Tuesday, August 2, 2016

அரசியல் அமைப்புச் சட்டம்-2

அரசியல் அமைப்புச் சட்டம்-2
(The Constitution of India, 1950)
இந்தச் சட்டத்தில் பிரிவு 14 முதல் 30 வரை, குடிமகனின் அடிப்படை உரிமைகளைச் சொல்லி உள்ளது; இது அத்தியாயம் 3-ல் வருகிறது; எனவே இந்த அரசியல் சாசனச் சட்டத்தில் அத்தியாயம் 3-என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது; பார்லிமெண்டுக்கும், கோர்ட்டுக்கும் சில நேரங்களில், ஏன், பல நேரங்களில் இந்த அத்தியாத்தில் குறிப்பிட்டுள்ளவற்றைப் பற்றித்தான் சண்டையே வருகிறது! (சட்ட விளக்கச் சண்டை);
பிரிவு:14: சட்டத்தின் முன் அனைவரும் சமம்!
பிரிவு:15: ஒருவரை மதம், ஜாதி, நிறம், பிறந்த இடம் இவற்றை வைத்து வித்தியாசப்படுத்தி பார்க்க கூடாது; (எல்லோரும் சமம்);
பிரிவு:16: அரசு உத்தியோகத்தில், ஒரே படிப்பு, தகுதிக்கு ஒரே மாதிரி வேலை உத்திரவாதம் உண்டு:
பிரிவு:17: தீண்டாமை ஒழிக்க வேண்டும்;
பிரிவு:18:  ஏற்கனவே கொடுத்திருந்த “கௌரவ பட்டங்கள்” ஒழிக்கப்பட வேண்டும்;
பிரிவு:19: பேச்சுரிமை உண்டு (ஆனாலும், இது நாட்டுக்கு குந்தகமாக இருக்க கூடாது);
பிரிவு:20: யாரையும் தண்டிக்க கூடாது (சட்டப்படி தவறு செய்திருந்தால் மட்டுமே தண்டிக்க வேண்டும்);
பிரிவு:21: அனைவரின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் உத்திரவாதம் வேண்டும்; (சட்டத்தின்படியே நடத்தவேண்டும்);
பிரிவு:21-ஏ: ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயமாக கல்வி அறிவு கொடுக்க வேண்டும்; (இது 2002-ல் புதிதாக கொண்டு வரப்பட்டது);
பிரிவு:22: கைது செய்வதிலிருந்தும் சிறை வைப்பதிலிருந்தும் பாதுகாப்பு: (சட்டப்படி அல்லாமல், மற்ற வழிகளில் கைதோ செய்யவோ, சிறையில் அடைத்து வைக்கவோ கூடாது);
பிரிவு:23: அடிமைப்படுத்தி வேலை வாங்கவோ, பிச்சை எடுக்க வைக்கவோ கூடாது;
பிரிவு:24: 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பேக்டரிகளில் வேலையில் அமர்த்தக் கூடாது;
பிரிவு:25: அவரவருக்கு விருப்பப்பட்ட தொழிலை, அவரவர் செய்து வர உரிமை உண்டு:
பிரிவு:26: அவரவருக்கு விருப்பப்பட்ட மதம் சார்ந்த செயல்களை செய்து வர உரிமை உண்டு (ஆனாலும், அது பொது அமைதிக்கு கேடு இல்லாமல் இருக்க வேண்டும்);
பிரிவு:27: மதம் சார்ந்த விஷயங்களுக்காக யார் மீதும் வரி விதிக்க கூடாது;
பிரிவு:28: அரசு உதவி பெற்ற நடத்தும் கல்வி நிறுவனங்களில், மதம் சார்ந்த படிப்புகள் சொல்லிக் கொடுக்க கூடாது;
பிரிவு:29: மைனாரிட்டி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கென்று தனி மொழி, கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள உரிமை உண்டு;
பிரிவு:30: மைனாரிட்டி மக்கள் தங்களுகென்று கல்வி நிறுவனங்களை உருவாக்கிக் கொள்ள உரிமை உண்டு;
பிரிவு:31: ஒருவர் சொத்து வைத்திருப்பதை அரசு பறித்துக் கொள்ள முடியாது; (இந்தப் பிரிவை 1979-ல் ரத்து செய்து விட்டனர்;)

**

No comments:

Post a Comment