மதராஸ் சுப்ரீம் கோர்ட்
மதராஸ் பட்டணத்தில் ஒரு சுப்ரீம்
கோர்ட் இயங்கி வந்தது. மதராஸ் துறைமுகத்துக்கு எதிரே இருந்த பழைய கலெக்டர் ஆபீஸ் தான்,
அந்த மதராஸ் சுப்ரீம் கோர்ட். (அது இப்போதுள்ள ஐகோர்ட் போன்றதே). பின்னர், இப்போதுள்ள
ஐகோர்ட்டைக் கட்டிய பின்னர் இங்கு ஐகோர்ட்டாக வந்து விட்டது. இங்கு இந்த ஐகோர்ட்டுக்கு
அதிக அதிகாரங்களை சார்ட்டர் சட்டம் மூலம் பிரிட்டீஸ் அரசு கொடுத்ததால் இது சார்ட்டர்டு
ஐகோர்ட் ஆகி விட்டது. 1862-ல் இந்த பழைய சுப்ரீம் கோர்ட், புதிய பெயருடன் ஐகோர்ட் ஆகி
விட்டது.
(இதே முறையில் தான், அமெரிக்காவிலும்
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சுப்ரீம் கோர்ட் உள்ளது. மாநில சுப்ரீம் கோர்ட்டுகளை, அந்தந்த
மாநிலத்தைச் சொல்லி அந்த சுப்ரீம் கோர்ட் என்பர். மொத்த அமெரிக்காவுக்கும் ஒரு சுப்ரீம்
கோர்ட் உள்ளது. அதை யு.எஸ்.சுப்ரீம் கோர்ட் என்பர்).
இந்த காலக்கட்டத்தில் நடந்த வழக்கு
ஒன்று:
1882-ல் மதராஸ் ஐகோர்ட்டில் நடந்த
வழக்கு இது.
நீதிபதி முத்துசாமி ஐயர் இந்த
தீர்ப்பை எழுதி உள்ளார்.
1862-ல் வீராசாமி நாயுடு ஒரு
பாகப் பிரிவினை வழக்கை தன் சகோதரன் வெங்கடசாமி நாயுடு மீது போடுகிறார். இந்த வழக்கு
நடந்து கொண்டிருக்கும் போது, வெங்கடசாமி நாயுடு இந்தச் சொத்தை யாருக்கும் விற்பனை செய்யக்
கூடாது என்று ஒரு உத்தரவை ஐகோர்ட் போடுகிறது. இது 1863 வரை தொடர்கிறது. பின்னர் வழக்கு
டிகிரி ஆகி, மாஸ்டர் கோர்ட்டில், இந்த சொத்தை ஏலம் போட்டு, பணத்தை இருவரும் பிரித்துக்
கொள்ள உத்தரவு ஆகிறது.
1866-ல் ஏலம் நடந்து, அதில் அருணாசலம்
என்பவர் இந்த சொத்தை ஏலம் எடுக்கிறார். அவருக்கு கிரயம் ஆகிறது. ஆனால் அவரும், தனக்காக
இந்த சொத்தை வாங்காமல், அவரின் பினாமியான விர்ஜி லால் என்பவருக்காக வாங்கி இருக்கிறார்.
அந்த விர்ஜி லால் இறந்து விடுகிறார். அவருக்கு மனைவி தேவகி பாய், மகள் ஜமுனா பாய்.
இருவரும் வாரிசுகள்.
எனவே அருணாசலம் ஒரு உயில் எழுதி
வைக்கிறார். அதில் சண்முக முதலி, ஏகாம்பர முதலி இருவரையும் உயில் எக்சிகியூட்டராக நியமிக்கிறார்.
அருணாசலம் இறந்த பின்னர், எக்சிகியூட்டர்கள் இருவரும், இந்த சொத்தை, விர்ஜி லால் வாரிசுகளான
தேவகி பாய், ஜமுனா பாய் இருவருக்கும் 1873-ல் பத்திரம் எழுதிக் கொடுத்து விடுகிறார்கள்.
பின்னர், அதில் தேவகி பாய் 1875-ல் இறந்து விடுகிறார். தேவகி பாயும் ஒரு உயில் எழுதி
வைக்கிறார். இதில் சடகோபன் (இந்த வழக்கில் வாதி) என்பவரை எக்சிகியூட்டராக நியமிக்கிறார்.
