Sunday, July 27, 2014

ஹேபியஸ் கார்பஸ் வழக்கு

வயதுவந்த பெண்ணை பெற்றோர் அடைத்துவைத்தல் குற்றமா?

வயதுவந்த மகளை, அவள் விருப்பப்பட்ட இளைஞனுடன் சேர்ந்து இருக்க விடாமல், அவளின் தகப்பன், அவளை தன்வீட்டை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுத்து வைப்பது 'சட்டத்துக்கு புறம்பான காவலா' என்ற கேள்விக்கு சமீபத்தில் கேரளா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பின் சாரங்கள்:

ஒரு ஆண் டாக்டர், உடன் வேலைசெய்யும் பெண் டாக்டரை காதலித்தார். இளைஞனோ வேறு ஜாதியைச் சேர்ந்தவன் என்பதாலும், அவன் வேறுசில பெண்களுடன் பழக்கம் உள்ளவன் என்பதாலும், அந்தப் பெண்ணின் தகப்பனார், அந்தப் பெண்ணை வீட்டைவிட்டு வெளியே செல்லவிடாமல் வீட்டிலேயே காவல் வைத்தார்.

இதை தெரிந்த அந்த இளைஞன், கேரளா ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் (Habeas Corpus) என்னும் ஆள்கொணர்வு மனுவை போட்டான். (கேபியஸ் கார்பஸ் என்றால், யாரையாவது சட்டத்துக்குப் புறம்பான அடைத்து வைத்திருந்தால், (காவல்துறையாக இருந்தாலும் சரி, தனி நபராக இருந்தாலும் சரி) அது அந்த நபரின் சுதந்திரத்தை பறித்ததற்கு சமம். எனவே இந்த ரிட் மனுவை ஐகோர்ட்டில் போட்டு, அவ்வாறு சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைத்திருப்பவரை விடுதலை செய்ய உத்தரவு இடுவதற்குப் பெயர்தான் கேபிஸ் கார்பஸ் அல்லது ஆள் கொண்ர்வு).

அந்த மனுவை யார் வேண்டுமானாலும் யாருக்காக வேண்டுமானாலும் போடலாம். அப்படி, அந்த இளைஞன் அந்த மனுவை போட்டு அவளை தனது தகப்பன் பாதுகாப்பிலிருந்து கோர்ட்டுக்கு கொண்டு வந்துவிட்டான். கோர்ட் அந்தப் பெண்ணை ஒரு விடுதியில் தங்க வைக்கிறது. அவர்கள் சிறப்பு திருமணச் சட்டப்படி திருமணம் செய்துள்ளார்கள்.
இந்த நிலையில், அந்த பெண்ணின் தகப்பனார் அந்த வழக்கில் பதில்மனு செய்து, தான் அவரின் மகளை சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைக்கவில்லை என்றும், ஒரு தகப்பன் தன் மகளை காப்பாற்றவும், நல்ல வழியில் அவளுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவும் வேண்டியே என் பாதுகாப்பில் இறுக்கமாக வைத்திருந்தேன் என்றும் கூறுகிறார்.
இந்த வழக்கில், ஐகோர்ட் தனது நிலையை பல்வேறு தீர்ப்புகளைக் கொண்டு பரிசீலிக்கிறது.

ஒரு வயதுவந்த பெண்ணை அவளின் தகப்பனார், பாதுக்காப்பு என்ற பெயரில் கட்டுப்படுத்துவது 'சட்டத்துக்கு புறம்பான சிறைவைப்புச் செயல்' என்று கூறமுடியுமா? என்ற கேள்வியை கோர்ட் வைத்தது.

இதே போன்ற சூழ்நிலை உள்ள ஒரு வழக்கு 1974ல் Full Bench  விசாரனைக்கு வந்தது. 1974 KLT 650.
(Full Bench  என்றால் 3 நீதிபதிகளுக்கு மேல் உள்ள நீதிபதிகள் ஒரே கோர்ட்டில் ஒரு வழக்கை விசாரிப்பது. மற்றொன்று, Division Bench என்பது 2 நீதிபதிகள் மட்டும் ஒரு வழக்கை ஒரே கோர்ட்டில் அமர்ந்து விசாரிப்பது).

