Wednesday, January 16, 2019

ஐகோர்ட் தீர்ப்பின் வெப் சைட் காப்பி போதுமானது


ஐகோர்ட் தீர்ப்பின் வெப் சைட் காப்பியே போதுமானது என்று புதிய முறை:

ஐகோர்ட்டின் தீர்ப்புகளை ஐகோர்ட்டின் வெப் சைட்டில் இருந்து பதிவு இறக்கம் செய்து கொண்ட காப்பிகளே போதுமானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.

பொதுவாக, ஐகோர்ட் நீதிபதி தன் தீர்ப்பைக் கூறியவுடன், அந்தத் தீர்ப்பின் பேப்பரில் கையெழுத்துப் போடுவார். அது ஐகோர்ட் அலுவலகத்தின் மூலம் சான்றிட்ட நகலாக அது சம்மந்தப்பட்ட வக்கீல்களுக்கும், பார்ட்டிகளுக்கும் கொடுக்கப்படும். இதற்கு காலதாமதம் ஆகி வரும் நிலை இருந்து வருகிறது. சில தீர்ப்புகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து அன்றே தீர்ப்பின் நகல் கிடைக்கும்படி உத்தரவு இருக்கும். மற்ற வகைகளில் தீர்ப்பின் காப்பியை வாங்க நாள் கணக்கில் ஆகிவிடும்.

எனவே இதற்கு தீர்வாக, இப்போது, அப்படி நீதிபதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்த தீர்ப்பை, சென்னை ஐகோர்ட்டின் வெப்-சைட்டான www.hcmadras.tn.nic.in. என்ற முகவரியிலிருந்து சம்மந்தப்பட்ட வக்கீல் பதிவிறக்கம் செய்து, அதை சான்றிட்டு சம்மந்தபட்ட காரணங்களுக்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்றும், அவ்வாறு அரசு அதிகாரிகளும் அந்த காப்பியைப் பெற்று அதன் உத்தரவுகளை நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும், அவர்களும் அந்த வெப்-சைட் முகவரியில் அந்த தீர்ப்பை படித்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கூறி உள்ளது.

இது ஒரு வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இனி, தீர்ப்பின் நகலுக்காக காத்திருக்கத் தேவையில்லை.

**

Tuesday, January 15, 2019

Age of ink and writings

Age of the INK and expert opinion

The Madras HC has held in P.R.RAMAKRISHNAN vs. P.GOVINDARAJAN  [(2007) 1 MLJ (Crl) 1297] that when the accused disputes his signature in the cheque in question in a proceeding under Sec.138 of the Negotiable Instruments Act, the court has to afford an opportunity to the accused to obtain an expert's opinion as to the genuineness or otherwise of the signature found therein. The above ratio will not apply to a case where a cheque admittedly signed by the drawer is sought to be analysed by an expert for opinion as to the age of the ink used in the cheque.

13. In YASH PAL v. KARTAR SINGH (AIR 2003 Punjab and Haryana 344), it has been observed that the age of the ink cannot be determined on the basis of the writing if the ink in dispute was manufactured five years prior to the date of execution of the document and used effectively on a particular date for the first time and an expert's opinion as to the age of ink will not resolve any controversy, but, it will help to create only confusion.

14. As rightly observed by the Punjab and Haryana High Court in the ratio referred to above, if an old ink is used by the person, who assisted the drawer who had already put his signature in the cheque, to fill up the matter, no useful purpose will be served if such a cheque is analysed by the expert for rendering an opinion.

15. It is found that the age of the ink cannot be determined by an expert with scientific accuracy. Further, the use of old ink manufactured long ago will definitely create a dent in the opinion furnished by an expert. Therefore, there is no necessity for sending the disputed cheque admittedly signed by the petitioner to an expert for his opinion. The order passed by the learned Judicial Magistrate I, Erode in C.M.PNo.2915 of 2007 in C.C.No.1287 of 2006 does not suffer from any illegality or impropriety. Therefore, there is no warrant for interference with the well considered order passed by the Trial Court.

Saturday, January 12, 2019

Eminent Domain

Eminent Domain

எமினென்ட் டொமைன் (Eminent Domain).

