அமெரிக்க சுப்ரீம்
கோர்ட்
அமெரிக்க நாட்டின் மிக உயர்ந்த கோர்ட்டுதான் இந்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்;
அமெரிக்க சட்டமான ஜூடிசியரி ஆக்ட் 1969-ன் படி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு
தலைமை நீதிபதியும், மற்றும் எட்டு துணை நீதிபதிகளும் இருப்பர்; இந்த எண்ணிக்கை
எப்போதும் மாறாது; இது அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தின் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும்;
இதில் ஒரு வழக்கை விசாரிக்க குறைந்த பட்சம் ஆறு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமரும்;
பெரும்பாலான வழக்குகளில், மொத்தமுள்ள ஒன்பது நீதிபதிகளுமே சேர்ந்து இருக்கும்
பெஞ்ச் விசாரனை நடக்கும்;
அமெரிக்க சுப்ரீம் கோட்டுக்கு ஒரு நீதிபதியை நியமித்தால், அவர் வாழ்நாள் வரை
அதே நீதிபதியாக இருப்பார்; இறந்தால் மட்டுமே பதவி போகும்; ரிட்டையர்மெண்ட் என்பதே
இருக்காது; அவராக விரும்பினால், பதவி விலகிக் கொள்ளலாம்;
அமெரிக்க சுப்ரீம்கோர்ட்டுக்கு, நீதிபதியை நியமிக்க அமெரிக்க அதிபருக்கு
அதிகாரம் உண்டு; அவர் நாமினேட் செய்வார்; பல நீதிபதிகளை பரிந்துரைப்பார்; அதில்
யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என அமெரிக்க செனட் சபை முடிவை எடுக்கும்; அமெரிக்க
செனெட் சபையில் மொத்தம் 100 செனட்டர்கள் இருப்பர்; அமெரிக்காவில் மொத்தம் 50
மாநிலங்கள் உள்ளன; அவற்றில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், இரண்டு செனட்டர்கள்
தேர்வு செய்யப்படுவர்;
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கான நீதிபதிக்கு சம்பளமாக 2,25,500/- டாலர்கள்
ஒரு வருடத்துக்கு சம்பளம்; கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் மாதச் சம்பளம்;
இப்போது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருப்பவர் ஜஸ்டிஸ்
ஜான் ராபர்ட்; இவர் 2005ல் நியமிக்கப் பட்டவர்; இளவயதுக்காரர்; இவர் 1955 ஜன 27-ல்
பிறந்தவர்; 61 வயதாகிறது; 2005-ல் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது இவர்
நியமிக்கப்பட்டார்; ஹார்வடு பல்கலையில் சட்டம் படித்தவர்; 14 வருடங்கள் தனியாக
வக்கீல் தொழில் செய்தவர்;
மொத்தமுள்ள ஒன்பது நீதிபதிகளில், ஒருவரான ஜஸ்டிஸ் ஆன்டனின் ஸ்கேலியா 20106
பிப். 13-ல் இறந்து விட்டார்; எனவே ஒரு இடம் காலியாக உள்ளது; புதிய அதிபராக வரும்
டொனால்டு டிரம்ப் இனிமேல் புதிய நீதிபதியை பரிந்துரைப்பார்;
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டை முதன்முதலில் 1789-ல் ஏற்படுத்தினர்; அமெரிக்க
அரசியல் சாசன சட்டம் 3-ன்படி இது ஏற்படுத்தப்பட்டது; ஆர்ட்டிகிள் 3-ன்படி The Judicial Power of the United States shall be vested
in one supreme Court together with any lower courts Congress may establish. இந்த சுப்ரீம் கோர்ட், அப்பீல் வழக்குகளையும், தன்னிடம் வரும் அரசியல் சாசன
வழக்குகளையும் விசாரிக்கும் அதிகாரம் கொண்டது; மொத்த அமெரிக்காவில் உள்ள 50
மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 13 ஜூடிசியல் மாவட்டங்களாகப் பிரித்து உள்ளனர்;
அதாவது மூன்று மாநிலங்கள் சேர்ந்தது ஒரு ஜூடிசியல் மாவட்டம்: அதன்படி, 13
சர்க்யூட் கோர்ட்டுகள் உருவாக்கப் பட்டுள்ளன; அவை அந்தந்த மாநிலங்களின் அப்பீல்
வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது; இது இல்லாமல், ஒவ்வொரு மாநிலத்திலும்
மாநில சுப்ரீம் கோர்ட்டும் உள்ளது; அதன் கீழ், பல மாவட்ட கோர்ட்டுகளும் உள்ளன;
இப்போது உள்ள அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் எட்டு நீதிபதிகள்;
1)
தலைமை நீதிபதி ஜஸ்டிஸ்
ஜான் ராபர்ட்ஸ் (2005 முதல்)
2)
ஜஸ்டிஸ் ஆன்டனி கென்னடி
(1988 முதல்)
3)
ஜஸ்டிஸ் கிளாரன்ஸ்
தாமஸ் (1991 முதல்)
4)
ஜஸ்டிஸ் ரத் பாடர்
கிங்ஸ்பர்க் (பெண்) (1993 முதல்)
5)
ஜஸ்டிஸ் ஸ்டீபன்
ப்ரேயர் (1994 முதல்)
6)
ஜஸ்டிஸ் சாமுவேல்
அலிட்டோ (2006 முதல்)
7)
ஜஸ்டிஸ் சோனியா
சோட்டோமேயர் (பெண்) (2009 முதல்)
8)
ஜஸ்டிஸ் எலனா கெகன்
(பெண்-2010 முதல்)
9)
ஜஸ்டிஸ் அன்டனின்
ஸ்கேலியா (இறந்து விட்டார்)
**
No comments:
Post a Comment