அப்போது அந்த சொத்தில், ஜமுனா
பாய் (இந்த வழக்கில் 1-ம் பிரதிவாதி) வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஏற்கனவே இந்த
சொத்தின் உரிமையாளர்களில் ஒருவரான வெங்கடசாமியும் அவரின் மகனும் சேர்ந்து இந்த வழக்கில்
1-வது பிரதிவாதிக்கு 1865-ல் ஒரு அடமானப் பத்திரம் எழுதிக் கொடுத்து கடன் வாங்கி இருக்கிறார்கள்.
அந்த கடனை வசூல் செய்வதற்காக அவர் 1871ல் ஒரு
அடமான வழக்குப் போட்டுள்ளார். அந்த விபரம் இந்த சொத்தை ஏலம் எடுத்த அருணாசலத்துக்கு
தெரியாது. அவர் இறந்து விட்டதால், அவரின் மனைவியை பார்ட்டியாக அடமான வழக்கில் சேர்த்துள்ளார்கள்.
அடமான வழக்கில் இந்த சொத்து ஏலத்துக்கு வருகிறது. அதை அடமானக் கடன் கொடுத்த ஜமுனா பாயே
ஏலம் எடுத்து வாங்கி விடுகிறார். அவரே ஏற்கனவே சொத்தில் குடி இருந்தும் வருகிறார்.
சட்ட சிக்கல் என்னவென்றால், இந்த
சொத்து ஏற்கனவே பாகப் பிரிவினை வழக்கில் நிலுவையில் இருக்கும்போது, இந்த அடமானக் கடனை
வெங்கடசாமி ஏற்படுத்தி இருக்கிறார். அடமானக் கடன் ஏற்படும் போதே ஜமுனா பாய் சொத்தில்
சுவாதீனத்தில் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, இந்த சொத்தை ஐகோர்ட், மாஸ்டர் கோர்ட்
மூலம் ஏலம் கொண்டு வந்தது அதிகாரம் இல்லாமல் செயல் பட்டது ஆகும் என்று வாதம்.
இந்த பாக வழக்கானது பழைய மதராஸ்
சுப்ரீம் கோர்ட் இருக்கும்போது போடப்பட்டது. பின்னர் அந்த சுப்ரீம் கோர்ட்டை கலைத்து
விட்டு, இப்போதுள்ள ஐகோர்ட்டாக மாறி விட்டது. இது மாறி காலம் 1862ல். அதாவது இந்த வழக்குப்
போட்ட சில காலம் கழித்து. 1865-ல் மதராஸ் ஐகோர்ட், இரண்டாவது லெட்டர்ஸ் பேடன்ட் சட்டம்
Second Letters Patent வந்து விட்டது. அதன்படி, மதராஸ் பட்டணத்துக்குள் இருக்கும் அசையாச் சொத்துக்களைப்
பொறுத்து மதராஸ் ஐகோர்ட் நேரடியாக வழக்கை எடுத்து விசாரிக்கும் அதிகாரம் கிடைத்தது.
இந்த பாக வழக்கை 1862-ல் போடும் போது, அதை மதராஸ் சுப்ரீம் கோர்ட்டில் போட்டுள்ளார்கள்.
அந்த பழைய சுப்ரீம் கோர்ட்டுக்கு 1862-ல் அசையாச் சொத்துக்களை விசாரிக்கும் அதிகாரம்
இல்லை என்று வாதம். ஏனென்றால் திருத்திய 2-வது லெட்டர்ஸ் பேடண்ட் 1865-ல் வருகிறது.
அதன்படி தான் அசையாச் சொத்துக்களுக்கு ஐகோர்ட்டுக்கு விசாரனை அதிகாரம் கிடைக்கிறது.
மேலும், இந்த சொத்து அண்ணன்-தம்பி
இருவருக்கும் உரிமை உள்ள சொத்து. ஆளுக்கு பாதி-பாதி உரிமை உள்ளது. என்னதான் வழக்கில்,
இந்த சொத்தை, வழக்கு நிலுவையில் உள்ள காலத்தில் விற்கக் கூடாது என்று உத்தரவு போட்டாலும்,
அவரின் பாதிப் பங்கை விற்க / அடமானம் வைக்க அவருக்கு அதிகாரம் உள்ளது.