ஒரு அரசாங்கமானது, மக்களின் சொத்துக்களை தன்னிச்சையாக பறித்துக் கொள்ளும் அதிகாரம் இது. ஒரு அரசின் பொது உபயோகத்துக்கு, அந்த சொத்து தேவைப்பட்டால், மக்களிடம் உள்ள அந்த சொத்தை எடுத்துக் கொள்ளும் அதிகாரம். இதை மக்கள் கேள்வி கேட்க முடியாது. இத்தகைய உரிமையை அரசு வைத்திருப்பதால் அதற்கு எமினென்ட் டொமைன் Eminent Domain என்று பெயர்.

இந்த வார்த்தையானது டச்சு மொழியில் “The Law of War and Peace” என்ற புத்தகத்தை எழுதியவர் 1625-ல் குறிப்பிட்டுள்ள வார்த்தையாம். The term “dominium eminens” என்பதை லத்தீன் மொழியில் “supreme lordship” என்கிறார்களாம்.

மக்களின் சொத்தை மட்டும் எடுக்கும் அதிகாரம் மட்டும் இல்லை. மக்களிடமிருந்து எதை வேண்டுமானாலும், வியாபாரம், வியாபார யுக்தி (trade secret), காப்பி-ரைட் உரிமை, போன்ற எதை வேண்டுமானாலும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் உரிமை உண்டாம்.

எமினென்ட் டொமைன் என்பது ஒரு பொதுவான வார்த்தை தானாம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கு வேறு வேறு பெயர் கொடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறார்களாம்.

அமெரிக்காவிலும் பிலிப்பைன் நாட்டிலும் இதை Eminent Domain என்கிறார்களாம்.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இதை Land Acquisition என்கிறார்களாம்.

இங்கிலாந்து, நீயூசிலாந்து, அயர்லாந்து நாடுகளில் இதை Compulsory Purchase என்கிறா்களாம்.

ஹாங்காங், உகண்டா நாடுகளில் இதை Resumption என்கிறார்களாம்.

ஆஸ்திரேலிய நாட்டில் இதை Resumption or Compulsory Acquisition என்கிறார்களாம்.

பிரான்ஸ், இத்தாலி, மெக்சிகோ, தென்ஆப்பிரிக்கா, கனடா, பிரேசில், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சிலி, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி, பனாமா போன்ற நாடுகளில் இதை Expropriation என்கிறார்களாம்.

இந்தியாவில் “எமினெனட் டொமைன்”:

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதலில் இப்படிப்பட்ட உரிமை இல்லையாம். மக்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டு இருந்தது. அது ஒரு அடிப்படை உரிமையாக இருந்தது. மக்கள், சொத்தை வாங்கவும், விற்கவும், அனுபவிக்கவும், முழு உரிமை இருந்தது. அரசு நினைத்தால், மக்களின் சொத்தை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், அது மக்களின் அடிப்படை உரிமையாக இருந்தது. அதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஆர்ட்டிகிள் 19 & 31 இவைகளில் உறுதி செய்திருந்தது. பொது உபயோகத் தேவைக்கு மட்டும் (பெரிய ரோடுகள், அணைகள், ரயில் பாதை, ஏர்போர்ட்) எடுத்துக் கொள்ளும் சிறிய அதிகாரத்தை மட்டும் 1894-ல் கொண்டு வந்த, The Land Acquisition Act, 1894 சட்டத்தில் வைத்திருந்தது. அப்படி எடுத்துக் கொள்ளும் போது, நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று மட்டும் இருக்கிறது. போதுமான நஷ்ட ஈடு கிடைப்பதில்லை.

ஆனால், இப்போது, அந்த நிலை மாறி விட்டது. அரசு நினைத்தால், மக்களின் எந்த நிலத்தையும், சொத்தையும் கையகப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அதற்குறிய நஷ்ட ஈட்டைக் கொடுத்து விடும். அவ்வளவே. சொத்தை கொடுக்கு மாட்டேன் என்று சொல்ல முடியாது. இப்படி, நிலத்தை கையகப்படுத்தும் சட்டத்தை, மத்திய அரசும் கொண்டு வரலாம், மாநில அரசுகளும் கொண்டு வரலாம் என்று திருத்தி விட்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் 7-வது அட்டவனையிலும் சேர்த்து விட்டது. (7-வது அட்டவனை என்பது, சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட விஷயங்களை மத்திய அரசும் மாநில அரசுகளும் செய்யும் அதிகாரம் கொண்டவை; அதில் சில, மத்திய அரசுக்கு மட்டுமே சட்டம் இயற்றும் உரிமை உள்ள பகுதிகள்; சில மாநில அரசுகள் மட்டுமே சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட பகுதிகள்; மற்றும் சில, இரண்டுமே சட்டம் இயற்றிக் கொள்ளும் அதிகாரம் கொண்ட பகுதிகள்).

