பத்திரப்
பதிவுகள்-3
ஒரு
பத்திரத்தை ஒருவர் எழுதிக் கொடுத்திருக்கலாம். அல்லது பலர் ஒரே நேரத்தில் (தேதியில்)
எழுதிக் கொடுத்திருக்கலாம். அல்லது பலர் எழுதிக் கொடுக்க வேண்டிய பத்திரத்தில், ஒருசிலர்
ஒரு நாளிலும், வேறு சிலர் வேறு சில நாட்களிலும் ஒரே பத்திரத்தில் கையெழுத்துச் செய்திருக்கலாம்.
இப்படிப்பட்ட
சூழ்நிலைகளில், ஒரு பத்திரம் அதை எழுதிய தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள், அதைப்
பதிவுக்கு பதிவாளரிடம் தாக்கல் செய்து இருக்க வேண்டும் என்பது பொதுவிதி.
ஆனால்,
பலர் பல்வேறு தேதிகளில் கையெழுத்துச் செய்திருந்தால், அவை ஒவ்வொன்றும் அவ்வாறு எழுதிக்
கொடுத்த நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவுக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும்.
அப்படியானால், வெவ்வேறு காலங்களில் ஒரே பத்திரம் பதிவுக்கு தாக்கல் செய்யப் பட்டிருக்கும்.
பத்திரப்பதிவின்
பல நிலைகள்:
ஒரு
பத்திரத்தை பதிவு செய்ய வேண்டி இருந்தால், அதை பல நிலைகளில் கடக்க வேண்டும்.
1)
பத்திரம் எழுதிக் கையெழுத்துச் செய்து பூர்த்தி செய்வது. இதை Execution
of document என்பர்.
2)
அவ்வாறு எழுதிய பத்திரத்தை பதிவுக்காக பதிவாளரிடம் தாக்கல் செய்வது அல்லது சட்டப்படி
அவரிடம் கொடுப்பது. இதை Presentatin of the executed document என்பர்.
3)
அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தை, பதிவாளர் (அது சரியாக இருந்தால்) அதில் கையெழுத்துச்
செய்தவரை, அல்லது அவ்வாறு எழுதிக் கொடுத்தவரை அழைத்து அதை எழுதிக் கொடுத்தது உண்மைதானா
என்று கேட்டு உறுதி செய்வார். இதை Admission of the executed
document என்பர்.
4)
அவ்வாறு அவர் ஒப்புக் கொண்டால், அப்படி ஒப்புக் கொண்டதை அந்தப் பத்திரத்தில் பதிவாளர்
முன்னிலையில் கையெழுத்துச் செய்வார். (அவ்வாறு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அதை மறுப்பார்.
அவ்வாறு மறுத்தால், அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய மாட்டார்).
5)
அவ்வாறு எழுதிக் கொடுத்தவர் ஒப்புக்கொண்டு விட்டால், அவர்தான் அந்த நபர் என்பதை உறுதிப்படுத்திக்
கொள்ள இரண்டு சாட்சிகள் வேண்டும். அவர்களை அடையாளப்படுத்தும் சாட்சிகள் (ஆள் அறியும்
சாட்சிகள்) அல்லது Identifying Witnesses என்பர்.
அப்படி இரண்டு சாட்சிகள் அவரை நன்கு தெரியும் என்று சாட்சியம் அளித்து, சாட்சிக் கையெழுத்தும்
செய்ய வேண்டும். இதை Identification of the Admitted executants before the
Registrar என்பர். (இதில் ஆள்மாறட்டம் இருந்தால், பதிவாளர் கிரிமினில்
நடவடிக்கையும் எடுக்கலாம்).
6)
அப்படி முடிந்த ஒரு ஒப்புக் கொள்ளப்பட்ட பத்திரத்தை, பதிவாளர் பதிவுக்கு ஏற்றுக் கொண்டு,
உரிய முத்திரை கட்டணம், பதிவுக் கட்டணம் பெற்றுக் கொண்டு, அந்தப் பத்திரத்தை பதிவு
செய்ய ஏற்றுக் கொண்டு, அதற்கு ஒரு வரிசை எண் கொடுத்து, பின்னர் அதை ஒரு பதிவு சர்டிபிகேட்டாக
எழுதி பதிவாளர் கையெழுத்துச் செய்ய வேண்டும். இதை Registration
Endorsement by the Registrar என்பர்.