அந்த வழக்கில் ஒரு இளைஞன் ஹேபியஸ் கார்பஸ் வழக்குப் போட்டு அதில் அவன் மனைவியை ( 21 வயது) அவளின் தகப்பன் சட்டத்துக்குப் புறம்பாக தடுத்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளான். அந்த வழக்கில், இங்கிலாந்தில் நடந்த ஒரு வழக்கை மேற்கோள் காட்டியுள்ளனர்.
அது In Re Agarellis vs. Lascelles (1883 (24) Law Reports Chancery 317).
ஒரு தகப்பனுக்கு மூன்று நிலைகளில் தடைசெய்யும் உரிமை உண்டு என்று அந்த நீதிமன்றம் கூறியுள்ளது.
அதில்,
1) Where the father has fortified the right by his moral turpitude:
2) where he has abdicated his authority:
3) where he removes the ward out of jurisdiction.
 இந்தமூன்று சூழ்நிலைகளில் ஒரு தகப்பனின் செயல் சரியே  என நியாயப் படுத்தப் பட்டுள்ளது.

இந்த வழக்கில், காதல் பிரதானமாக இருப்பதால், காதலா, பெற்றோரின் அரவனைப்பா, வழிகாட்டலுமா என்ற விஷயத்தில் ஹேபியஸ் கார்பஸ் போன்ற ரிட் மனு அவசியமற்றது என்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

The parents have a duty to put their children in a correct pathway in their life. True that the girl has become a major. But that does not mean that no duty is cast upon the parents to advise her on important matters. It is the responsibility of the parents to see that the daughter is not cheated.
The father has unbridled right to keep her 'in custody'
The keeping of an adult major woman in the custody of her parent even agaisnt her will and desire will not amount to improper restraint or detention or confinement as to justify invocation of the jurisdiction under Art. 226 of the Constitution.

பெண் மேஜர் வயதை அடைந்திருந்தாலும், தகப்பன் என்ற முறையில் அந்த பெண்ணின் நன்மையைக் கருதி அவளைப் பாதுகாத்து வருவது சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைப்பது என்ற குற்றம் ஆகாது என்னும் வாதத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியாது. இதை ஒரு பொதுவான உதாரணமாகக் கொள்ளலாம்.

சட்டப்படி, ஒரு வயது வந்தவரை எந்தக் காரணம் கொண்டும் அவரின் விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைக்க முடியாது. இன்று பெற்றோர் அடைத்து வைப்பது போல, நாளை கணவனும் அடைத்து வைப்பான். இவள் என்ன ஆடு,மாடா அடைத்து வைக்க? தனி மனித சுதந்திரம் என்னாவது?

எனவே இதுபோன்ற சூழ்நிலையில், பெற்றோர், அவர்களின் பெண்ணுக்கு தகுந்த அறிவுரை கூறலாம், வழிகாட்டலாம். தன் மகளை நல்வழிப்படுத்த பெற்றோர் செய்யும் இவை எல்லாம் சட்ட விரோதமாக அடைப்பது என்ற குற்றமாகாது.

.

Supreme Court New Rules

Supreme Court's New Rules 2013

சுப்ரீம் கோர்ட் விதிகள் 2013 என்று புதிய விதிகள் அடங்கிய சட்டத்தை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கொண்டுவந்துள்ளது

அதன்படி, புதிதாக வக்கீலாக பதிவு செய்து கொண்ட வக்கீல்கள், அவர்கள் வக்கீலான ஒருவருடத்திற்குப் பிறகுதான், சுப்ரீம் கோர்ட் வழக்கில் தனியே வாதாடமுடியும். அதுவரை கோர்ட்டில் வாய்தா, சின்ன மனுக்களிலுள்ள சிறிய பிரச்சனைகளில் பதில் மட்டும் சொல்லலாம். வாதாட முடியாது

இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் சங்கம் (SCBA) இந்திய தலைமை நீதிபதியிடம் அதை மறுபரிசீலனை செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டுள்ளது.

Saturday, July 26, 2014

டைவர்ஸ் ஒருவருடம் கழித்துத்தான்

டைவோர்ஸ் (டிவோர்ஸ்) Divorce:
இந்து திருமணச் சட்டப்படி, டைவர்ஸ் கேட்பவர், திருமணம் நடந்து ஒருவருடம் கழித்தே கோர்ட்டில் மனுபோட வேண்டும் என்று சட்டப் பிரிவு உள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கில் இந்த ஒருவருடப் பிரச்சனை அலசப்பட்டது. அதாவது திருமணம் நடந்த 25 நாட்களுக்குள் கணவர் டைவர்ஸ் மனுப் போட்டார். ஆனால் இந்து திருமணச் சட்டப்படி திருமணம் நடந்த ஒரு வருடம் கழித்துத்தான் டைவர்ஸ் வழக்கே போடமுடியும். ஆனாலும் கணவர் போட்ட வழக்கை கோர்ட் ஏற்றுக் கொண்டு மனைவிக்கு சம்மன் அனுப்பி கோர்ட்டுக்கு கூப்பிட்டது. மனைவியோ, இது என்ன புதுவிதமாக உள்ளது என்று, அந்த டைவர்ஸ் கோர்ட்டின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் CRP என்னும் ரிவிஷன் வழக்குப் போட்டார்.
அந்த வழக்கில் ஐகோர்ட், இந்து திருமணச் சட்டத்தில் உள்ள பிரிவு 14(1)ஐ அலசியது.

