மாப்பிளா முஸ்லீம் பழக்க வழக்கம்
ஒரு மாப்பிளா முஸ்லீம் (Mapilla Muslim) தனது 13 வயது மகளை, 1871-ல் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். அப்போது, தன் மகளுக்காக, தனது சொத்தை, அவரின் மருமகனுக்கு தானம் கொடுக்கிறார்.
பொதுவாக, மாப்பிள்ளா முஸ்லீம் சமுதாயத்தில் இப்படிச் செய்வது வழக்கமாம். இப்படி பணத்தையோ, சொத்தையோ தானமாகக் கொடுப்பதை Kasi or Badi என்று சொல்கிறார்கள். அப்படி, மருமகனுக்கு கொடுத்த சீதனத்தை, அவர்கள் வாழும்வரை அனுபவிக்க முடியுமாம். ஒருவேளை, அந்த பெண்ணை விலக்கி வைத்து விட்டால் (Divorce), அல்லது அவள் இறந்து விட்டால், இந்த சீதனத் சொத்தானது, அவளின் பெற்றோருக்கே திரும்ப வந்து விடுமாம். கணவனோ, அவனின் மற்ற வாரிசுகளோ எடுத்துக் கொள்ள முடியாதாம்.
இந்த வழக்கில், அந்தப் பெண், 1877-ல் இறந்து விடுகிறாள். அதாவது திருமணம் ஆன ஆறு வருடங்களில் இறந்து விடுகிறாள். அவளுக்குச் சீதனமாக கொடுப்பட்டதோ ஒரு வீடு. அந்த வீட்டைத்தான், திருமணத்தின் போது மருமகன் பெயரில் (மகளுக்காக) சீதனச் சொத்தாக (Kasi or Badi) என்று எழுதிக் ககொடுத்திருக்கிறார். அந்தப் பத்திரத்தில் துளு மொழியில் அந்த தானம் என்று எழுதப்பட்டுள்ளது.
ஆனால், அந்த சொத்தை, மருமகன் திரும்ப் கொடுக்க மறுக்கிறான். வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. அதில் காசி அல்லது படி (Kasi or Badi) என்ற இரண்டு வார்த்தைகளும் வேறு வேறு அர்த்தத்தை கொடுக்கும் என்றும், இரண்டும் ஒரே அர்த்தத்தை கொடுக்காது என்றும் வாதம்.
Kasi என்பது திருமணம் முறிவு நடந்தால், (Divorce), அல்லது மகள் இறந்து விட்டால், சொத்தைத் தானம் கொடுத்தவர், அதைத் திரும்ப பெறும் உரிமையை அந்த பத்திரத்தில் நிறுத்தி வைத்துக் கொள்வாராம்.
Badi என்பது அப்படி அந்த சொத்தை எப்போதும் திரும்ப பெறும் உரிமையை நிறுத்தி வைத்துக் கொள்ளாமல் எழுதுவதாம்.
ஆனால், இந்த தானப் பத்திரத்தில், "காசி" என்கிற "படி" பத்திரம் என்று எழுதப் பட்டுள்ளதால், இந்தக் குழப்பமாம்.
எனவே, இது எந்த நோக்கத்தில் எழுதிக் கொடுக்கப் பட்டது என்பதையே கோர்ட் பார்க்க வேண்டும் என்பதைப் பொறுத்தே அதன் முடிவு இருக்கும் என்று கோர்ட் சொல்கிறது.
இந்த தானப் பத்திரத்தை, மகளின் திருமணம் முடிந்த மூன்றாவது நாளில் எழுதிக் கொடுத்திருக்கிறார். மகளுக்கு அப்போது 13 வயதுதான் என்பதால், மருமகன் பெயரில் அதை எழுதிக் கொடுத்திருக்கிறார். எனவே மகளுக்காக, அதை, மருமகனுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. இந்த சொத்தை மகளுக்காக, அவரின் மருமகனிடம் பாதுகாவலராக (in trust) கொடுக்கப் பட்டிருக்கிறது. அந்த பத்திரத்தில், மகளும், மகளின் வாரிசுகள் என்பதை (generation to generation) புத்திர பௌத்திர பாரம்பரியமாய் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி எழுதப்பட்டுள்ளது.
எனவே மகளும் அவளின் வாரிசுகளும் அனுபவிக்க கொடுப்பதாகவே கோர்ட் கருதுகிறது. தகப்பன் இந்த சொத்தை திரும்ப பெற்றுக் கொள்வான் என்பது போன்ற எந்த விஷயமும் இதில் இல்லை.
எனவே இது மகளின் தனிச் சொத்துத்தான் என்றும், தகப்பன் திரும்ப பெற முடியாது என்றும் சொல்லிவிட்டது. ஆகையால், மகள் இறந்தவுடன், அவளின் கணவர் சொத்தை எடுத்துக் கொண்டது சரிதான் என்றே கோர்ட் முடிவு செய்கிறது.