மேலும், ஐகோர்ட் மூலம் ஏலம் எடுத்த
கிரய சர்டிபிகேட்டை பதிவு செய்யவில்லை என்பதால் அது செல்லாது என்று வாதம் செய்கிறார்கள்.
பாக வழக்கு நிலுவையில் இருக்கும்
போது, வெங்கடசாமிக்கு இந்த சொத்தை விற்பனை / அடமானம் செய்யும் அதிகாரம் இல்லை என்று
வாதம். The doctrine of
lis pendens is contained in the maxim “nihil innovetur”. That is to say – “Let
no change in the rights of the property be introduced, but let it all abide the
result of the decree.”
மதராஸ் ஐகோர்ட் 1862-ல் கட்டப்பட்டு
அங்கு செயல்பட ஆரம்பிக்கிறது. புதிய லெட்டர்ஸ் பேடன்ட் சட்டம் 1865 அந்த ஐகோர்ட்டுக்கு
வந்து விட்டது. அதன்படி இந்த பட்டணத்தில் உள்ள நிலங்களின் வழக்குகளை மதராஸ் ஐகோர்ட்
நேரடியாக விசாரிக்கும் அதிகாரம் கிடைக்கிறது. ஆனால், இந்த வழக்கில் உள்ள சொத்து, மதராஸ்
ஐகோர்ட் வரம்பு எல்லைக்கு வெளியே இருக்கிறது. 1-வது லெட்டர்ஸ் பேடன்ட் சட்டத்தில்,
12 வது பிரிவில் இருந்த குறையை நீக்கி, 2-வது லெட்டர்ஸ் பேடன்ட் சட்டம் 1865ல் வந்தது.
இதில் அசையாச் சொத்தின் உரிமையைப் பொறுத்து பார்ட்டிகள் மதராஸ் பட்டணத்துக்குள் வசித்தால்
அங்கு வழக்குப் போடலாம். சொத்து வெளியில் இருந்தாலும் பரவாயில்லை. The 1st Letter’s Patent
which confined the Court’s jurisdiction in reference to suits for land to suits
in which the land claimed was wholly situated within local limits.
ஆனால் கல்கத்தா ஐகோர்ட், ஒரு
தீர்ப்பில், இப்படி சொல்லி உள்ளது. That
suits for partition of family property, consisting wholly or partly of land or
immovables, were suit for land within the meaning of the Letters Patent, and it
would appear from the case of Stephen Lazar v. Colla Ragava Chitty 2 MIA 84
that the Supreme Court would have no jurisdiction over property beyond its
local limits in such cases.
மேலும், பாக வழக்கில் வெங்கடசாமி
பாகத்தையும் சேர்த்து ஏலம் வாங்கி இருப்பது, என்பது பாக உரிமையை வாங்கி இருப்பதாகும்.
அதாவது Equity to a partition.
The term “An equity to a partition”
is one of those vague phrases which only tend to obscure the nature of the question
in the discussion of which they are employed. What is an equity to a partition?
It is a right to apply to a Court of Equity for a partition with reasonable
expectation that the application will be complied with. Whence arise this right
to apply and this reasonable expectation? They must arise from the existence of
aright in the plaintiff to a partition, and it is very clear that this right
arises from his having become transferee of the rights of the coparcener. It has
been often observed that a coparcener cannot introduce a stranger to the
enjoyment of any portion of the property belonging to the coparcenary body, but
if a Court, when applied to will recognise the so-called equity to a partition,
and will portion off to the transferee the share of the transferor, it is plain
that the Courts do recognise the right of a coparcener to transfer his unascertained
interest, and that a right to a partition and not an equity to a partition is
the proper description of the interest transferred. What reason then is there
for saying that this right, when once acquired, is not, transmitted to heirs
and representatives? None whatever. The point was not argued before us in
appeal.
ஆக, பழைய சுப்ரீம் கோர்ட் இந்த
பாக வழக்கை விசாரித்தது தவறு. ஏனென்றால், இந்த பாகச் சொத்து அதன் அதிகார எல்லைக்கு
வெளியே இருக்கிறது. அதனால் பின்னர் ஏற்பட்ட ஏலமும் செல்லாது.
**
No comments:
Post a Comment