Monday, January 11, 2021

கோர்ட் டிகிரியை பதிவு செய்ய வேண்டியது அவசியமா

 கோர்ட் டிகிரியை பதிவு செய்ய வேண்டியது அவசியமா

 

இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள மண்டபம் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில்ஒரு சமுதாய மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடித்து வந்தார்கள். அங்கு கடலில் உள்ள  ஒரு சிறு நிலப் பகுதியில்  (Foreshore) அப்படி பிடித்த மீன்களை காய வைப்பதும்குவித்து வைப்பதும்கனோ (Canoe) என்னும் சிறு படகையும்பெரும் படகையும் (boatஅங்கு நிறுத்தி வைப்பதும்மீன் பிடி வலைகளை காய வைப்பதும் போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார்கள்.

 

அதை அந்த நிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சேபனை செய்தார்கள். எனவே அதை எதிர்த்து 1920-ல் இராமநாதபுரம் சப் கோர்ட்டில் சிவில் வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில் 1930-ல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு (Compromise Decree ) அதை ஒட்டி கோர்ட் டிகிரி கொடுத்தது. இந்த சமாதான டிகிரியில்அவர்கள் 21 வருடங்களுக்கு தொடர்ந்து மீன் பிடிக்கவும்அந்த நிலத்தை குத்தகையாக வைத்துக் கொள்ளவும்அதற்காக வருடம் ரூ.7500 கொடுக்க வேண்டும் என்றும், 21 வருட முடிவில் அந்த கடலில் உள்ள நிலப் பகுதியை (Foreshore) திரும்ப ஒப்படைத்து விட வேண்டும் என்றும், முடிவு செய்து அதை ஒட்டி கோர்ட் சமாதான டிகிரியாக தீர்ப்புக் கொடுத்தது. 

 

இந்த வழக்கில் அவர்கள் கேட்டது அந்த நிலத்தை உபயோகப்படுத்த உரிமை கோரினர். ஆனால் சமாதான டிகிரியில்வழக்குக்குச் சம்பந்தமில்லாமல்அந்த நிலப்பகுதியை குத்தகை உரிமை கேட்டுஅதற்கு ஒப்புக் கொண்டுஅந்த டிகிரியை வாங்கி உள்ளார்கள்.

 

பின்னர் சில ஆண்டுகள் கழித்துதொடர்ந்து அந்த ஒப்புக்கொண்ட குத்தகைத் தொகையைக் கொடுக்கவில்லை என்பதால்அவர்கள் மீது சமாதான கோர்ட் டிகிரியை வைத்து வழக்குப் போட்டார்கள். ஆனால்அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள்இந்த கோர்ட் சமாதான டிகிரியை (தீர்ப்பை) பத்திரமாக பதிவு செய்யாததால் அதைக் கொண்டு வழக்குப் போட முடியாது என்று வாதம் செய்தார்கள். 

 

சொத்துரிமைச் சட்டம் 1882

பொதுவாக சொத்துக்களை விற்பனைமற்றும் பரிமாற்றம் செய்யும் போதுஅதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சொத்துரிமைச் சட்டம் 1882-ல் பிரிவு 17(1)-ல் சொல்லியுள்ளது.

அதன்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் எவை என்று சொத்துரிமைச் சட்டம் பிரிவு 17(1)-ல் சொல்லியுள்ளது:

1.     Sec.17(1)(a) சொத்தின் தானப் பத்திரம். (Gift deed)

2.     Sec.17(1)(b) சொத்தின் உரிமைகளை மாற்றும் பத்திரம் (கிரயம்அடமானம்போன்றவைகள்). (Sale deed, Mortgage deed etc)

3.     Sec.17(1)(c) சொத்தின் உரிமைகளை மாற்றிக் கொடுத்த பத்திரத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை பெறும் போது எழுதிக் கொள்ளும் பத்திரம். (Receipt of money acknowledged in respect of immovable property).

4.     Sec.17(1)(d) சொத்தின் குத்தகைப் பத்திரம். (Lease deeds).

5.     Sec.17(1)(e) சொத்தின் பேரில் வாங்கிய டிகிரியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் அசைமெண்ட் பத்திரம் (Assignment deed of Court decree regarding immovable property).

