Tuesday, June 30, 2020

சபிண்டா உறவு முறை - Sapinda Relationship

சபிண்டா உறவுமுறை (Sapinda Relationship)

பழக்க-வழக்கம் – Custom and Usage:

இந்து திருமணச் சட்டம் 1955 என்பது மத்திய சட்டம். இதில் பிரிவு 3-ல் “பழக்க வழக்கம்(Custom and Usage) என்றால் என்ன என்று சொல்லப் பட்டுள்ளது. அதாவது ஒரு பகுதியில், அல்லது ஒரு சமுதாயத்தில், அல்லது ஒரு குடும்ப வழியில், தொடர்ந்து ஒரு பழக்கத்தை, வெகுகாலமாக, கடைபிடித்து வந்தால், அதை “பழக்க-வழக்கம்” (Custom and Usage) என்பர்.

ஆனாலும் இந்தத் தொடர் பழக்க-வழக்கமானது, பொதவான “சமுதாயக் கொள்கைகளுக்கு” எதிரானதாக இருக்கக் கூடாது.

மேலும், ஒரு குடும்பத்துக்குள் மட்டும் கடைப்பிடிக்கும் தொடர் பழக்க வழக்கமானது, இடையில் அந்தக் குடும்பத்தில் கடைப்பிடிக்காமல் விடுபட்டிருக்கக் கூடாது.

சபிண்டா உறவுமுறை – Sapinda Relationship:

இந்து திருமணச் சட்டம் 1955-ல் “சபிண்டா உறவுமுறை” (Sapinda Relationship)  என்றால் என்ன என்று பிரிவு 3-ல் சொல்லி உள்ளது.

சபிண்டா உறவு என்பது ஒருவருக்கு, தனது தாய்வழி உறவில், தாயுடன் சேர்த்து மூன்று தலைமுறை மேலாகவும், மற்றும் தந்தைவழி உறவில், தந்தையுடன் சேர்த்து ஐந்து தலைமுறை மேலாகவும் இருக்கும் உறவுகள் சபிண்டா உறவுகள் எனப்படும்.

ஒருவரை ஒன்று என கணக்கில் எண்ணிக் கொண்டால் அவரிலிருந்து மேலாக ஒவ்வொரு தலைமுறையையும் எண்ண வேண்டும்.

இந்து திருமணச் சட்டத்தின்படி, இந்த சபிண்டா உறவு முறைகளுக்குள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, இந்த சபிண்டா உறவு என்பது, “அத்தைமகள்” அல்லது “மாமன்மகள்” என்பவரையும் சேர்த்தே குறிக்கும். ஒரே மூதாதையரைக் கொண்டவர்கள் சபிண்டா என்பதால், இந்த அத்தை மகளும், மாமன் மகளும் அல்லது அத்தை மகனும், மாமன் மகனும், தடை செய்யப்பட்ட திருமண உறவுகள் ஆகும். இவர்களுக்குள் திருமணம் செய்து கொண்டால் அது இந்து திருமணச் சட்டம் 1955-ன்படி செல்லாது.

ஆனாலும், இந்து திருமணச் சட்டத்தில், பிரிவு 3-ல் ஒரு சமுதாயத்தில் தொடர்ந்து இத்தகைய “பழக்க-வழக்கம்” இருந்து வந்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அது சமுதாயக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கக் கூடாது.

இந்த சலுகையைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டில் பல சமுதாயங்களில் இந்த சபிண்டா உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது சமுதாயக் கொள்கைக்கு எதிரானது என்று சொல்லவில்லை. ஆனாலும் மருத்துவக் காரணங்களைச் சொல்லி இப்படிப்பட்ட சபிண்டா உறவுத் திருமணத்தை ஆதரிக்கவில்லை.

சபிண்டா (Sapinda) என்றால் என்ன?

சபிண்டா என்றால் சக-பிண்டம் என்று பொருள். அதாவது தனது மூதாதையரின் பிண்டத்தில் ஒருபகுதியில் இருந்து தோன்றியவர்கள் என்று பொருள். இந்த உறவானது, தன் தாய் வழி முன்னோர்களின் வழியில் மூன்று தலைமுறைக்கும், தன் தந்தை வழி முன்னோர்களின் வழியில் ஐந்து தலைமுறைக்கும் தொடரும் என்று இந்து சாஸ்திரச் சட்டமான மித்தாக்சரா சட்டம் சொல்கிறது.

மத்சைய புராணத்தில், சபிண்டா என்பது தந்தை வழியில் ஏழு தலைமுறைக்குத் தொடரும் என்று சொல்கிறது. ஏனென்றால் ஷ்ரதா என்னும் இறந்தவர்களுக்கு உணவுப் பிண்டம் கொடுக்கும் மகாளய தினத்தில் (the great annual sacrifice in the month of Bhadropada புரட்டாசி) இந்த சபிண்டா உறவுகளுக்குத் தான் உரிமை உள்ளது.