Sec.14(1) of Hindu Marriage Act 1955:
It shall not be competent for any Court to "entertain" any petition for dissolution of marriage, unless on the date of petition, one year has elapsed since marriage.
Provided -- the Court may, upon application made to it, allow a petition to be presented before one year has lapsed since marriage, on the ground that the case is one of exceptional hardship to the petitioner or of exceptional depravity on the part of the respondent.

இதில் entertain என்று உள்ள வார்த்தையை எடுத்துக் கொண்டு, "வழக்கை முழு விசாரனை செய்வதுதான் entertain என்றும்", வழக்கை கோர்ட்டில் தாக்கல் மட்டும் செய்து வைப்பது இதில் வராது என்றும், எனவே அந்த வழக்கு கோர்ட்டில் தாக்கல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, விசாரனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறிவிட்டது.

இந்த சட்டப்படி, திருமணமுறிவு என்னும் டைவர்ஸ் வழக்கை, திருமணம் நடந்த ஒருவருடகாலத்துக்குப் பின்னரே கோர்ட்டில் போடமுடியும் என்பது, "விசாரிக்க முடியும்" என்ற ரீதியில் உள்ளதாகவும், யாராவது வெளிநாடு செல்லவேண்டிய அவசர, அவசிய நிலை இருந்தால், அவர் ஒருவருட காலத்திற்குள் வழக்கை மட்டும் தாக்கல் செய்துவிட்டுச் செல்லலாம் என்றும், ஒருவருட முடிவில் விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்றும் பொருள்படும் தொனியில் இந்த சட்டப்பிரிவு உள்ளதாக கருதவேண்டி உள்ளது.

.

வக்கீல்

அட்வகேட்:
இந்த வார்த்தையானது லத்தீன் மொழி வார்த்தை. லத்தீன் மொழியில், "உதவிக்கு வருபவர்" என்று நேரடி அர்த்தமாம்.

இதற்கு முன், பாரிஸ்டர் படிப்பு படிக்காமல் கீழ்கோர்ட்டுகளில் சிறிய பிரச்சனையுள்ள வழக்குகளைநடத்தும் வக்கீலை மட்டுமே 'வக்கீல்' என்பர். நம்ஊர்களில், பழங்காலத்தில், அவரைத்தான் 'நாட்டு வக்கீல்' என்று சொல்வர்.

1961ல் வக்கீல்கள் சட்டம் வந்தது. அதன்பின், எந்த வக்கீலாக இருந்தாலும், அட்வகேட், பாரிஸ்டர், லாயர் என்ற எல்லாப் பெயர்களையும் விட்டுவிட்டு, ஒரே பெயரில் 'அட்வகேட்' (Advocate) என்றே அழைக்க வேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது. 

அடுத்தவர் பிரச்சனைக்கு வக்காலத்து வாங்கி வாதாட வருபவரே வக்கீல். சமுதாயத்தில், அட்வகேட் என்னும் வக்கீல் என்பவர்கள் "படித்த, அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிச்சலான போர்வீரன் போன்ற, நட்புள்ள, ஜென்டில்மேன்" என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.

ஒரு வக்கீலுக்குறிய குணங்கள்:
1. கோர்ட்டில் எந்த சூழ்நிலையிலும் தன் உணர்வை இழக்காமல் இருக்கவேண்டும். கோபமே படக்கூடாது. தனக்கு சாதகமாக தீர்ப்பு இருந்தாலும், தனக்கு எதிராக இருந்தாலும் கோபமே காண்பிக்கக் கூடாது.
2.கோர்ட் அறையை ஒரு புனித இடமாகவே கருத வேண்டும்.
3. நீதிபதியை மிகவும் மதிக்க வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும்.
4. நீதிபதி அந்த இருக்கையில் (சீட்டில்) இருப்பதால் மட்டுமே அந்த இடத்துக்கு மதிப்பை கொண்டு வருகிறவர். எனவே அந்த பதவிக்குறிய மதிப்பை வக்கீல் கொடுக்க வேண்டும்.

இவ்வளவு கண்ணியம் வாய்ந்த அந்த தொழிலை அதைச் செய்யும் வக்கீலே காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.

