பொது அதிகாரப் பத்திரம்-2
பொது
அதிகாரப் பத்திரம் என்னும் ஜெனரல் பவர் பத்திரத்தில், ஒரு வேலைக்குப் பதிலாக, பல
வேலைகளோ அல்லது அந்த ஒரு வேலையைத் தொடர்புடைய பல தொடர் வேலைகளையோ செய்யவதற்காக
எழுதிக் கொள்ளலாம்; உதாரணமாக ஒரு சொத்தை நிர்வகித்து வரவும், வரி செலுத்தி வரவும்,
அடமானம் வைத்துக் கொள்ளவும், அடமானப் பத்திரம் எழுதிக் கொடுக்கவும், கிரய விற்பனை செய்யவும்,
கிரயப் பத்திரம் எழுதிக் கொடுக்கவும், லீஸ் என்னும் வாடகைக்கு விடவும், கட்டிடம்
கட்டவும், அப்ரூவல் வாங்கவும், வாடகை வசூல் செய்யவும், வாடகைதாரரை காலி செய்யவும்,
கோர்ட்டில் வழக்கு தொடரவும், வக்கீல் நியமித்துக் கொள்ளவும், இப்படி பல வேலைகளைக்
குறிப்பிட்டு ஒரே பவர் பத்திரத்தில் எழுதிக் கொள்ளலாம்; அல்லது, கிரயம் செய்ய
மட்டுமே பவர் பத்திரம் எழுதிக் கொள்ளலாம்; கிரய செய்து கொள்ள மட்டும் என்று எழுதி
இருந்தாலும், அது ஒரே ஒரு வேலை என்று சட்டம் கருதவில்லை; அதை பல வேலைகள்
கொண்டதாகவே சட்டம் கருதுகிறது; அதாவது, கிரயப் பத்திரத்தை எழுதிக் கொடுப்பது ஒரு
தனி வேலை; அதை ஒப்புக் கொண்டு பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து கொடுப்பது வேறு
ஒரு தனி வேலை; சொத்தின் சுவாதீனத்தைக் கொடுப்பது தனி வேலை; இப்படி பல வேலைகள்
இருப்பதால், அதை பொது அதிகாரப் பத்திரம் அல்லது ஜெனரல் பவர் பத்திரம் என்ற
வகையில்தான் எழுதிக் கொடுக்க முடியும்;
பொது
அதிகாரப் பத்திரத்தை ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதிக் கொள்ள வேண்டும்;
பல வேலைகள் அதில் இருந்தாலும், அதையும் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;
நோட்டரி வக்கீல் சான்று பெற்றுக் கொண்டாலே போதும்; ஆனால், அசையாச் சொத்தினை
விற்பனை செய்வதற்காக எழுதிக் கொள்ளும் பொது அதிகாரப் பத்திரமாக இருந்தால் மட்டும்
அதைக் கண்டிப்பாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற
கட்டாயம் இருக்கிறது;
பொதுவாக
ஒரு பொது அதிகாரப் பத்திரத்தில் ஒரே ஒரு ஏஜெண்டை மட்டும் நியமிப்பது பொதுவான
பழக்கம்; ஆனால் அதற்கு மேலும் ஏஜெண்டுகளை நியமித்துக் கொள்ள தடை ஏதும் இல்லை;
ரூ.100 முத்திரை தாளில் எழுதிக் கொள்ளும் பொது பவர் பத்திரத்தில் மிக அதிகபட்சமாக
ஐந்து ஏஜெண்டுகளை ஒரே நேரத்தில் நியமித்துக் கொள்ளலாம்; அதற்கு மேல் ஏஜெண்டுகளை
நியமிக்க வேண்டும் என்றால் ரூ.175 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதிக் கொள்ள
வேண்டும்;
No comments:
Post a Comment