 

மேலும்மேற்சொன்னவற்றுக்கு விதிவிலக்காக எந்த எந்த பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று சொத்துரிமைச் சட்டம் பிரிவு 17(2)-ல் சொல்லியுள்ளது. அவை:

 

அதில் எல்லாக் கோர்ட் டிகிரிகைளையும் (சொத்து சம்மந்தபட்ட டிகிரி உட்பட) கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி உள்ளது. 

 

ஆனாலும் அதிலும் ஒரு விதிவிலக்காகஅந்த வழக்கில் சம்பந்தம் இல்லாத சொத்தைப் பற்றி ஒரு டிகிரியை கோர்ட் கொடுத்தாலும்அல்லது பார்ட்டிகளின் வழக்குக்கு சம்பந்தம் இல்லாத சொத்தைப் பற்றி ஒரு டிகிரியை (சமாதான டிகிரி உட்பட) பெற்றிருந்தால்அப்படிப்பட்ட டிகிரியை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று விளக்கியுள்ளது.

 

வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்தின் டிகிரி – பதிவு அவசியம் இல்லை:

அதாவதுவழக்கில் சம்மந்தபட்ட சொத்தாக இருந்தால்அப்படிப்பட்ட டிகிரியை (சமாதான டிகிரி உட்பட) பத்திரமாக பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பிரிவு 17(2)-ல் சொல்லியுள்ளது.

 

வழக்கில் சம்பந்தம் இல்லாத சொத்தின் டிகிரி – பதிவு அவசியம்:

 

ஆனால்வழக்கில் சம்பந்தமில்லாத ஒரு சொத்தைஅந்த வழக்கில் ஒரு டிகிரியாக (சமாதான டிகிரி உட்பட) பெற்றிருந்தால்அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெளிவு படுத்தியுள்ளது. 

 

எனவே இந்த வழக்கில்மீனவர்கள் பெற்ற சமாதான டிகிரி என்பது வழக்குச் சொத்து (கடலுக்குள் இருக்கும் ஒரு நிலப்பகுதி -Foreshore) பற்றியே உள்ளது. எனவே அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று வழக்குப் போட்டவர்களின் வாதம்.

 

ஆனால்இந்த விதிவிலக்கு என்பதுபிரிவு 17(1)(b) & 17(1)(c) வகை சொத்து மாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்லி உள்ளது. அப்படிப் பார்த்தால்குத்தகை உரிமை (Lease) என்பது பிரிவு 17(1)(d)-ல்வருகிறது. அதற்கு இந்த விதிவிலக்குப் பொருந்தாது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த சொத்து மாற்றுச் சட்டம் 1882-ஐ, 1929-ல் திருத்தம் செய்து திருத்தல் சட்டம் கொண்டு வந்தார்கள். அதன்படியும்இந்த பிரிவு 17(1)(d)- (Lease) அந்த விதிவிலக்குக்குள் கொண்டு வரவில்லை.

 

எனவேமுடிவாக:

வழக்கில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து டிகிரி வாங்கி இருந்தால், (சமாதான டிகிரி உட்பட)அதை பத்திரமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெள்ளத் தெளிவாகிறது.

 

ஆனால்அந்த வழக்கில் சம்மந்தமில்லாத சொத்தைப் பொறுத்து அந்த வழக்கில் ஒரு டிகிரி வாங்கி இருந்தால், (சமாதான டிகிரி உட்பட)அதை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று விதிவிலக்கில் சொல்லி உள்ளது.

 

ஆனாலும்அப்படி வழக்குக்கு சம்பந்தமில்லாத சொத்து என்பது பிரிவு 17(b) & 17(c) க்கு மட்டுமே பொருந்தும்குத்தகை சம்மந்தப்பட்ட டிகிரி வழக்கின் சொத்துக்கு சம்மந்தப்படாத சொத்தாக இருந்தாலும்அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே சட்டம் சொல்கிறது. 

 

பிரைவி கவுன்சில் வழக்கான Hemanta Kumari Debi vs Midnapore Zamindari Co, AIR 1919 PC 79 என்ற வழக்கில் தீர்ப்பாகபிரிவு 17(1)(b) & (c) இவைகளுக்கு மட்டுமே என்று சொல்லியுள்ளதால்குத்தகை என்பது இதில் வராது என்பதால்அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே தீர்ப்பு கூறியுள்ளது.

