(1) சுடீசியல்
ஆக்டிவிசம் Judicial Activism
அமெரிக்க
அரசியல் சாசன சட்டத்தில் ஆர்ட்டிகள் 3ன்படி, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்
நியமிக்கப்பட்டுள்ளது. மற்ற பெடரல் கோர்ட்டுகளை, காங்கிரஸ் சபை நியமித்துக்
கொள்ளும் அதிகாரத்தை கொடுத்துள்ளது.
Article III
of US Constitution
It
establishes the judicial branch of the federal govt.
The
judicial branch comprises the SC of US and lower courts as created by Congress.
It
sanctions the establishment of only one SC, but does not set the number of
justices.
இப்போது
யுஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தலைமை நீதிபதியும் எட்டு துணை நீதிபதிகளும்
உள்ளனர். மொத்தம் 9 பேர்கள் மட்டுமே. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மட்டுமே அதன்
அரசியல் சாசனத்தால் ஏற்படுத்தப்பட்டது. மற்ற சர்க்யூட் கோர்ட் நீதிபதிகள் உட்பட மாவட்ட நீதிபதிகளாக இருப்பவர்களை காங்கிரஸ் சபையே நியமிக்கும் அதிகாரம் கொண்டது. அமெரிக்க சுப்ரீம்
கோர்ட், ஒரிஜினல் அதிகாரமும், அப்பீல் அதிகாரமும் உடையது. ஒரிஜினல் அதிகாரம்
என்பது யுஎஸ் க்கும் மற்ற மாநிலங்களுக்கும், மாநிலங்களுக்கு இடையே நடக்கும்
பிரச்சனைகளைத் தீர்ப்பது. அப்பீலேட் அதிகாரம் என்பது சர்க்யூட் கோர்ட் தீர்ப்பின்
மீதும், மாநில சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மீதும் அப்பீல் அதிகாரம் கொண்டது.
Judiciary
Act 1789: ஜூடிசரி ஆக்ட் 1789 என்பது முதல் காங்கிரஸ் சபையால்
கொண்டுவரப்பட்டது. அதன்படி ஒரு தலைமை நீதிபதியும், 5 துணை நீதிபதிகளும்
ஏற்படுத்தியது. இதன்படி 11 மாநிலங்களில் இயங்கும்படி, மொத்தம் 13 மாவட்ட
சர்க்யூட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
மர்பரி
வழக்கில், Marbury v. Madison 1893 (5 US 137) Congress cannot pass laws
that are contrary to the Constitution என்று தீர்ப்பு வழங்கி
உள்ளது.
வில்லியம்
மர்பரி என்பவர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். அவருடன் மிக அதிகமாக
மாவட்ட நீதிபதிகளையும் நியமிக்கிறார்கள். அப்போது ஜான் ஆடம்ஸ் ஜனாதிபதியாக
பதவியில் இருக்கிறார். அவர் பதவிக் காலம் முடியப் போகிறது. தேர்தல் நடந்து, புதிய
ஜனாதிபதியாக தாமஸ் ஜெப்பர்சன் வந்துள்ளார்; ஆனால் அவர் பதவி ஏற்கவில்லை. காங்கிரஸ்
சபை கலையாமல் இருப்பதால் பழைய ஜனாதிபதியே மேலும் புதிய 16 சர்க்யூட் கோர்ட்
நீதிபதிகளையும், புதிய 42 மாவட்ட நீதிபதிகளையும் நியமித்து உத்தரவு
பிறப்பித்துவிட்டார். இதை அப்போது “மிட்நைட் நீதிபதிகள்” Midnight
Judges என்று வேடிக்கையாகவும் கூறினர். ஆனால், அப்படி அவரசரமாக
அனுப்பி வைக்கப்பட்டமாவட்ட நீதிபதி நியமன உத்தரவானது மர்பரிக்கு கிடைக்கவில்லை.
அதற்குள் புதிய ஜனாதிபதியும் அவரின் புதிய செக்ரட்டரியாக மேடிசனும் பதவிக்கு
வந்துவிட்டார்கள். அந்த மாவட்ட நீதிபதியின் நியமன ஆணையை அனுப்பாமல் நிறுத்தி
வைக்கிறார். அதை தனக்கு அனுப்பும்படி மர்பரி கடிதம் எழுதுகிறார். முடியாது எனப்
பதில் வருகிறது. அப்போது யுஎஸ் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஜான் மார்ஷல்
இருக்கிறார்.
