Possession of property
சொத்து யார் அனுபவத்தில் உள்ளது
என்பதே போதுமானது.
1932-ல் நடந்த வழக்கு: சஞ்சீவப்பா
என்பரின் ஒரு வீடு அவரின் சொத்து. அவருடன் நாராயணப்பா என்பவர் உடன் இருந்து அவருக்கு
உதவி செய்து வருகிறார். சஞ்சீவப்பா இறந்து விடுகிறார். உடன் இருந்த நாராயணப்பா என்பவர்
போலியாக ஒரு உயிலைத் தயாரித்து வைத்துக் கொண்டு இந்த சொத்தைச் சொந்தம் கொண்டாடுகிறார்.
இதற்கு நேர் மாறாக, ஹனுமந்தப்பா
என்பவர் இந்த சொத்தை வேறு நபர்களிடமிருந்து கிரயம் வாங்கி விட்டதாகச் சொல்கிறார். முன்சீப்
கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. கோர்ட் தீர்ப்பின்படி, வாதியின் உயிலும் பொய். பிரதிவாதி
வாங்கிய கிரயத்தை எழுதிக் கொடுத்தவர்களுக்கு இந்த சொத்தில் உரிமை இல்லை. எனவே இருவருமே
வழக்கில் வெற்றி பெற முடியாது. ஆனாலும், வாதி, இறந்தவருடன் சுமார் 5 வருட காலம் அதே
வீட்டில் குடியிருந்து வருகிறார். எனவே வாதியே தொடர்ந்து அந்தச் சொத்தில் அனுபவத்தில்
இருந்து வர உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறுகிறார். அதை எதிர்த்து அப்பீல் வழக்கு.
அப்பீலில் வாதிக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பு. அதை எதிர்த்து வாதி, ஐகோர்ட்டில் மேல்
அப்பீல் வழக்கு.
பிரைவி கவுன்சில் ஒரு வழக்கில்
(1893-ல்) ஒரு தீர்ப்புக் கூறியுள்ளது. அதன்படி, ஒரு சொத்தில் உரிமை இல்லாதவரைக் காட்டிலும்,
அந்த சொத்தில் அனுபவத்தில் இருப்பவருக்கு அதை அனுபவிக்க உரிமை உண்டு என்று சொல்லி உள்ளது.
Possession
of land is sufficient evidence of right as against a person who has no title
whatever and who is a trespasser. எனவே அதன்படி சென்னை ஐகோர்ட்டும்
வாதிக்கு சாதகமான தீர்ப்பைச் சொல்லி விட்டது.
**
No comments:
Post a Comment