 

A lease is, of course, a non-testamentary instrument which operates to create a right in immovable property; but inasmuch as leases are dealt with separately in a later clause the rules of construction of statutes preclude the respondent calling in aid Clause (b).

 

எனவே இந்த வழக்கில் அந்த சமாதான டிகிரிகுத்தகை சம்மந்தப்பட்டு இருப்பதால்அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தீர்ப்புச் சொல்லியுள்ளது.

 

E.S.Kasim Marakkayar and others vs P.R.M.K.Muhammad Abdul Rahiman, dated 25 January 1944, AIR 1944 Mad 273.

**

 

 

Sunday, January 10, 2021

வக்ப் பொதுக் கொடை எது

  

வக்ப் பொதுக் கொடை எது

 

மிர்சா முகமத் அலி நமாசி (ஷியா முகமதிய பிரிவைச் சேர்ந்தவர்) என்பவர் 1930-ல் தனது சொத்துக்களைப் பொறுத்து ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைக்கிறார். அதில் கீழ்கண்ட தானதருமங்களைச் செய்யும்படி சொல்லியுள்ளார்.

1)      வசதியில்லாத தனது உறவினர்களுக்கு உதவவும், (30%)

2)     மொகரம் பண்டிகைமற்றும் ஷியா முஸ்லீம்களின் மற்ற பண்டிகைகளைக் கொண்டாடவும், (வருமானத்தில் 10%).

3)     வசதியில்லாத ஷியா முகமதியர்களின் திருமணத்தை நடத்தவும்வசதியில்லாத முகமதியர்களின் இறப்புச் செலவுகளைச் செய்யவும்

4)    செய்யது என்ற முஸ்லீம் சமுதாயத்துக்கு வேண்டிய நன்மைகளைச் செய்யவும்(20% மேற்கண்ட இரண்டுக்கும் சேர்த்து).

5)     ஷியா பிரிவைச் சேர்ந்த முகமதியர்களின் பண்டிகைகளை கொண்டாடவும்அதை ஒட்டிய தான தர்மங்களைச் செய்யவும்அந்த செட்டில்மெண்டில் சொல்லியுள்ளார்.

 

இந்த செட்டில்மெண்டை வக்ப் என்னும் தர்மமாக எழுதி வைத்துள்ளார். அதற்கு முத்தாவலி என்ற நிர்வாகியை நியமித்துள்ளார். அந்த முத்தாவலிஇந்த தர்மங்களை செய்யவும்இதில் குறிப்பிட்டுள்ள சதவிகிதத்தை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள அதிகாரமும் கொடுத்துள்ளார். 

 

மற்றவைகளை தருமம் என்று ஏற்கலாம் என்றும்ஆனால்தனது வசதியில்லாத உறவினர்களுக்கு உதவி செய்வதை தர்மம் என்று ஏற்க முடியாது என்று வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஏனென்றால் அது பொதுவான ஒரு சமுதாயக் கூட்டம் என்று கருத முடியாது. (பொதுமக்கள்ஒரு சமுதாயம்சாதிஒரு மதம்போன்றவைகளை ஒரு பொதுமக்களாக ஏற்கலாம். ஆனால்தன் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களை ஒரு சமுதாயக் கூட்டம் என்று ஏற்க முடியாது என்றும் அது தனி நபருக்கு செய்யும் உதவி என்பது வருமான வரித்துறையின் வாதம்).

 

Lord Parker of Waddington said: “A trust to be valid must be for the benefit of individuals, which this is certainly not, or must be in that class of gives for the benefit of the public which the Court in this County recognize as charitable in the legal as opposed to the popular sense of that term.  Moreover, if a trustee is given a discretion to apply trust property for purposes some of which are and some are not charitable, the trust is void for uncertainty.”

 

லார்டு பார்க்கரின் கூற்றுப்படி பார்த்தால்இந்த தானத்தில்முத்தாவலி இஷ்டம்போல தானத்தை மாற்ற முடியும் என்றும்அதிலும் குறிப்பாகவக்ப் ஏற்படுத்தியவரின் ஏழை உறவினர்களுக்கு கொடுத்திருப்பதால்அது தர்ம காரியமாக ஏற்க முடியாது என்பதால்இந்த வக்ப் என்னும் பொதுக் கொடையே சட்டப்படி செல்லாது என்று ஆகிறது.