1978-ல் 44-வது திருத்தல் சட்டம்:

இந்த, மக்களின் சொத்துரிமை என்னும் சொத்தை அனுபவிக்கும் உரிமையை 1978-ல் இந்திய அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி மாற்றிக் கொண்டு விட்டது. இதன்படி, ஏற்கனவே, சொத்துரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமையாக இருந்து வந்ததை, இனி அப்படி இல்லை என்றும், அது ஒரு அடிப்படை உரிமை இல்லை என்றும் சொல்லி விட்டது. அரசு நினைத்தால், நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று மாற்றிக் கொண்டது (நஷ்ட ஈடு கொடுக்கும்; ஆனால், நாம், நிலத்தை அரசுக்கு கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. அந்த உரிமை பறிபோய் விட்டது). எனவே இந்த 44-வது திருத்தல் சட்டத்தின் மூலம், புதிய ஆர்ட்டிக்கிள் ஒன்றைக் கொண்டு வந்தது. அது ஆர்ட்டிகிள் 300-ஏ. அதன்படி, மக்களுக்கு சொத்துரிமை இருக்கும், ஆனால் அது அடிப்படை உரிமையாக இருக்காது, அரசு நினைத்தால் அந்த சொத்தை எடுத்துக் கொள்ள முடியும், அதற்கு சட்டம் இயற்றி, நஷ்ட ஈடு கொடுத்து எடுத்துக் கொள்ளலம். மக்கள், தன் அடிப்படை உரிமையை அரசு பறிக்கிறது என்று அதை கேள்வி கேட்க முடியாது.

இந்தியாவில் Land Acquisition Act, 1894 இருந்தது. இதை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி பொது ரோடு போன்றவைகளுக்கு மக்களின் நிலத்தை கையகப்படுத்த சட்டம் இருந்தது. ஆனால், பின்னர், மாநில அரசுகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதே காலத்தில், பெரிய தொழிற்சாலைகள் அமைக்க தனியாருக்கும் நிலம் தேவைப்பட்டதால், அரசே ஏஜெண்டாக இருந்து, மக்களின் நிலத்தை கையகப்படுத்தி அவர்களுக்கு கொடுத்து வந்தது. இதில் போதுமான நஷ்ட ஈடு கிடைக்க வழி இல்லை. நிலத்தை பறி கொடுத்தவர்களின் நிலை பரிதாபகரமாகவே இருந்தது.

அதை மாற்றி, இப்போது மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை 2013-ல் கொண்டு வந்தது. அது The Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 என்று பெயர். இதை சுருக்கமாக LARR சட்டம் என்றும் சொல்வர். இது 2014 ஜனவரி 1-முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய சட்டம் ஏன் வந்தது என்றால், அரசு நிலத்தை பழைய சட்டப்படி எடுக்கும் போது, விவசாயிகள், குடியிருக்கும் மக்கள் திரண்டு போராட ஆரம்பித்தார்கள். எனவே அவர்களுக்கு போதுமான நஷ்ட ஈடும், பாதுகாப்பும், வேறு நிலங்களை ஒதுக்கிக் கொடுக்கவும் வகை செய்யும் படி, இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்தார்கள். இதில் போதுமான நஷ்ட ஈடு கிடைக்கும்.

பழைய சட்டமான 1894-ல் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றால், அது ரோட்டுக்காகவோ, பாலங்கள் கட்டவோ, ரயில் பாதை ஏற்படுத்தவோ, ஏர்போர்ட், அணைக்கட்டு கட்டவோ மட்டுமே எடுக்க முடியும் என்று இருக்கிறது.

அமெரிக்காவில், பொது உபயோகத்துக்கு மக்களின் நிலங்களை கையகப் படுத்தினால், போதுமான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.

நிலத்தை அரசு கையகப்படுத்துவது சரியா?