கண்ணியமுள்ள வக்கீல் என்பது பயப்படும் வக்கீல் என்பதல்ல. தரக்குறைவான காரியங்களை செய்யாமல், நீதியை நிலைநாட்ட சட்டபூர்வமான அனைத்து செயல்களையும் செய்யும் துணிச்சல் இருக்க வேண்டும்.

சமுதாயத்தில், தற்போது வக்கீல்கள் மீது பொதுவாக அதிருப்தியே உள்ளது. தரம் குறையும்போது, நம்பிக்கையும் குறைந்துவிடும் என்பது இயற்கை நியதி.

.

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி:

வரவேற்போம் Mr. Justice Sanjay Kishan Kaul ஜஸ்டிஸ் சஞ்சய் கிஷன் கவுல் அவர்களை. இவர் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சனிக்கிழமையன்று பொறுப்பேற்றுள்ளார். இதற்குமுன், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவர்.


56 வயதாகிறது. 26.12.1958ல் பிறந்தவர். எம்ஏ எக்கனாமிக்ஸ் ஹானர்ஸ் படித்து, சட்டப்படிப்பான LLBஐ 1982ல் டில்லியில் படித்து வக்கீலானார்.

2001ல் டில்லி ஐகோர்ட்டில் நீதிபதியானார். பின்னர், 2013ல் பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியானர். இப்போது சென்னை ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக வந்துள்ளார்.

இந்துக் கடவுளை கேலிச்சித்திரமாக பிரபல ஓவியர் MFஹூசேன் வரைந்த பிரச்சனையில், அவரின் பேச்சுரிமை சுதந்திரத்தை உறுதிசெய்தவர்.
இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவர் சென்னை ஐகோர்ட்டின் 27-வது தலைமை நீதிபதியாவார். வாழ்த்துக்கள்.
.

Sunday, July 6, 2014

Why a DECREE in civil cases?


Normally in every civil cases, there is a Judgment which is delivered by the Judge himself at the end of the case. Subsequently, the Court office staff (not a legally technical person) drafted a 'decree' in consonance with that of the judgment.
What is the difference between a judgment and a decree?
Very simple; Judgment is delivered by the Judge; and the decree is prepared by a non-judicial staff of that Court.
Is decree a necessary one in every case?
I don't think so. It was introduced long back during the British Judicial administration in British India. Even after the independence of India, our Judicial system also follow and adopt the same without any valid or convincing reason. I think, we just follow it as of a routine.
Actually, the Judge, after hearing a case in full length, i.e. after examination of all the documents produced before him, after examination of all the witnesses produced before him, after hearing the lengthy arguments of the lawyers concerned, at last, the Judge delivered the judgment that the case is allowed or dismissed. The Judge, in his judgment, gives sufficient legal reasons for delivering such judgment. Therefore, the judgment is nothing but contained only the reasons for his conclusions. No doubt, he discussed each and every minute details about the case facts, evidences, proposition of law, etc. In  spite of all these things, the party to that case (who won) cannot use this judgment for claiming his right of execution of that judgment. The party to that case has to obtain one more thing which is called "a decree" for due execution of this judgment.
 For a better understanding, I'll give one example. Suppose, I lent money to one Mr. X, but he failed to repay it. Hence I have forced to file a case against Mr.X for recovery of that money. The Court after hearing my case and the X's explanation, the Judge would deliver a judgment that I really lent that money to Mr.X and therefore I am entitled to recover it from him with interest and cost of that case. Without that Judgment I can't recover it from him, by mere producing the said judgment to that Court or a parallel Court for such recovery. I have to apply for a "Decree" copy, which is to be prepared by the Court office . That decree copy contains the following particulars, viz. apart from the case number, parties names and address, the other particulars such as whether such claim is allowed or not, what is the principal money, what is the interest, and what is the cost of the suit.
Normally, a judgment is a lengthy one, containing number of papers depends upon the reasons and conclusions which are given in that judgment. But  a decree is just contained two or three papers, which contained the final result and the calculations of amount or Court's executive order.
So, to my knowledge, a decree is nothing but a calculation slip (in money suits), or a writ of execution (in property cases).
Now my arduous question is: why such a decree is necessary to the litigant? When there is a detailed judgment  which is very much available in number of papers which is delivered by the Judge himself - (but 'without calculation slip or without writ of execution')  - is it not a waste of litigant's time for the preparation of a 'decree' from the very same judgment.
Therefore to my opinion the 'decree' is an unnecessary one and it is an old, cumbersome method, which really a waste of Court's time and litigant's time.
Except in civil cases, all the other cases, there is no such method of decree, but only a judgment. Why not the Courts follow the same to the civil cases also.

.