 

இந்தியாவில் இதன் நிலை:

ஏழை உறவினர்களுக்கு கொடுத்த அல்லது எழுதி வைத்த வக்ப் என்னும் பொதுக் கொடையை பொது தர்மம் அல்லது பொது சமுதாயத்துக்கு கொடுத்த கொடையாக (தானமாக) ஏற்பதில்லை. அதிலும் முத்தவாலி அவரின் விருப்பத்துக்கு அந்த தானத்தை மாற்ற முடியும் என்பதால்இந்த கொடை மூலம் பயனடையும் பயனாளிகள் (Beneficiaries are not general public and not specific in nature) நிலையில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதால்இதை ஒரு பொதுக் கொடை அல்லது வக்ப் என்று ஏற்க முடியாது. 

 

எனவே இந்த வழக்கில்இந்த வக்ப் என்னும் பொதுக்கொடை மூலம் செய்யும் தர்மங்களை ஒரு தர்ம காரியமாக ஏற்க முடியாது என்றும்அதை ஒட்டி அதற்கு வரிச் சலுகை கொடுக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் 1944-ல் தீர்ப்பு சொல்லியுள்ளது.

The Commissioner of Income Tax vs Aga Abbas Ali Shirazi on 28-Jan-1944, (1944 -12 ITR 179 Mad).

**

Tuesday, January 5, 2021

இந்து கூட்டு குடும்ப சொத்து வழக்கு

 கோபார்சனரி சொத்து விற்பனை

ஒரு வழக்கை சென்னை ஐகோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய முழு பெஞ்ச் விசாரனை நடத்தியது. அதில், தலைமை நீதிபதி அரனால்டு ஒயிட், மற்றும் நீதிபதிகள் பென்சன், மன்ரோ, சங்கரன் நாயர், கிருஷ்ணசாமி ஐயர் ஆகியோர் வாதங்களைக் கேட்டனர். அந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் மற்றும் வக்கீல் எத்திராஜ் முதலியார் இருவரும் வாதம் செய்து முடித்து விட்டார்கள். தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணசாமி ஐயர் எழுதி முடித்து இருந்தார். ஆனால் தீர்ப்பை கோர்ட்டில் சொல்லவில்லை. இந்த சூழ்நிலையில் திடீரென்று நீதிபதி கிருஷ்ணசாமி ஐயர் தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

மற்ற நான்கு நீதிபதிகளும் கோர்ட்டில் கூடினர். அப்போது அட்வகேட் ஜெனரல் ஒரு ஆட்சேபத்தை தெரிவித்தார். ஐந்து நீதிபதிகள் விசாரித்த இந்த வழக்கை ஒரு நீதிபதி விலகி விட்டதால், நான்கு நீதிபதிகள் சேர்ந்து அதே தீர்ப்பைச் சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான்கு நீதிபதிகள் சேர்ந்து அந்த தீர்ப்பைச் சொல்லலாம் என்று முடிவுக்கு வருகிறார்கள்.

எனவே நான்கு நீதிபதிகள் மட்டும் தீர்ப்பைச் சொல்கிறார்கள்:

தலைமை நீதிபதி அரனால்டு ஒயிட்:

பிரைவி கவுன்சில் வழக்கான Suraj Bunsi Koer v. Sheo Persad Singh (1880) ILR 5 Cal. 148 (PC) என்ற ஒரு வழக்கில் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில், ஒரே ஒரு பங்குதாரர் (கோபார்சனர்) மட்டும் அவருடைய பங்கை மட்டும் (சொத்தை) விற்று விடுகிறார். இப்படி விற்க அவருக்கு சட்டத்தில் அனுமதி உண்டா என்ற கேள்வி எழுகிறது. கூட்டுச் சொத்தாக இருக்கும்போது, ஒருவர் மட்டும் அவரின் பங்கை பிரிக்காமல் விற்பனை செய்ய முடியுமா முடியாதா என்ற கேள்வி. இது ஒன்றும் இயற்கைக்கு மாறானது இல்லை என முடிவாகிறது.