இப்படி பல வழக்குகள் வந்துள்ளன. தனி மனிதன் ஒருவன், சொத்து வைத்திருப்பதை, பறிப்பதைப் போல ஆகும் என்றும் அவனின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும் என்றும் பல வாதங்கள் இருந்த போதிலும், பொது நன்மையை கருதும் போது, தனி மனித உரிமை சிறியதாக ஆகி விடும் என்று கோர்ட்டுகள் விளக்கம் கொடுத்து விட்டன. அதுபோக, தனியார் தொழிற்சாலைகளுக்கு, மக்களின் நிலங்களை கையகப் படுத்தவது ஏன் என்ற கேள்வி வரும்போது, நாட்டின் தொழில் வளம் அதிகப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தனி மனித சொத்து உரிமையில் தலையிடலாம் என்றும் விளக்கம் கொடுத்து விட்டன.

ஆக, இந்தியாவில், தனி மனிதனின் சொத்துரிமை என்பது, அரசின் கொள்கைப்படியே இருக்குமே தவிர, அது அவனின் அடிப்படை உரிமையாக இருக்காது.

**

Monday, January 7, 2019

Leprosy not a ground for divorce


Leprosy not a ground for divorce:

A bill seeking to remove leprosy as a ground for divorce was passed by the Lok Sabha on January 7, 2019.

“Leprosy is being removed as a ground for divorce as it is now a curable disease as against the earlier notion of it being incurable’, minister of State for Law PP Chaudhary while replying to a discussion on The Personal Laws (Amendment) Bill, 2018.

The bill seeks to remove leprosy as a ground for divorce in five personal laws – Hindu Marriage Act, Dissolution of Muslim Marriages Act, Divorce Act (for Christians), Special Marriage Act and the Hindu Adoption and Maintenance Act.
India is a signatory to a UN Resolution which calls for elimination of discrimination against persons suffering from leprosy.
**