Ismail Beari v. Abdul Kadar Beari, (1883) ILR 6 Mad 319
Judgment by: Kindersley & Muthusamy Iyer JJ. of the Madras High Court on 23 Feb 1883.
இந்து சட்டத்திலும் இதேபோன்ற நிலை உள்ளது.
இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956-ல் பிரிவு 15 என்பது ஒரு இந்து பெண்ணின் சொத்து, அவள் இறந்த பின்னர் யார் யாருக்கு போகும் அல்லது யார் யார் அவளுக்கு வாரிசு என்று தெளிவு படுத்தி உள்ளது.
அதன்படி, ஒரு இந்து பெண்ணின் சொத்தை மூன்று வகையில் பிரித்துள்ளார்கள்.
“(1) இந்து பெண்ணின் சுய சம்பாத்திய சொத்து. அவளே கிரயம் வாங்கிய சொத்து. அல்லது அவளின் சீதனமாக அல்லது செட்டில்மெண்டாக பெற்ற சொத்து (இதுவும் அவளின் தனிச் சொத்துத்தான்).
(2) இந்து பெண்ணுக்கு அவளின் கணவர் மூலம் கிடைத்த சொத்து. (அதாவது அவளின் கணவர் இறந்து விடுகிறார். ஆனால் அவள் கணவனின் தகப்பன் பெயரில் சொத்து உள்ளது. அவர் இறக்கும் போது, இவள் கணவனின் பங்காக, இவளுக்கும் ஒரு பாகம் வரும்).
(3) இந்து பெண்ணுக்கு அவளின் தந்தை, தாய் மூலம் கிடைத்த சொத்து. (அதாவது, இவளின் தகப்பன் பெயரில் சொத்து இருக்கிறது. அவர் இறந்து விட்ட பின்னர், மகளின் பங்காக கிடைக்கும் சொத்து).
இப்படி மூன்று வழிகளில் மட்டுமே ஒரு இந்து பெண்ணுக்கு சொத்து கிடைக்கும். வேறு வழிகளில் சொத்து வருவதற்கு வாய்ப்பு இல்லை.
இப்படிப்பட்ட தனது சொத்துக்களை விட்டுவிட்டு, ஒரு இந்து பெண் இறந்து விட்டால், அந்த சொத்தில், அவளின் கணவனும், அவளின் மகன், மகள் இவர்கள் வாரிசு முறைப்படி சரி சமமாக பங்கு அடைவர்.
இன்னொரு நிலை: அவளுக்கு குழந்தைகள் இல்லை என்றால், சொத்து யாருக்கு போகும்?
அப்போதுதான், அவளுக்கு, இந்த சொத்து எப்படிக் கிடைத்தது என்று பார்க்க வேண்டும். முதல் இரண்டு வகைகளில் கிடைத்திருந்தால் (அதாவது, அவளின் தனிச் சொத்தாக இருந்தால், அல்லது அவளின் கணவர் வழி மூலம் கிடைத்திருந்தால்), அவளுக்கு குழந்தை ஏதும் இல்லை என்றால், அந்த சொத்து, அவளின் கணவனுக்கோ, அல்லது கணவன் இறந்து விட்டால், கணவனின் மற்ற வாரிசுகளுக்கு (கணவன் சொத்துப் போல) போய் சேரும்.
அவளுக்கு குழந்தை இல்லாத நிலையில், அவள், தனது தகப்பன், தாய் மூலம் அடைந்த சொத்தாக இருந்தால், கணவனின் வாரிசுகளுக்குப் போகாது. மாறாக, அந்த சொத்தானது, தனது தந்தைக்கும் தாய்க்கும் போகும் அல்லது அவர் உயிருடன் இல்லை என்றால், தந்தையின் வாரிசுகளுக்குப் போகும், அவர்களும் இல்லை என்றால், தந்தையின் வாரிசுக்கும், அவர்களும் இல்லை என்றால், தாயின் வாரிசுகளுக்கும் போய்ச் சேரும். (குறிப்பாக, இப்படிப்பட்ட சொத்து, வந்த வழியிலேயே திரும்ப போய்விடும் என்பது பொருள்.) Reverted back principle.
இந்த முறை எப்படி இருக்கும் என்றால்:
“(1) Firstly – upon the sons, daughters and the husband (including the children of the predeceased son or daughter).
(2) Secondly – upon the heirs of the husband;
(3) Thirdly – upon the heirs of the mother and father;
(4) Fourthly – upon the heirs of the father; and
(5) Fifthly – upon the heirs of the mother.
இதுதான் இன்றைய நடைமுறையில் இருக்கும் சட்டமாகும். இது இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 15-ல் சொல்லப்பட்டுள்ளது.
**
No comments:
Post a Comment