இதேபோன்ற கேள்வி 1891-ல் ஒரு வழக்கில் முழு பெஞ்ச் விசாரனைக்கு வருகிறது. Rangasami v. Krishnayyan (1891) ILR 11 Mad 408 (FB). அதில், அப்படி ஒருவர் மட்டும் தன் பங்கை விற்று விட்டால், அதை வாங்கியவர், அந்த விற்றவரின் நிலையில் அந்தக் கூட்டுக் குடும்பத்தில் இருப்பார். அதனால் அவரை (அந்த பங்கை வாங்கிய மூன்றாம் நபரை) கூட்டுக் குடும்ப உறுப்பினராக ஏற்றுக் கொள்ள முடியுமா, அல்லது மற்று கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அவரை கலந்து கொண்டு சொத்தை கூட்டாக அனுபவிக்க முடியுமா? அந்த பாகத்தை மட்டும் அவர் பாகம் பிரித்து அவர் பங்கை எடுத்துக் கொள்ளும்வரை, அந்த சொத்தின் பங்கு மட்டும் விற்கப் படாத பங்கு போலவே இருக்கும். ஒருவேளை மற்ற கோபாசனர்களில் ஒருவர் இல்லாமல் போய் விட்டாலும், அந்த கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கில் மாறுதல்கள் ஏற்படும். அப்போது வாங்கியவரின் பங்கின் நிலை என்ன? வாங்கியர், அதை விற்றவருக்கு அவ்வாறு கிடைக்கும் பங்கை, அது அதிகமாக இருந்தாலும், அல்லது குறைவாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ள முடியுமா? இது ஒரு Speculative transaction என்னும் சூதாட்டம் போல, அதிகம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஒன்றும் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில், பாகம் பிரிக்கும் போதுதான், உயிருடன் இருக்கும் கோபார்சனர்கள் என்னும் கூட்டு உரிமையாளர்கள் பங்கு எவ்வளவு என்று நிர்ணயிக்கப் படும். அதுவரை ஒரு கோபார்சனரிடம் அவரின் முடிவாகாத பங்கை வாங்கியவர் காத்திருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. 

இந்த நிலையானது perfectly logical and intelligible position. ஆனால் இந்த நிலையை முழுபெஞ்ச் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த முழு பெஞ்சின் நிலை என்னவென்றால்: “அதை வாங்கியர், தான் வாங்கிய பங்கை அடைய வேண்டுமென்றால், அவர் பாக  வழக்குப் போட்டால், அது முடிவாகி விடும்.” ஆனால் மற்ற நீதிபதிகள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. கோபார்சனர்களின் உரிமையானது பாகம் பிரிக்கும் வரை யாருக்கு எவ்வளவு பங்கு என்று முடிவாகாத நிலையிலேயே இருக்கும். ஒருவர் இறந்து விட்டாலும், பங்கு அதிகமாகும். புதிதாக ஒருவர் அந்தக் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தால், அவரவர் பங்கு குறைவாகும். 

ஒருவேளை, இந்த பங்கை விற்ற கோபார்சனர் இறந்து விட்டால், அவருக்கு பங்கு இல்லாமலேயே போய்விடும். அப்போது வாங்கியவரின் நிலை என்னவாகும். ஒன்றும் கிடைக்காது. 

இன்னொறு கருத்தாக: ஒரு கோபார்சனர் அவரின் பங்கை விற்று விட்டால், அவர் இறப்பு, வாங்கியவரைப் பாதிக்காது. அவர் கிரயம் வாங்கியபோது, அதை விற்றவருக்கு என்ன உரிமை இருந்ததோ அதை வாங்கியவர் அடையலாம். ஏனென்றால், கிரயத்தின் போதே, சொத்தின் உரிமை மாறி விட்டாதால், விற்றவர் இறப்பு அதைப் பாதிக்காது.

மற்றொரு வழக்கான 1902-ல் நடந்த Aiyyagari Venkataramayya v. Aiyyagari Ramayya (1902) ILR 25 Mad. 690 (FB) என்ற வழக்கில்: சொத்தை விற்றவரின் பங்கானது, அவர் விற்ற பின்னர் இறந்து விட்டால், வாங்கியவரை அது பாதிக்காது என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே விற்பனை செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதியின் தீர்ப்பு.

