EJUSDEM
GENERIS
அயஸ்டம்
ஜெனரிஸ் (ei(j)usdem generis) j-silent.
இது
ஒரு லத்தீன் வார்த்தை. இதன் பொருள் – “ஒரே மாதிரியான வகை” அல்லது “of
the same kind”. அதாவது சட்டத்தில் உள்ள வார்த்தைகளை வியாக்கியானம் அல்லது
விளக்கம் செய்யும்போது, பல வார்த்தைகள் கோர்வையாகச் சொல்லி இருக்கும்போது, ஒரு வார்த்தை
மட்டும் பொதுவான வார்த்தையாகச் சொல்லி இருந்தாலும், அந்த வார்த்தையை அங்குள்ள மற்ற
வார்த்தைகளின் வகையைச் சேர்ந்ததாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள்.
உதாரணமாக,
ஒரு சட்டத்தில் ஒரே மாதிரியான வகை உடைய பல வார்த்தைகளைச் சொல்லி இருப்பார்கள். அதில்
ஒரு வார்த்தை மட்டும் தனித்து தெரியும். அந்த தனித்த வார்த்தைக்கு “பொதுவான ஒரு அர்த்தத்தை”
எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த மற்ற வார்த்தைகளின் வகையிலேயே உள்ள பொருளைத்தான் இதற்கும்
எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த “அயஸ்டம் ஜெனரிஸ்” என்ற லத்தீன் சொல்லுக்குப்
பொருள்.
எனவே
கோர்ட்டுகள், ஒரு சட்டத்தை விளக்கம் அளிக்கும்போது, ஒரே கூட்டமாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளில்,
ஒரே ஒரு வார்த்தை மட்டும் வேறு மாதிரி பொருள் கொள்ளும்படி வித்தியாசமாகத் தெரிந்தாலும்,
அதுவும் அந்த மொத்த வார்த்தைகளின் கூட்டத்தைச் சேர்ந்தே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அந்த ஒற்றை வார்த்தை மட்டும் வேறு வகை அர்த்தம் கொடுக்கும் என்று நினைக்கக் கூடாது
என்பதே இதன் சட்ட விதி.
உதாரணமாக:
ஒரு சட்டத்தில், “the offices of mayors, bailiffs, port
reeves, and other offices….” என்று இருப்பதாக நினைத்துக் கொள்வோம்.
அதில் கடைசியாக உள்ள வார்த்தையான் other offices என்பதை வேறு
எந்த ஆபீஸாவது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக அங்குள்ள மற்ற வார்த்தைகளைப்
போலவே மற்ற மேயர் ஆபீஸ், பெய்லிப் ஆபீஸ், துறைமுக ஆபீஸ் போன்ற வகையான ஆபீஸ் என்றுதான்
பொருள் கொள்ள வேண்டும்.
மற்றொரு
உதாரணமாக: ஒரு சட்டத்தில் “automobiles, trucks, motorcycles and other
motor powered vehicles” என்று இருந்தால், மற்ற மோட்டார் வண்டிகள் என்பதை,
பீரங்கி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலே சொன்னதைப்போல ரோட்டில் ஓடும் மோட்டர்
வண்டிகள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்கிறது.
இந்திய
அரசியல் சாசனச் சட்டத்தில் ஆர்ட்டிகிள் 12-ல் அரசு (State) என்பதற்கு விளக்கமாக, “மத்திய அரசு, மாநில அரசு, பார்லிமெண்ட், சட்டசபை மற்றும்
எல்லா உள்ளாட்சி அல்லது வேறு அதிகாரங்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது. அதில் “வேறு அதிகாரங்கள்”
என்பதை அரசு சார்ந்த வேறு அதிகாரங்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த
அயஸ்டம் ஜெனரிஸ் கொள்கை விளக்கம் சொல்கிறது. அதை விட்டுவிட்டு, வேறு அதிகாரங்கள் என்பதை
“வேறு தனியார் அதிகாரங்கள் அல்லது அலுவலகங்கள்” என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதாவது
ஒரு கூட்டமாக அதே வகை வார்த்தைகள் சட்டத்தில் சொல்லி இருக்கும்போது, மீதியுள்ள ஒரு
வார்த்தையை மட்டும் சம்மந்தமில்லாத வேறு ஒரு பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
இந்திய
அரசிரயல் சாசன சட்டம் ஆர்ட்டிகிள் 12-ல் அரசு (STATE) மீது
ரிட் வழக்குகள் போடலாம் எ்ன்று சொல்லப்பட்டுள்ளது. அரசு என்பது மத்திய அரசு, மாநில
அரசு, பார்லிமெண்ட், சட்டசபை, உள்ளூர் அரசு அமைப்புகள், மற்றும் வேறு அமைப்புகள் என்று
சொல்லி உள்ளது. வேறு அமைப்புகள் என்பது அரசு அல்லாத வேறு அமைப்புகளைக் குறித்துச் சொல்லவில்லை
என்று விளங்கிக் கொள்ள வேண்டும். வேறு அமைப்புகள் என்பது ஒரு தனியார் மருத்துவமனையைக்
குறிக்கும் என்று அதற்கு விளக்கம் கொடுக்கக் கூடாது என்று இந்த Latin Maxim
“EJUSDEM GENERIS” அயஸ்டம் ஜெனரிஸ் சொல்கிறது.
அதாவது கூட்டத்தோடு கூட்டமாக, அந்த தனியாக உள்ள வார்த்தையும் சேரும் என்பதே இதன் பொருள்.
**
“
No comments:
Post a Comment