இந்திய அரசியல் அமைப்புச்
சட்டம்-3
(The Constitution of India, 1950)
இந்த சட்டத்தில் பிரிவு 368 என்பது ஒரு முக்கியமான பிரிவு என்றே
நினைத்துக் கொள்ளலாம்; அது “பார்லிமெண்ட் விரும்பினால், இந்த அரசியல் சாசன
சட்டத்தின் பிரிவுகளை மாற்றிக் கொள்ளவோ, திருத்திக் கொள்ளவோ, பார்லிமெண்டுக்கு
அதிகாரம் உண்டு; அவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்றால், அதை ஒரு சட்ட வரைவாக
எழுதி, பார்லிமெண்டின் இரு சபைகளிலும் தாக்கல் செய்து, அதில் உள்ள எம்பிக்களில்
மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள் ஓட்டை பெற்று, திருத்திக் கொள்ளலாம்” என்று
கூறப்பட்டுள்ளது;
இப்படி இருந்த சட்டத்தைக் கொண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
சில திருத்தங்களை செய்தார்; அதன்படி எமெர்ஜென்சி ஆட்சியை கொண்டு வந்தார்;
குடிமகனின் அடிப்படை உரிமைகளை இந்த சட்டப்படி கிடைப்பதைத் தடுத்தார்; இந்த அரசியல்
சாசன சட்டத்தை திருத்தம் செய்வதை, கேள்வி கேட்டு கோர்ட்டுக்கு போக முடியாது
என்றும் சட்டம் இயற்றினார்; இதனால் பல கெடுதல்கள் வரும் என பின்னர் வந்த ஜனதா அரசு
உணர்ந்து, அந்த பிரிவில் மேலும் சில உட்பிரிவுகளைக் கொண்டு வந்து
கட்டுப்படுத்தியது;
அந்த உட்பிரிவுகள் என்னவென்றால்: அரசியல் சாசன சட்டத்தின் மூன்றாவது
அத்தியாயமான குடிமகனின் அடிப்படை உரிமைகள் என்னும் பிரிவுகள் 14 முதல் 30 வரை உள்ள
பிரிவுகள் அடங்கிய அத்தியாயம் மூன்றையும், அதில் உள்ள பிரிவுகளையும், திருத்தம்
செய்வதற்கு பார்லிமெண்டுக்கு அதிகாரம் கிடையாது என்று சட்டத்தை கொண்டு வந்தனர்; அதன்படி,
1977 முதல் இந்த உட்பிரிவுகள் செயல்படத் தொடங்கின; எனவே, இப்போது, அந்த மூன்றாவது
அத்தியாயத்தில் உள்ள பிரிவுகளை எந்த பார்லிமெண்டும் திருத்தம் செய்ய முடியாது;
இதற்கு அடிப்படையான காரணம், சுப்ரீம்கோர்ட்டின் முன் தீர்ப்புகள்தான்! அந்த
தீர்ப்பின் அடிப்படையிலேயே ஜனதா அரசும், அரசியல் சாசன சட்டத்தில் இதை நிரந்தரமாக
எழுதி வைத்துவிட்டது; இனி எந்த அரசு வந்தாலும், அதை மாற்றிவிட முடியாது;
கோர்ட்டும் அதை மாற்றுவதற்கு ஒப்புக் கொள்ளாது;
ஜனநாயக நாட்டின், குடிமகனின் அடிப்படை உரிமைகளை மாற்றிவிட, எந்த அரசுக்கும்,
அதிகாரம் இல்லை என்பது அதன் தத்துவம்!
**
No comments:
Post a Comment