நீதிபதி பென்சான்:

இவரும் இதே கருத்தையே சொல்கிறார். பிரைவி கவுன்சில் வழக்கான Haridi Narain Sahu v. Ruder Perkash Misser (1884) ILR 10 Cal 262 (PC) வழக்கில் முடிவு செய்யப்பட்டிருப்பதை ஒப்புக் கொள்கிறார். இந்த வழக்கில், கடன் கொடுத்த ஒருவர், கூட்டுக் குடும்பச் சொத்தின் தகப்பனார் வாங்கிய கடன் பணத்துக்கான டிகிரி வாங்கி, இந்த கூட்டுக் குடும்பச் சொத்தை ஜப்தி உத்தரவு பெறுகிறார். அதை ஏலவிற்பனை செய்ய மனுச் செய்கிறார். அவரே அந்த சொத்தை ஏலத்தில் அந்த தகப்பனின் பங்கைவாங்கி விடுகிறார். அந்த தகப்பனுக்கு ஒரு மைனர் மகன் இருக்கிறான். அவனுக்கும் இந்த கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு உள்ளது. மகன் தனியே வழக்குப் போட்டு மொத்த சொத்தையும் கேட்கிறான். ஏனென்றால் கூட்டு சொத்தை பாகம் பிரிக்காமல் விற்க முடியாது என்பது அவன் வாதம். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, அந்த தகப்பனுக்கு இன்னொரு மகன் பிறந்து விடுகிறான். எனவே இப்போது பங்கு பாதி பாதி என்று இருந்தது குறைந்து, ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு ஆகி விட்டது. ஐகோர்ட்டில், ஏலத்தில் சொத்தை வாங்கியவருக்கு மூன்றில் ஒரு பங்கு என்று தீர்ப்பாகிறது. இப்போது வழக்கு பிரைவி கவுன்சிலுக்கு வந்து விட்டது. அங்கு பாகப் பிரிவினை வழக்குப் போட்ட பின்னர் மகன் பிறந்தாலும் பாகம் பாதிக்காது என்றும், சொத்தை வாங்கியவரின் பங்கான பாதி பங்கு பெற உரிமை உள்ளது என பிரைவி கவுன்சில் சொல்லி விட்டது.

**

சிவகங்கை ஜமீன் சொத்து

 சட்டம் XXVI of 1948-ன்படி (Madras Estates (Abolition and Conversion into Ryotwari Act 1948) சிவகங்கை எஸ்டேட் ஒரு Impartible Estate (பாகம் செய்ய முடியாத எஸ்டேட்) என்று அப்போதைய அரசு முடிவு செய்து அதற்குறிய நஷ்ட ஈடாக ரூ.7,900 1957-ல் கொடுத்தது. 

1951-ல் சிவகங்கை சமஸ்தானத்தின் ஜமின்தாராக வரகுணபாண்டியன் இருந்தார். அவருக்கு அவரின் முதல் மனைவி மூலம் இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவி மூலம் ஒரு மகனும் ஆக மூன்று மகன்கள் இருந்தனர். 1948 சட்டம் வந்தபின்னர் 2-ம் மனைவிக்கு மற்றொரு மகன் குட்டி ராஜா பிறந்தான். இவர்கள் இல்லாமல், செல்லபாப்பம்மாள் என்ற வைப்பாட்டி மூலம் இரண்டு மகன்கள் (Illegitimate sons) இருந்தனர். 

சிவகங்கை ஜமின்தார் வரகுணபாண்டியன் 16 ஆகஸ்டு 1955ல் இறந்தார். ஜமின் சொத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையை பங்கு பிரிப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டு வழக்கு கோர்ட்டுக்குப் போகிறது. அவரின் வைப்பாட்டிக்கு பிறந்த இரண்டு மகன்களான செல்லத்துரை, சாமித்துரை இருவரும் பங்கு கேட்டு வழக்குப் போடுகின்றனர். 

Impartible Estate (பாகம் பிரிக்க முடியாத எஸ்டேட்) சொத்துக்களில் The Madras Impartible Estate Act 1904 படி சொத்துப் பிரியும். ஜமின்தாரின் வைப்பாட்டி மகன்களுக்கும் பங்கு உண்டு என்று தீர்ப்பானது.

