புரிந்தவர் என்று கருதப்படுவர்" என்கிறது அந்த புதிய பிரிவு.
No comments:
Post a Comment