சோழி
விளையாட்டு சூதாட்டமா?
சோழிகளை
வைத்து விளையாடுவர். இது ஒரு வகை விளையாட்டு. இந்த சோழிகள் அழகாக, மின்னும் நிறத்தில்
இருக்கும். இதை Cawries என்பர். இப்படி சோழிகளை
வைத்து ஒரு கூட்டம் விளையாடி இருக்கிறது. இது நடந்தது 1897-ல். (120 வருடங்களுக்கு
முன்னர்).
அப்போது,
பிரிட்டீஸ் அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம் ஒன்று நடைமுறையில் இருக்கிறது. அது The
Public Gambling Act III of 1867. அந்தச் சட்டத்தின்படி, பொதுவாகப் பலர்
கூடி ஒரு வீட்டிலோ, மறைவான இடத்திலோ சூதாட்டம் ஆடினால், அது குற்றம் என்று சொல்கிறது.
அப்போதய காலநிலவரத்தின்படி, பஞ்சின் விலையை நிர்ணயிக்கும் சூது, ஓபியம் என்னும் போதைப்
பொருளின் விலையை நிர்ணயிக்கும் சூது, ஷார் மார்கெட் விலையைப் பற்றிய சூது, மழை வருமா
வராது என்பதைப் பற்றிய சூது, இப்படிப் பல வகையான
சூதுகள் இருந்துள்ளன.
இதைத்
தடுப்பதற்காகவே அந்த சூதாட்டச் சட்டம் 1867 கொண்டு வரப்பட்டது. அப்போதைய பண மதிப்பில்
ரூ.100 அபராதம் உண்டு.
இப்படிச்
சூது விளையாடுபவர் பணம் வைத்துக் கொண்டு விளையாட மாட்டார்கள். அதற்குப் பதிலாக வேறு
ஒரு பொருளையோ, அல்லது பேப்பரில் அதன் மதிப்பையோ எழுதி வைத்துக் கொள்வார்களாம்.
இந்த
வழக்கில், சோழிகளை வைத்து விளையாடி இருக்கிறார்கள். போலீஸ் வந்து பிடித்துக் கொண்டது.
இவர்கள் பணத்துக்காக சோழிகளை வைத்து விளையாடி இருக்கிறார்கள் என்று அவர்கள் மீது குற்றச்சாட்டு.
ஆனால்
மாவட்ட நீதிபதியின் தீர்ப்பில், சோழிகளை வைத்து விளையாட்டு விளையாடுவர். அதை ஒரு பண
எண்ணிக்கையாக உபயோகிக்கவில்லை. ஒருவேளை அந்த சோழிகளே பண மதிப்பாக வைத்திருந்தார்கள்
என்றால் அது சூதாட்டம் என்றே கருத முடியும். அப்படி அங்கு விளையாடிய விளையாட்டில் சோழிகளைப்
பணமதிப்பாக வைத்திருந்ததாக எந்த ஆதாரமும் போலீஸ் கொண்டுவரவில்லை. எனவே இதை சூதாட்டம்
என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி விட்டது.
அதை
எதிர்த்து, அரசாங்கம் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறது. ஐகோர்ட்டும், மாவட்ட
கோர்ட் சரியாகவே தீர்ப்புச் சொல்லி உள்ளது என்று அப்பீல் வழக்கைத் தள்ளுபடி செய்து
விட்டது.
Mere
finding of cowries in a house would not raise the presumption that the house
was used as a common gaming house. But evidence that cowries were used in a
particular house as a means whereby to carry on gaming would bring the house with
the Gambling Act. It entirely depends upon the use to which the cowries are
put. If they are used for the purpose of gaming (not gambling) as they frequently
are in this country, they are used as much instruments of gaming as dice.
**
No comments:
Post a Comment