Sunday, September 27, 2020

Mohammedan Gift or Settlement

Mohammedan Gift or Settlement

முகமதியர் செட்டில்மெண்ட் அல்லது தானத்தை ஹிபா (Hiba) என்று முகமதிய சட்டம் சொல்கிறது. ஹிபா என்ற அரபு வார்த்தைக்கு “தானம்” என்று பொருள். 

ஒரு முகமதியர், தனது சொத்தை, ஹிபா என்னும் தானமாக வேறு ஒருவருக்குக் கொடுக்கலாம். அதை வாய்மொழியாகவே கொடுக்க முடியும். பத்திரம் ஏதும் எழுதிக் கொள்ளவோ, பதிவு செய்யவோ வேண்டியதில்லை. இந்திய சுப்ரீம் கோர்ட்டும் இதே கருத்தை உறுதி செய்துள்ளது.

ஆனால் அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், பொதுவாக ஹிபா என்னும் செட்டில்மெண்ட்டை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்வது நல்லது.

சிலர், ஹிபா (வாய்மொழி தானம்) கொடுத்துவிட்டேன் என்று ஒரு உறுதிமொழிப் பத்திரம் மட்டும் எழுதி அதை நோட்டரி பப்ளிக் வக்கீல் மூலம் உறுதி செய்து கொள்வார்கள். அந்த உறுதிமொழிப் பத்திரத்தைக் கொண்டு, அந்த சொத்தை விற்கவோ, அனுபவிக்கவோ, பட்டா, வரி மாறுதல் செய்து கொள்ளவோ முடியும். 

இந்திய சொத்துமாற்றுச் சட்டம் 1882-ன் 122-வது பிரிவு (The Transfer of Property Act 1882, Sec.122)-ல் தானம் (Gift) என்றால் என்ன என்று சொல்லி உள்ளது. இந்தப் பிரிவானது, முகமதியர்களுக்கு பொருந்தாது என்று அந்தச் சட்டத்தில் முதலிலேயே சொல்லப் பட்டுள்ளது.

சொத்து மாற்றுச் சட்டத்தின் பிரிவு 122-ல் ஒரு சொத்தை, உயிருடன் இருக்கும் ஒருவருக்கு கொடுக்கலாம், அல்லது அதுவரை பிறக்காத பிள்ளைக்கும் கொடுக்கலாம், சொத்தின் உடைமையை (Possession) வேறு ஒரு சூழ்நிலையிலும் கொடுக்கலாம் என்று சொல்லி உள்ளது. 

பிரிவு 122-ல் விளக்கி உள்ள தானம் என்பது இப்படி இருப்பதால், அது முகமதியர்களுக்கு பொருந்தாது என்று சொல்லி உள்ளது. முகமதியர்களின் ஹிபா என்னும் செட்டில்மெண்ட் அல்லது தானம், அப்போது உயிருள்ள ஒரு நபருக்குத்தான் கொடுக்க முடியும், அதுவும் தானம் கொடுக்கும் சொத்தின் உரிமை, உடைமை இவைகளையும் அப்போதே கொடுத்து விட வேண்டும். பிறக்காத பிள்ளைக்கு ஹிபா கொடுக்க முடியாது என்று முகமதியர் சட்டம் (ஷரியத் சட்டம் -Shariat Law) உள்ளது. எனவே தான் சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 122 என்பது முகமதியர்களுக்குப் பொருந்தாது என்று அந்தச் சட்டத்திலேயே சொல்லி உள்ளது.

எனவே முகமதியர் செட்டில்மெண்ட் செய்யும் போது, மூன்று விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

“(1) ஹிபா என்னும் செட்டில்மெண்ட் (அல்லது தானம்) பத்திரமாக எழுதி பதிவு செய்ய நினைத்தால், அந்த சொத்தின் உரிமையை, உடைமையை அப்போதே அந்தப் பத்திரத்திலேயே கொடுத்து விட வேண்டும். ஆயுட்கால உரிமையை நிறுத்தி வைத்துக் கொள்வது போல, நிறுத்திக் கொள்ள முடியாது. 

(2) ஹிபா பத்திரத்தில், உயில் போன்ற வாசகங்களை இருக்க கூடாது. எதைத் தானமாக கொடுத்தாலும், அதை அப்போதே கொடுத்து விட வேண்டும். உடைமையை வேறு ஒரு தேதிக்கோ, பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என்றோ எழுத முடியாது.

(3) ஹிபா என்னும் தானத்தை, பிறக்காத பிள்ளைக்கு எழுதி வைக்க முடியாது. அன்று உயிருடன் இருக்கும் ஒருவருக்குத்தான் எழுதி வைக்க முடியும். 

இந்த மூன்று விஷயங்கள்தான், இந்துக்களின் செட்டில்மெண்டுக்கும், முகமதியர்களின் செட்டில்மெண்டுக்கும் உள்ள  வித்தியாசங்கள் ஆகும்.

Sec.122 of Transfer of Property Act 1882 (Gift)

The Gift or Settlement as defined in Sec.122 of the Transfer of Property Act 1882 does not apply to Mohammedans. (This Sec.122 of TP Act applies to all other persons except Mohammedans).

The Mohammedan Gift or Settlement is called “HIBA” (or Gift) under the Mohammedan Law. 

In Mohammedan Law, a Hiba (or generally called Gift) may be oral and there is no need to put it in writing. That is, a Hiba is normally in the form of an oral gift.

But as per Transfer of Property Act and the Registration Act, any transfer of interest in immovable property should be in writing and it should be registered. Therefore, for convenience of future use, this practice of oral Hiba (without registratoin) is not advisable. The Supreme Court also approved the Hiba in the form of oral gift without registration.

But for all practial purposes, it is better to get such Hiba or Settlement or Gift in writing and registration.

Under this Mohammedan Gift or Settlement or Hiba –

“(1) such Gift or Settlement or Hiba should be “an absolute one”  that is “a Mohammedan cannot give his property after his lifetime”. (such after lifetime settlement/gift is possible among Hindus).

(2) in such Gift or Settlement or Hiba, the possession should be given immediately along with the gift deed. The possession of the gifted property cannot be postponed to a future date. (In Hindu settlement deeds, such possession can be postponed to a future date).

(3) in a Hiba (Mohammedan Settlement or Gift), the property cannot be gifted to an unborn person.

Thus these are the three esssential conditions for a Mohammedan Gift or Settlement or Hiba.

Under the present Registration Act in Tamil Nadu:

As per Tamil Nadu Regn Act – a Mohammedan can settle his property to his family members (like that of Hindus) by way of Settlement deed by paying 1% stamp duty or the maximum of Rs.25,000/-.

BUT the three important conditions to be – (1) in such settlement deed, the Settlor (donor) has to settle his property absolutely. There is no question of after lifetime settlement. (2) the possession should be given immdieately. There is no question of postponement of giving possession of the property to a future date. (3) a Mohammedan cannot gifted (Hiba or Settlment or Gift) his property to an unborn person.

Those three things can be permitted among Hindu Settlements. Those are the only three differences between the Hindu Settlement and Muslim Settlement.

**





No comments:

Post a Comment