**


Key Loan

 பேங்குகள் முன்னர் கீ-லோன் (Key Loan) என்று ஒரு கடன் திட்டத்தை வியாபாரிகளுக்கு கொடுத்தது. இது 1950க்கு முன்னர் இருந்த நிலை. அதன்படி சரக்குகளை வைத்திருக்கும் கொடோனின் சாவியை பாங்குக்கு கொடுத்து விட்டு, அதை செக்யூரிட்டியாகக் கொண்டு கடன் பெறுவது. இதனால், சரக்குகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டதால், இந்த கடன் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள்.

**


ஜமீன் சொத்து

 சிவகிரி எஸ்டேட் ஜமின்தாராக செந்தட்டிக்கலை பாண்டியன் சின்னத்தம்பியார் இருந்தார். இவர் 1934-ல் இறந்து விட்டார். இவருக்கு ஏழு மகன்கள். மேலும் ஒரு வைப்பாட்டி மூலம் ஒரு மகன். எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் 1948 வந்தபோது, பணத்தை பெறுவதில் வழக்கு. வைப்பாட்டி மகனுக்கும் ஜீவனாம்ச உரிமை உள்ளதா என்று வழக்கு. 

பொதுவாக குடும்பச் சொத்ததுக்களை பாகம் பிரித்துக் கொள்ளலாம். ஆனால், பழைய பிரிட்டீஸ் அரசு சாசனம் மூலம் கொடுத்த ஜமின் சொத்துக்களை பாகம் பிரித்துக் கொள்ள முடியாது. மூத்த மகன் பதவிக்கு வருவான். இப்படிப்பட்ட ஜமின் சொத்துக்களை Impartitble Estate என்று சட்டம் சொல்கிறது.

இந்து கூட்டுக் குடும்பச் சொத்துக்களில் பாகம் கேட்கும் உரிமை உண்டு. ஜீவனாம்சம் கேட்கும் உரிமை உண்டு. ஆண்கள் பிறப்பால் பங்கு பெறுவர். ஆனால் ஜமின் சொத்துக்களில் இவ்வாறு சொத்தை பாகம் பிரிக்க முடியாது என்பது ஒரு வழக்கமாக இருந்து வந்துள்ளது. பாகம் பிரியாத ஜமின் சொத்துக்களுக்காகவே ஒரு சட்டம் இருந்தது. The Madras Impartible Estate Act II of 1904. இதன்படி, மூத்தவர் தவிர மற்றவர்களுக்கு ஜமின் சொத்தில் உரிமை கோர முடியாது. ஜீவனாம்ச உரிமையும் கோர முடியாது. வைப்பாட்டி மகன்கள் ஜீவனாம்சமோ, பங்கோ கேட்க முடியாது. எனவேதான் இத்தகைய தன்மை கொண்ட ஜமின் எஸ்டேட்டுகளை Impartible Estate பாகம் பிரிக்க முடியாத எஸ்டேட் என்று சட்டம் சொன்னது. ஆனாலும், இந்த 1904 சட்டப்படி மகன், பேரன், கொள்ளுப்பேரன், குழந்தை இல்லாத விதவை, திருமணம் ஆகாத மகள்கள் இவர்களுக்கு மட்டும் சலுகையாக ஜீவனாம்ச உரிமை கொடுக்கப் பட்டிருந்தது.

ஜஸ்டிஸ் பதந்சலி சாஸ்திரி அவர்கள் 1946ல் கொடுத்த தீர்ப்பின்படி, ஜமின்தார் சூத்திரராக இருந்தால், அவரின் வைப்பாட்டி மகன், ஜமின்தார் தனிச் சொத்தில் பங்கு பெறலாம் என்று தீர்ப்புக் கொடுத்திருந்தார். 

எட்டப்ப நாயக்கன் Vs. வெங்கடேஸ்வரா என்ற பழைய வழக்கில், ஜமின்தாரின் வைப்பாட்டி மகன் பங்கு கேட்கிறான். ஜமின்தார் Khatri காத்திரி என்று சமுகத்தைச் சேர்ந்தவர். அந்த வழக்கில், ஜமின்தாரின் வைப்பாட்டி மகன் ஜீவனாம்சம் கேட்கலாம். சொத்தில் பங்கு கேட்க முடியாது என்று தீர்ப்பு வந்தது. ஏனென்றால் ராஜா (ஜமீன்) சூத்திர சமூகத்தைச் சேர்ந்தவரில்லை. சூத்திர ராஜாவாக இருந்தால், வைப்பாட்டி மகன் சொத்தில் பங்கு வாங்கலாம்.