நெமசிஸ்
(Nemesis) நீதிக் கடவுள்
ஒருவரின்
நன்மை தீமைகளுக்கு ஏற்ப அவனுக்கு தண்டனை கிடைக்கும் என்பது காலங்காலமாக இருந்துவரும்
நியதி அல்லது நீதி.
கிரேக்க
இதிகாசத்தில் இந்த நெமசிஸ் கடவுள் தான் நீதிக் கடவுள். இவள் ஜூயஸ் என்னும் தலைமைக்
கடவுளின் மகள். தலைமைக் கடவுளான ஜூயஸ் கடவுளுக்கும், லெடா என்ற மானிடப் பெண்ணுக்கும்
(ஸ்பார்டா நாட்டின் இளவரசி) பிறந்தவளே இந்த நீதிக்கடவுளான நெமசிஸ்.
இந்த
நெமசிஸ் நீதிக்கடவுளின் கையில் சீர்தூக்கும் தராசு, போர்வாள் இவைகள் நீதியின் அடையாளமாக
வைத்திருப்பாள். இவள் எப்போதும், சிங்கம் மாதிரி இருக்கும் ஹிப்பின்ஸ் என்ற ஒரு பறக்கும்
விலங்கு இழுத்துச் செல்லும் தேரில் பவனி வருவாள். இந்த சிங்கம் ஒரு யாழியைப் போல இருக்கலாம்.
ஏனென்றால் இந்த ஹிப்பின்ஸ் மிருகம்தான், புதையல்களையும், பெரும் செல்வங்களையும் காவல்
காக்கும் பலம் மிகுந்த மிருகம் என்று இதிகாசங்கள் சொல்கின்றன.
இந்த
நெமசிஸ் கடவுள் எப்போதும் இறக்கையுடன் கூடிய நிலையில், கையில் சாட்டையும், போர்வாளும்
வைத்துக் கொண்டு காட்சி தருவாள். கருப்பு நிறத்தில் இருப்பாள். உலகின் நன்மை தீமை ஆகிய செயல்களுக்கு உரிய பலனைத் தருபவள் இவளே. எனவே இவளை Daughter
of Justice நீதியின் மகள் என்று கிரேக்க இதிகாசம் சொல்கிறது.
நெமசிஸ்
என்ற கிரேக்கச் சொல்லுக்கு “பலனைக் கொடுப்பவள்” என்று பொருள். அது நல்ல பலனாகவும் இருக்கலாம்,
தீய பலனாகவும் இருக்கலாம்.
இந்த
நெமிசிஸ் நீதிக் கடவுளின் மகள்தான் பிரபஞ்ச பேரழகி ஹெலன். இந்த ஹெலனை, ஹெலன் ஆப் ஸ்பார்ட்டா
என்பர். (ஏனென்றால், இவள் ஸ்பார்ட்டா இளவரசை மணந்து கொண்டதால்). மேலும் இவளை ஹெலன் ஆப் ட்ராய் என்பர் (ஏனென்றால்,
இவளை, ட்ராய் இளவரசன் பாரிஸ் என்பவன் கடத்திக் கொண்டு போய் விட்டதால்). இவளை முன்வைத்தே
ட்ராய் போர் பத்து வருடங்கள் நடந்தது. கிட்டத்தட்ட சீதையை இராவணன் கடத்திக் கொண்டு
போன பின்னர், இராமன் அவளைத் தேடி அலைந்து, பின்னர் இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்கிறார்.
இதுபோலவே இங்கும் பேரழகி ஹெலனை (திருமணம் ஆனவளை)
பாரிஸ் என்னும் இளவரசன் ஸ்பார்ட்டா நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு அவன் நாடான ட்ராய்
நாட்டுக்குச் செல்கிறான். ஹெலனின் கணவன், படை திரட்டி பத்து ஆண்டுகள் போரிட்டு முடிவில்
அவன் மனைவி ஹெலனாவை மீட்கிறான். (ஹெலன் ஆப் ட்ராய் Helan of Troy என்று சினிமாப் படம் கூட வந்துள்ளது. யூ-ட்யூப்பில் பார்க்கலாம்).
இங்கு
குறிப்பிடும் நீதிக் கடவுள் நெமசிஸ் (பேரழகி ஹெலனின் தாய்) தலைமைக் கடவுள் ஜீயஸ்-க்கும் லெடா என்ற மானிடப்
பெண்ணுக்கும் பிறந்தவள் என்றும் ஒரு கதை உள்ளது. கிரேக்க இதிகாசத்தில், தலைமைக் கடவுளான
ஜூயஸ், மானிடப் பெண்கள் மேல் விருப்பம் கொண்டவராக இருப்பார். ஒருநாள், மானிடப் பெண்
லெடா என்ற அழகியைப் பார்க்கிறார். இவளை எப்படியும் அடைந்து விடுவது என்று திட்டம் தீட்டுகிறார்.
ஆனால், லெடா பெண்ணோ, ஒரு மன்னனின் மனைவியாக இருக்கிறாள். ஒருநாள் லெடா அரண்மனை நந்தவனத்தில்
இருக்கும்போது, அங்கு சென்ற ஜூயஸ் கடவுள், தன்னை ஒரு அடிபட்டுக் காயம் பட்ட அன்னப்பறவையாக
உருவம் மாற்றிக் கொண்டு, அங்கு அவள் மடியில்
போய் விழுகிறார். அதன் மீது இரக்கம் கொண்ட லெடா இதை கொஞ்சுகிறாள். இப்படிக் காதல் மலர்ந்து
உடல் சேர்கிறார்கள். அந்தக் கருவில் வந்தவள்தான் நெமசிஸ் என்கிறார்கள். வேறுசிலர்,
அதனால் ஒரு முட்டை பிறந்தது என்றும், அந்த முட்டையில் இருந்து வந்தவள் நெமிசிஸ் என்கிறார்கள்.
நெமிசிஸ்
நீதிக் கடவுள் என்பதால், அவளுக்கு நெமிசியா என்று ஒரு பண்டிகையும் ஏதென்ஸ் மக்கள் கொண்டாடுவர்.
உயிருடன் இருக்கும் மக்களின் தவறுகளுக்கு அவர்களை அழித்து தண்டனை தந்துவிடுவாள் என்ற
பயத்தில் அவளை துதித்து வணங்குவார்கள்.
இரண்டாம்
நூற்றாண்டில் வாழ்ந்த மெசோமடஸ் என்ற கவிஞன் இந்த நெமசிஸ் நீதிக் கடவுளைப் பற்றி ஒரு
பாடல் பாடியுள்ளான். அது:
“Nemesis,
winged balancer of life, dark-faced goddes, daughter of justice.”
**
No comments:
Post a Comment