7)
இது எல்லாம் சரியாக முடிந்து இருந்தால் மட்டுமே, அது ஒரு முறையான பதிவு செய்யப்பட்ட
பத்திரமாக மாறும். கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்
என்று சட்டம் சொல்லி உள்ள பத்திரங்களை மாத்திரம் இப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அப்போது தான் அதற்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்கும். அதை ஒரு சாட்சியமாக ஏற்க முடியும். இல்லையென்றால்
அந்தப் பத்திரம் மூலம் நடந்த செயல் சட்டப்படி நடந்த செயலாக கருத முடியாது. அதாவது பதிவு
ஆகாத கிரயப் பத்திரத்தில் சொத்தானது அதை வாங்கியவருக்கு உரிமை மாறாமலேயே இருக்கும்.
**
இந்தியாவில்
எழுதிய பத்திரங்கள் & வெளிநாட்டில் எழுதிய பத்திரங்கள்:
பத்திரங்களை
பொதுவாக இந்தியாவுக்குள் எழுதி (கையெழுத்துச் செய்து) இருப்பார்கள். அல்லது இந்தியாவை
விட்டு வெளியே அல்லது வெளி நாட்டில் எழுதிக் கையெழுத்துச் செய்து இருப்பார்கள்.
இந்தியாவுக்குள்
எழுதிய பத்திரங்களை, அதை எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள்
பத்திரப் பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும். (காலதாமதமானல், அந்தக் காரணம் சரியாக இருந்தால்,
மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்படும்).
இந்தியாவுக்கு
வெளியே எழுதிக் கையெழுத்துச் செய்த பத்திரங்களையும் அவ்வாறே நான்கு மாதங்களுக்குள்
பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை, அந்தப் பத்திரம் இந்தியாவுக்குள் வருவதற்கு
காலதாமதமானால் (கப்பலில், விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டால்) அந்தப் பத்திரம் இந்தியாவுக்குள்
நுழைந்த நாளிலிலிருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
Adjudication
of Stamps:
பொதுவாக
வெளிநாட்டில் எழுதிய பத்திரங்களை, முத்திரைத்தாளில் Stamp
paper or Indian Non-Judicial Stamp paper-ல் எழுதிக் கொள்வதில்லை. ஏனென்றால்,
அந்த நாட்டில் இந்திய ஸ்டாம்ப் பேப்பர் விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை. எனவே சாதாரணமான
பேப்பரில் பத்திரத்தை எழுதிக் கொள்வர். இது இந்தியாவுக்குள் நுழைந்த நான்கு மாதங்களுக்குள்
அதற்குறிய முத்திரைத் தீர்வையை (ஸ்டாம்பு கட்டணம்)
செலுத்த வேண்டும். அவ்வாறு அதற்கு எவ்வளவு ஸ்டாம்பு கட்டணம் என்று முடிவு செய்யும்
அதிகாரம், மாவட்ட ரெவின்யூ அதிகாரியான District Revenue Officerக்கு உண்டு. அவர் அதை தீர்மானம் செய்து, அந்தக் கட்டணத்தை வசூலித்துக் கொள்வார்.
அப்படி வசூலித்து அந்தப் பத்திரத்தில் அதை சர்டிபிகேட் செய்து விட்டால், அது முறையான
கட்டணம் செலுத்திய பத்திரமாக இருக்கும். இந்த
நடைமுறையை Adjudication of Stamps (அச்சூடிகேஷன் ஆப் ஸ்டாம்ஸ்)
என்பர். இந்த அதிகாரத்தை இப்போது, மாவட்ட ரெவின்யூ அதிகாரியிடமிருந்து மாவட்ட பதிவாளருக்கே
கொடுத்து விட்டது தமிழக அரசு.
வெளிநாட்டில்
எழுதும் பத்திரங்களில் உள்ள சிரமங்கள்;
வெளிநாட்டில்
எழுதிய பத்திரத்தை இந்தியாவில் தாக்கல் செய்யும்போது, அதை எழுதிக் கொடுத்தவர், பதிவாளர்
முன்பு நேரில் வந்து ஒப்புதல் செய்ய வேண்டி இருக்கும். இது நடைமுறை சாத்தியம் இல்லை.