மூன்றாம் பாலினம் - நல்சா வழக்கு 2014


மூன்றாம் பாலினம் - நல்சா வழக்கு 2014
இது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து ஒரு முக்கிய வழக்கு.
The National Legal Services Authority (NALSA) v. Union of India 2014
இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட், டிரான்ஸ்ஜெண்டர் என்னும் பாலினம் மாறியவரை “மூன்றாம் பாலினம்” என்று குறிப்பிட வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தது.
நல்சா அமைப்பு, சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு சட்ட உதவி செய்யும் அமைப்பு.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான Justice கேஎஸ் பனிக்கர் ராதாகிருஷ்ணன் மற்றும் Justice அர்ஜன் குமார் சிக்கிரி ஆகிய இருவரும் விசாரித்தார்கள்.
ஆணும் பெண்ணும் சட்டத்தில் சமம் என்பது போல, மூன்றாம் பாலினமும் சட்டத்தில் சமம் என்றே கருத வேண்டும். அவர்களையும் ஒரு பாலினப் பிரிவாக சட்டங்களில் அங்கீகரிக்க வேண்டும். படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கு எல்லோரையும் போலவே வாய்ப்பு வழங்க வேண்டும்.
அவர்களை தரம் பிரிப்பதில், பயாலாஜிகல் முறைப்படி அல்லாமல் (அவர்களின் பிறப்பு உறுப்பு அடைப்பையில் அல்லாமல்) அவர்களின் மன விருப்பத்தின்படி, எந்த பாலினத்தை சேர்ந்தவர் என்று அடையாளப் படுத்த வேண்டும். அவர்களை பிறப்பு உறுப்பு அறுவைச் சிகிச்சை செய்தால் தான் அந்த பாலினம் என்று அடையாளப்படுத்த முடியும் என்று கட்டாயப் படுத்த முடியாது. அப்படி செய்தால் அது சட்டவிரோதம்.
இந்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு 2008 ஏப்ரல் 15ம் தேதி வந்தது. எனவே அந்த நாளை “டிரான்ஸ்ஜென்டர் நாளாக” கொண்டாடுகிறார்கள்.
தமிழக அரசு, “அரவாணி (டிரான்ஸ்ஜென்டர்) வெல்பர் போர்டு என்ற அமைப்பை ஏற்படுத்தியது.
அவர்களை ஓபிசி என்ற நிலையில் வைத்து சலுகைகள் வழங்க வேண்டும்.
அவர்களை வெறுப்பதை மாற்ற, மத்திய அரசு சமுதாய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
தனி கழிவறை கட்டித் தர வேண்டும். எல்லா இடங்களிலும்.
ஐபிசி செக்‌ஷன் 377ன்படி அவர்களை போலீஸ் தொந்தரவு செய்கிறது. அதை தடுக்க வேண்டும்.
அலிகளை மட்டும் மாற்று பாலினம் என்று எண்ணாமல், கே, லெஸ்பியன், பை-செக்சுவல் இவர்களையும் அதே நிலையில் ஏற்க வேண்டும்.
ஐபிசி செக்‌ஷன் 377:
பிரிட்டீஸ் ஆட்சியில் 1864-ல் இதைக் கொண்டு வந்தது.
Buggery Act of 1533 என்ற சட்டத்தின் அடிப்படையில் இதை கொண்டு வந்தனர்.
இயற்கைக்கு மாறான உடல் உறவு வைப்பவர்களை இந்த சட்டம் தண்டிக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டில், 2018, செப் 6-ல் ஒரு தீர்ப்பு அதை ஒட்டி வந்தது. அது, செக்‌ஷன் 377-ன் அடிப்படையில் விருப்பத்தின் பேரில் ஹோமோ செக்சுவல் உறவு கொண்ட இருவரை இந்த செக்‌ஷன்படி தண்டிப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று சொல்லி உள்ளது.
ஆனாலும், செக்‌ஷன் 377-க்கு இன்னும் நடைமுறை உள்ளது. அதன்படி, மைனர்கள், சம்மதம் இல்லாத உடல்உறவுகள், இயற்கைக்கு புறம்பான உடல் உறவுகள் இவைகளை குற்றம் என்றே சொல்கிறது.
டெல்லி ஐகோர்ட் ஒரு வழக்கில், ஜூலை 2009-ல் ஹே செக்ஸ் என்பதன் அடிப்படையில் ஐபிசி 377ல் குற்றம் சுமத்துவது சட்ட விரோதம் என்று சொல்லியது.
பின்னர், அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் போனது. 2013 டிச 11ல், டில்லி ஐகோர்ட் தீர்ப்பு தவறு என்று சொல்லி விட்டது. ஏனென்றால், ஒரு சட்டத்தை திருத்துவதும் மாற்றுவதும் பார்லிமெண்ட்டின் கையில் தான் உள்ளது. கோர்ட்டுக்கு இல்லை என்று சொல்லி விட்டது.
இதை எதிர்த்து க்யூரேட்டிவ் பெட்டிசன்கள் போடப்பட்டன.
எனவே சுப்ரீம்கோர்ட், மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, 2016 பிப் 6-ல் இதை 5 நீதிபதிகள் பெஞ்சுக்கு அனுப்பி விட்டது.
5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், 2017 ஆக, 24-ல் ஒரு தீர்ப்பை சொன்னது. அதன்படி, இது ஒரு தனிமனித உரிமை சார்ந்தது என்றும், ஐபிசி 377ன்படி தண்டனைக்கு உரிய குற்றம் இல்லை என்றும் சொல்லி விட்டது.
பின்னர் நடந்த சுப்ரீம் கோர்ட் வழக்கில், 2018 ஜன ல் நாஜ் பவுண்டேசன் வழக்கில் ஐபிசி செக்‌ஷன் 377 அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று சொல்லி விட்டது.
**






Sunday, January 6, 2019

Concubine meaning

Concubine meaning:

1956ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு. கும்பகோணம் சப்-கோர்ட்டில் நடந்த வழக்கின் அப்பீல் வழக்கு இது.

மகாலிங்கம் என்பவரின் மனைவி அம்சவள்ளி. மனைவி தன்னை விட்டுவிட்டுச் சென்று விட்டதாகவும், வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாகவும் எனவே இவர்களுக்குள் நடந்த திருமணத்தை ரத்து செய்யும்படியும் வழக்கை கணவர் தாக்கல் செய்கிறார்.

ஆனால் கணவர் அவரின் சகோதரி உறவு உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், தான் தட்டிக் கேட்டதால், இவரின் தாலியைப் பறித்துக் கொண்டு, அவரை அடித்து விரட்டி விட்டதாகவும் சொல்கிறார். மனைவியின் கள்ள உறவை நிரூபிக்கவில்லை என கும்பகோணம் கோர்ட், கணவரின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. அதன்மீது, சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கை கணவர் தாக்கல் செய்கிறார்.

சென்னை மாகாணச் சட்டம் 6/1949, பிரிவு 5 (1)பி)-ன்படி, ஒரு திருமணம் ஆன பெண், வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தால், கணவர் அந்த திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்று உள்ளது.

