பூர்வீகச்
சொத்துக்களை எதற்காக விற்கலாம்?
பூர்வீகச்
சொத்துகளை தந்தை மட்டும் விற்க முடியும். அவரின் மகன்களின் சம்மதமோ கையெழுத்தோ தேவையில்லை.
எப்போது என்றால்: பூர்வீகச் சொத்துக்களுக்கு தந்தை (குடும்பத்தில் மூத்தவர்) கர்த்தாவாக
இருந்து, அவர் ஏற்கனவே பொதுக் குடும்பத்துக்கு வாங்கிய கடன் நிலுவையில் இருந்தாலோ,
அல்லது அவ்வாறு வாங்கிய பழைய கடனைத் தீர்ப்பதற்காக தற்போது புதிய கடன் வாங்க வேண்டி
இருந்தாலோ, எற்கனவே வாங்கிய கடன் கோர்ட் டிகிரி ஆகி சொத்து ஏலத்துக்கு வந்தாலோ, கூட்டுக்
குடும்பச் சொத்தை தந்தை விற்கலாம். அது மகன்களையும் கட்டுப்படுத்தும்.
ஆனாலும்,
அப்படிப்பட்ட கடன்களை தந்தை தனது சொந்த கெட்ட நடவடிக்கைகளுக்கு வாங்கி இருந்தால், அதற்காக
தந்தை கூட்டுச் சொத்துக்களை விறபனை செய்யும்போது, மகன்கள் அதை தடுக்கலாம், அல்லது ஏற்கனவே
விற்று இருந்தால், அந்த கிரயத்தை செல்லாது எனச் சொல்லி வழக்கும் தொடரலாம்.
That
where joint ancestral property has passed out of a joint family either under a
conveyance executed by a father in consideration of an antecedent debt, or in
order to raise money to pay off an antecedent debt, or under a sale in
execution of a decree for the father’s debts, his sons, by reason of their duty
to pay their father’s debt, cannot recover that property unless they show that
the debts were contrated for immoral purposes, and that the purchasers had
notice that they were so contracted.”
தந்தை
தன் கூட்டுக் குடும்பத்துக்காக பட்ட கடனை, அவரின் மகன்கள் தீர்க்க வேண்டும் என்பது
இந்து சாஸ்திர சட்டம். இதை pious duty என்கிறது.
இந்து
சாஸ்திர சட்டத்தில் இரண்டு முக்கிய கொள்கைகள் உள்ளனு. முதலாவது: கூட்டு குடும்பச் சொத்தை,
ஒரே ஒரு கூட்டுக் குடும்ப நபர் மட்டும் தனியே விற்பனை செய்து விட முடியாது. மற்ற உறுப்பினர்களின்
சம்மதமும் வேண்டும். ஆனால், வேறு ஏதாவது சட்டக் கட்டயாம் அல்லது தர்ம கட்டாயம் இருக்க
வேண்டும். அதாவது பழைய குடும்பக் கடன் இருக்க வேண்டும் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு
திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம் இருக்க வேண்டும். No
single member of a joint family can sell or mortgage the family property
without the consent of the other members of the family, save for legal necessity or for pious purposes.
இரண்டாவது:
கூட்டு குடும்பத்தின் தலைவர் அந்தக் குடும்பத்தை நடத்த வேண்டி, ஏதாவது கடன் வாங்கி
இருந்தால், அதை அடைப்பதற்காக சொத்தை அவர் விற்கலாம். மற்ற உறுப்பினர்களின் சம்மதம்
தேவையில்லை. ஆனால், அந்தக் கடன் உண்மையில் நல்ல நோகத்துக்கு வாங்கி இருக்க வேண்டும்.
அவரின் கெட்ட நடவடிக்கைகளுக்கு வாங்கிய கடனாக இருக்கக் கூடாது.
இந்த
கொள்கைளை சில நேரம், கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் தவறுதாலகவும் உபயோகிக்க வாய்ப்பு உள்ளது. தந்தை வாங்கிய
பழைய கடன்களை, அவரின் கெட்ட நடவடிக்கைகளுக்கு வாங்கியதாகச் சொல்லி, கடன் கொடுத்தவருக்கு
பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருப்பதற்கு வழி ஏற்படும்.
வேறு
சில குடும்பத்தின் தந்தை, முதலில் ஒரு கடனை
வாங்குவது, பின்னர், அது பழைய கடன் என்று சொல்லி, அதற்கு கூட்டுக் குடும்பச் சொத்தை
அடமானம் எழுதிக் கொடுப்பது. இதுவும் ஒருவகையில் ஏமாற்றும் செயலே. எனவே பழைய கடன் என்பதற்கு
சரியான விளக்கம் இல்லாமல் போய் விட்டது.
**
No comments:
Post a Comment