மதராஸ் சுப்ரீம்கோர்ட்
1862-ல் வீராசாமி நாயுடு என்பவர் பழைய மதராஸ் சுப்ரீம் கோர்ட்டில் கூட்டுக் குடும்பச் சொத்தில் பாகம் வேண்டும் என வழக்கு போடுகிறார். அவரின் சகோதரர் வெங்கடசாமி நாயுடு, இதற்கிடையில் சொத்தை ஏதும் செய்யக் கூடாது என்று தடை வாங்குகிறார். 1863-ல் அந்த சொத்தை விற்பனை செய்து பணத்தை இருவருக்கும் பங்கு பிரித்துக் கொடுக்கும்படி, மாஸ்டர் கோர்ட்டுக்கு மதராஸ் சுப்ரீம் உத்தரவு இடுகிறது. 1866-ல் இந்த சொத்து ஏலத்தில் விற்கப்படுகிறது. விர்ஜிலால் என்பவருக்காக அருணாசல முதலி என்பவர் ஏலம் எடுக்கிறார். விர்ஜிலால் இறந்து விடுகிறார். அவருக்கு தேவகிபாய் என்ற மனைவியும், ஜமுனாபாய் என்ற மகளும் வாரிசுகள்.
அருணாசல முதலி ஒரு உயில் எழுதி வைத்து, அதில் இந்த சொத்தை விர்ஜிலால் வாரிசுகளுக்கு கொடுத்து விடும்படி சொல்கிறார். அதை நிறைவேற்ற சண்முகமுதலி மற்றும் ஏகாம்பர முதலி இருவரையும் எக்சிகியூட்டராக நியமிக்கிறார். 1873-ல் அவர்கள் இருவரும் இந்த சொத்தை தேவகிபாய்க்கு எழுதிக் கொடுத்து விடுகிறார்கள்.
தேவகிபாய் 1875-ல் இறந்து விடுகிறார். அவர் ஒரு உயிலை எழுதி வைத்தார். அதில் ஜமுனாபாய்/ வாதியை எக்சிகியூட்டராக நியமித்துள்ளார். ஆனால் அப்போது சொத்து பிரதிவாதிகளின் அனுபவத்தில் உள்ளது.
பழைய பாக வழக்கு இருக்கும்போதே, வெங்கடசாமி நாயுடு இந்த சொத்தை ஒருவருக்கு அடமானம் வைத்து விடுகிறார். அதற்கு பணம் கொடுக்கவில்லை என்று அந்த சொத்து ஏலத்துக்கு வருகிறது. பணம் கொடுத்தவரே ஏலம் எடுத்து விட்டார். அவரே சொத்தின் அனுபவத்தில் உள்ளார்.
பாகப்பிரிவினை வழக்கு இருக்கும்போதே, அடமானம் இருந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, மதராஸ் சுப்ரீம் கோர்ட், பாகப் பிரிவினை வழக்கில் இதை ஏலம் போட்டது செல்லுமா என்ற கேள்வியை, அடமான கடன் மூலம் ஏலம் எடுத்து சொத்தின் அனுபவத்தில் உள்ளவர் கேள்வி எழுப்புகிறார்.
பாகவழக்குப் போடும் போது, அது மதராஸ் ஐகோர்ட்டஆக இருந்தது. பின்னர் ஏலம் போடும்போது அது 1862-ல் மதராஸ் சுப்ரீம் கோர்ட்டாக ஆகி விட்டது. 1865-வரை அப்படி சுப்ரீம்கோர்ட்டாக இருந்தது. இரண்டாவது லெட்டர்ஸ் பேட்டண்ட் சட்டத்தில்தான் மதராஸ் ஐகோர்ட்டுக்கு சொத்து வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொடுத்துள்ளது.
பாக வழக்கில் பிரதிவாதி வெங்கடசாமி நாயுடுவுக்கு சொத்தை விற்க கூடாது என்று தடை கொடுத்தது என்பது மொத்த சொத்துக்கும் இல்லை. அவரின் பாகம் போக மற்ற பாகத்தை விற்க கூடாது என்றுதான் அர்த்தம். மேலும், அந்த ஏலக் கிரயத்தை ஒரு வருடத்துக்குள் கேள்வி கேட்டிருக்க வேண்டும். மேலும், ஏலக் கிரயப் பத்திரம் பதிவு செய்யப்படவில்லை என்பதால், அது கோர்ட்டில் ஒரு சாட்சியமாக ஏற்க முடியாது.
மதராஸ் ஐகோர்ட் கட்டிடத்தை 1862-ல் கட்டி முடிக்கிறார்கள். அதன் பின்னர், 1865-ல் லெட்டர்ஸ் பேட்டண்ட் சட்டம் வருகிறது. அதில் மதராஸ் நகர் பகுதிக்கு வெளியே இருக்கும் சொத்துகளை பற்றி வழக்கை மதராஸ் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய முடியும் என்று சட்டம் வருகிறது.
எனவே இந்த பாக வழக்கு நடக்கும்போது, மதராஸ் ஐகோர்ட்டுக்கு, நகரைத் தாண்டி உள்ள சொத்துக்களின் வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை. எனவே அந்த டிகிரி செல்லாது. அதை தொடர்ந்து மதராஸ் சுப்ரீம்கோர்ட் கொண்டு வந்த ஏலக் கிரயமும் செல்லாது. எனவே அருணாசலம் ஏலம் எடுத்தது செல்லாது.
இந்த தீர்ப்பை நீதிபதி முத்துசாமி ஐயர் கூறி உள்ளார். (1882) ILR 5 Mad 54.
**
No comments:
Post a Comment