இந்த 1949 சட்டம் 1956ல் ரத்து ஆகிறது. அதன் படி புதிய சட்டம் உருவாகிறது. இந்து திருமணச் சட்டம் 25/1955. புதிய சட்டத்தின் பிரிவு 13-ன்படி, மனைவியை ரத்து செய்ய வேண்டும் என்றால், அந்த மனைவி வேறு ஒருவருடன் தொடர்ந்து கள்ளத் தொடர்பில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று உள்ளது. living in adultery. இல்லையென்றால், பிரிவு 13-படி அத்தகைய குற்றச்சாட்டு, மனைவியை தள்ளிவைத்து வாழ மட்டும் வழி செய்யும். Judicial separation.

வைப்பாட்டி என்ற சொல் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் உபயோகிக்கும் சொல். Concubine. கணவன் மனைவி போல வாழ்பவர்கள் என்று பொருள்.

“con” meaning “with”, “cubere” meaning “to lie”. The definition of a concubine is given as a woman who cohabits with a man without being his wife.  A kept mistress.

A concubinage is defined as the state of a woman who sustains a relation involving continuous and regular illicit intercourse with a man to whom she is not a wife. Such a relation need not exist for any considerable period of time to constitute concubinage. The wife without a title.

Concubinage is that act or practice of cohabiting in sexual intercourse without the authority of law or legal marriage.

வைப்பாட்டி முறை பல நாடுகளில் பின்பற்றபட்டு வந்தாலும், கிறிஸ்தவத்தில் அது இல்லை.

The distinction between a wife and concubine and harlot is that a concubine is below that of a harlot.

In Shakespeare quotation “I know I am too mean to be your Queen: And yet too good to be your concubine.” A concubine is to be distinguished from a harlot. The harlot solicits to immorality, the concubine is reserved by one man.

விபச்சாரி பல பேருடன் தொடர்பில் இருப்பவள். வைப்பாட்டி ஒரேயொரு ஆணுடன் மட்டும் மனைவி போல வாழ்பவள்.

இந்து சட்டத்தில் இந்த வைப்பாட்டி முறை அங்கீகாரம் பெற்றிருந்தது. வைப்பாட்டிக்கு சட்டபூர்வ உரிமையாக வாழ்க்கை ஜீவனாம்சம் கிடைக்க வழி இருந்தது என கார்த்யாயனா மற்றும் நாரதா வியாக்கியானங்களில் சொல்லப் பட்டுள்ளது.

ஒரு பெண், ஒரு ஆணுடன் மட்டும் திருமணம் ஆகாமல் தொடர்ந்து உறவில் இருந்து வந்தாள் என்றால் அவளை வைப்பாட்டி என்பர். அவளை விபச்சாரி என்று சொல்ல மாட்டார்கள்.

கவி காளிதாசன் எழுதிய மேகதூதம் என்ற நூலில் மூன்று பிரிவாகச் சொல்கிறான். பன்யஸ்திரி, அபிசாரிகா, வேசியா. சமஸ்கிருத பண்டிதர்கள் வைப்பாட்டியையும் விலைமகளையும் வேறுபடுத்தி உள்ளனர். வர்ணதாசி அல்லது பூஜிசிய வேசிமகள் என்றும் ஓவருதா அல்லது வைப்பாட்டி அல்லது இரண்டாம் மனைவி அல்லது ஸ்வைரிணி.

சென்னை மாகாணச் சட்டம் The Madras Suppression of Immoral Traffic Act, Sec.4(e)  ன்படி காசுக்காக உடலை விற்பவர் வேசி என்று கூறப்பட்டுள்ளது.

ஆக, இந்த வழக்கில் கணவரின் குற்றச்சாட்டு என்னவென்றால், அவரின் மனைவி வேறு ஒருவரின் வீட்டில் வேலை செய்து வருகிறார். அந்த வீட்டின் மனிதருடன் உறவு வைத்துள்ளார். ஆனால் அங்கு அந்த மனிதருக்கு மனைவி, குழந்தைகள், தாய், தந்தை, ஆகி கூட்டு குடும்பத்தில் வாழ்கிறார். எனவே அவர் இவரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் வாழ்கிறார் என்று சொல்லி விட முடியாது என ஐகோரட் முடிவு செய்து அவரின் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. இந்த வழக்கு (1956) 2 MLJ 289 என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.

**