எனவே அவர் ஒரு ஏஜெண்ட்டை அங்கிருந்தே நியமித்து விட்டால், அவர் இந்தியாவுக்குள் அந்தப்
பத்திரத்தை எழுதிக் கொடுத்து, நேரில் ஆஜராகி ஒப்புக் கொண்டும் விடுவார். இதுபோன்றே,
மிக அதிகமான பவர் பத்திரங்கள் அவ்வாறு எழுதப் படுகின்றன.
இப்போது
இந்தியர்கள் பெரும்பாலும், வெளிநாடுகளில் வசிப்பதால், அவர்கள் சொத்தை வாங்கவும், விற்கவும்
அவசியம் ஏற்படுகிறது. எனவே அவர்கள் ஒரு நம்பிக்கையான நபரை அல்லது உறவினரை பவர் ஏஜெண்டாக
நியமித்து, வெளிநாட்டில் அந்த பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்து அனுப்புவார்கள். அது
இந்தியாவுக்குள் நுழைந்த நான்கு மாதங்களுக்குள் அதற்குறிய ஸ்டாம்பு கட்டணத்தை செலுத்தி
விட்டால், அந்த பவர் பத்திரத்தை இந்தியாவில் உபயோகித்து பத்திரம் எழுதிக் கொள்ளவும்,
தாக்கல் செய்யவும், பதிவு செய்யவும் உபயோகப்படும்.
உதாரணமாக
ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். அவரின் சொத்து ஏற்கனவே இந்தியாவில் உள்ளது. அதை தன்
குடும்ப உறுப்பினருக்கு செட்டில்மெண்ட் செய்ய விரும்புகிறார். செட்டில்மெண்ட் பத்திரம்
கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரம் ஆகும். எனவே செட்டில்மெண்ட் பத்திரத்தை (ஸ்டாம்ப்
பேப்பர் இல்லாமல்) வெளிநாட்டில் எழுதிக் கொண்டாலும், அதை இந்தியாவில் பதிவு செய்யும்
போது அவர் வந்து பதிவாளர் முன் ஆஜராகி அவ்வாறு எழுதிக் கொடுத்ததை ஒப்புக் கொள்ள வேண்டும்.
இது நடைமுறை சாத்தியம் இல்லை. எனவே ஒரு சுருக்கமான வழியாக, அவர், இந்தியாவில் உள்ள
ஒருவருக்கு பவர் கொடுத்து விட்டால் போதும். அது கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திர
வகையில் வராது. அந்த பவர் பத்திரத்துக்கு ஸ்டாம்பு கட்டணம் (தற்போது ரூ.100 மட்டும்)
செலுத்தி அசூடிகேஷன் செய்து கொண்டு, வெளிநாட்டில் வசிப்பவருக்காக, பவர் ஏஜெண்ட் என்ற
முறையில் செட்டில்மெண்ட் பத்திம் எழுதி அதைப்
பதிவாளரிடம் தாக்கல் செய்து பதிவு செய்து கொடுக்கலாம்.
இல்லையென்றால்,
மற்றொரு சுற்றுவழி உள்ளது. வெளிநாட்டிலேயே சாதாரணப் பேப்பரில் செட்டில்மெண்ட் பத்திரத்தை
எழுதி அதை இந்தியாவுக்கு அனுப்புவது. யாருக்கு அந்தச் சொத்தை செட்டில்மெண்ட் கொடுத்திருக்கிறாரோ,
அவர் அந்த செட்டில்மெண்ட் பத்திரத்துக்கு உரிய முத்திரை கட்டணத்தை (ஸ்டாம்பு கட்டணத்தை)
Adjudication of Stamps முறையில் செலுத்தி விட வேண்டியது. பின்னர் செட்டில்மெண்ட்
எழுதிக் கொடுத்தவர் நேரில் இந்தியாவில் உள்ள பதிவாளர் முன்னர் ஆஜராக முடியாததால், ஒரு
பவர் பத்திரம் எழுதி, அதன் மூலம், அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பதிவுக்குத் தாக்கல்
செய்யவும், எழுதிக் கொடுத்ததை ஒப்புக் கொள்ளவும், அதிகாரம் கொடுக்க வேண்டியது. அந்த
பவர் பத்திரத்தைக் கொண்டு, அந்த செட்டில்மெண்டை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இது
சற்றுக் குழப்பமான சுற்றுவழி. எனவே இதை மக்கள் அவ்வளவாக விரும்புவதில்லை.
**
No comments:
Post a Comment