ஜனாதிபதி
பதவி காலம் முடியும் தருவாயில், வெளியேறும் ஜனாதிபதியான ஜான் ஆடம்ஸ், புதிய ஜூடிசரி
ஆக்ட் 1801ஐ கொண்டு வந்து அதன்படி 10 புதிய மாவட்ட கோர்ட்டுகளை உருவாக்கி, அதற்கு
மாவட்ட நீதிபதிகளை நியமித்துவிட தீர்மானித்து இந்த சட்டத்தை இயற்றி, நீதிபதிகளையும் நியமித்து
உத்தரவு போட்டு விட்டார். அதன்படி பல நீதிபதிகள் பதவிப் பிரமாணனமும் எடுத்து
விட்டனர். ஆர்டர் கிடைக்காமல் தவித்தவரே இந்த வழக்கில் உள்ள மர்பரி. நீதிபதி ஆக
முடிவில்லை.
புதிய
ஜனாதிபதி தாமஸ் ஜெப்பர்சன் பதவி ஏற்றவுடன், அந்த அனுப்பாத ஆணைகளை
நிறுத்திவிடும்படி உத்தரவு போட்டுவிட்டார். புதிய காங்கிரஸ் சபை கூடுகிறது. அது
அந்த ஜூடிசரி ஆக்ட் 1801 சட்டத்தை செல்லாது என தீர்மானம் நிறைவேற்றுகிறது.
இதற்கிடையில்,
பழைய ஜனாதிபதி அதிகாரத்தில் உள்ளபோதே கையெழுத்துச் செய்த உத்தரவை தனக்கு அனுப்பும்படி,
மர்பரி, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேன்டமஸ் வழக்கு தொடுக்கிறார்.
இப்போது
அந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒரு கேள்வியை வைக்கிறது. Does the Supreme
Court have the authority to review acts of Congress? Can Congress expand the
scope of the SC’s original jurisdiction beyond what is specified in Article III
of the Constitution?
காங்கிரஸ்
சபை (சட்டசபை/பார்லிமெண்ட்) கொண்டு வந்த ஒரு சட்டத்தை சரி அல்லது சரியில்லை என சுப்ரீம்
கோர்ட் தள்ளுபடி செய்ய அதிகாரம் உண்டா? அரசியல் அமைப்பு சட்டத்துக்கு மீறி
காங்கிரஸ் சபை ஒரு சட்டத்தைக் கொண்டுவர முடியுமா?
தீர்ப்பு:
ஆம், 1789 ஜூடிசியல் சட்டப்படி, சுப்ரீம் கோர்ட்டுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளது.
மர்பரியை நீதிபதியாக நியமித்த பழைய ஜனாதிபதியின் உத்தரவு செல்லும். அவர்
கையெழுத்துப் போட்ட நேரத்திலிருந்து அது அமலுக்கு வருகிறது. அதை மாற்றி அமைக்க முடியாது.
அரசு முத்திரையுடன் உத்தரவு போட்டபின்னர், அதை அமல் படுத்தாமல் இருப்பதால், அதனால்
பாதிக்கப்பட்டவர் சுப்ரீம் கோர்ட்டை அணுக முடியும். அவருடைய உரிமை
மறுக்கப்பட்டதாகவே இதை கருத வேண்டும். அடுத்து வந்த காங்கிரஸ் சபை அதை மறுத்து
சட்டம் இயற்ற முடியாது. அப்படி காங்கிரஸ் சபை, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரான
போக்கை எடுத்தால், அதை கேள்வி கேட்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு.
அரசியல் சாசன சட்டமே தலைமையானது. காங்கிரஸ் இயற்றும் சட்டங்கள் அதற்கு கீழ்படிந்ததே.
அவை ஒருநாளும் அரசியல் சாசன சட்டத்தின் நோக்கத்தை குறைக்க முடியாது.
ஆனாலும்,
அந்த ஜூடிசியல் சட்டமான 1789 சட்டம்தான் இத்தகைய அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு
கொடுத்துள்ளது. அந்த 1789 சட்டமே, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்பதால்,
அதைக் கொண்டு மர்பரி கேட்கும் மேன்டமஸ் ரிட் வழங்க முடியாது. எனவே மர்பரி வழக்கை
தள்ளுபடி செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கி விட்டது.
இதனால்,
தெரிய வருவது என்னவென்றால், அரசியல் சாசனத்துக்கு எதிரான எந்த சட்டத்தையும்
காங்கிரஸ் சபை /பார்லிமெண்ட் இயற்ற முடியாது. அவ்வாறு இயற்றினாலும் அதை செல்லாது
என சொல்லும் அல்லது அதை வியாக்கியானம் செய்து நீக்கும் அதிகாரம் சுப்ரீம்
கோர்ட்டுக்கு உள்ளது என்று தெளிவான தீர்ப்பை கொடுத்துள்ளது.
தொடரும்...
No comments:
Post a Comment