ஆனால், மித்தாக்சரா கொள்கையின் ஆசிரியரான விஞ்ஞானேஸ்வரா கூற்றுப்படி, “பிண்டம் கொடுப்பவர் சகபிண்டம் இல்லை. மாறாக மூதாதையரிடமிருந்து ஒரு பிண்டமாகத் தொடர்பவரே சகபிண்டர்” என்று கூறியுள்ளார்.

**

 


Monday, June 29, 2020

இந்தியப் பத்திரப் பதிவுச் சட்டம்

இந்தியப் பதிவுச் சட்டம்:

இதற்கு முன்னர் இருந்த பதிவுச் சட்டங்கள்:

இந்திய பதிவுச் சட்டம் 1864 (The Indian Registration Act XVI of 1864).

இந்திய பதிவுச் சட்டம் 1866 (The Indian Registration Act XX of 1866).

இந்திய பதிவுச் சட்டம் 1871 (The Indian Registration Act VIII of 1871).

இந்தியப் பதிவுச் சட்டம் 1877 (The Indian Registration Act III of 1877) இது ஏப்ரல் 1, 1877 முதல் அமலுக்கு வந்தது. இதில்தான், பதிவு செய்யப்படாத பத்திரங்களை ஒரு சாட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கொண்டு வரப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள இந்திய பதிவுச் சட்டம் 1908

(Act XVI of 1908).

இப்போதுள்ள பதிவுச் சட்டம் 1908-ல் மொத்தம் 15 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயங்கள்;

1)     முன்னுரை

2)     பதிவுத்துறை- அலுவலகம்

3)     பத்திரங்களை பதிவது சம்மந்தமாக.

4)     பத்திரங்களை பதிவுக்கு கொடுக்கும் காலங்கள்.

5)     பத்திரங்களை எங்கு பதிய வேண்டும்.

6)     பத்திரங்களை யார் பதிய வேண்டும்.

7)     பத்திரப் பதிவுக்கு யார் யாரை அழைக்க வேண்டும்.

8)     உயில் பத்திரங்களைப் பதிவு செய்தல்.

9)     உயில் பத்திரங்களை வைப்பீடு செய்து வைத்தல்.

10)  பத்திரம் பதிவு செய்வதால் அல்லது பதியாமல் விடுவதால் ஏற்படும் சட்ட நிலை.

11)  பதிவு அதிகாரியின் கடமையும், உரிமையும்.

12)  பதிவு செய்வதை பதிவு அதிகாரி மறுக்கும் உரிமை.

13)  பதிவுக் கட்டணம், பதிவைப் பார்வையிடுதல்.

14)  தவறுகளுக்குத் தண்டனைகள்.

15)  பொதுவானவை.

**

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய குறிப்புகள்:

1)     இந்தப் பதிவுச்சட்டம் 1908, ஜனவரி 1, 1909 முதல் அமலுக்கு வந்தது.

2)     பத்திரத்தில் Addition என்று சொன்னால், பத்திரத்தில் உள்ள பார்ட்டிகளின் பெயர், தகப்பனார் அல்லது தாயார் பெயர், வயது, அவரின் தொழில், அவரின் முகவரி போன்றவை.

3)     பத்திரத்தில் Book என்று சொன்னால், அந்தப் பத்திரம் எந்தப் புத்தக்கத்தில் பதிவாக வேண்டும் என்ற விபரம்.

4)     பத்திரத்தில் Endorsement and Endorsed என்று சொன்னால், பதிவு அதிகாரி, பத்திரம் பதிவு செய்யப்பட்டது என்று எழுதும் சான்றிதழ்.

5)     அசையாச் சொத்து Immovable property என்பது நிலம், கட்டிடம், வழிமுறையாகப் பெறும் அலவன்ஸ், பாதைவழி உரிமை, வெளிச்சம் கிடைக்கும் உரிமை, படகுத்துறை உரிமை, மீன்பிடிக்கும் உரிமை, நிலத்திலிருந்து கிடைக்கும் உரிமை, நிலத்தில் நிரந்தரமாகப் பதித்து வைத்துள்ள இயந்திரங்களின் உரிமை, இவைகள் அடங்கும். ஆனால், விளைந்து முடிந்த விறகு மரங்கள், விளைந்து கொண்டிருக்கும் பயிர்கள், புற்கள் இவை இதில் அடங்காது.

6)     அசையாச் சொத்து (Movable property) என்பது நிலத்தில் விளைந்து நிற்கும் விறகு மரங்கள் (Standing Timber), விளைந்து கொண்டிருக்கும் பயிர்கள், புற்கள், பழம், சாறு கொடுக்கும் மரங்கள், இவைகள்.

7)     Representative என்பவர், மைனருக்கு கார்டியனாக இருப்பவர், ஒரு குழுவுக்கு கமிட்டியாக இருப்பவர், பைத்தியமாக அல்லது அறிவிலியாக இருப்பவருக்கு சட்டத் துணையாக (Legal Curator) இருப்பவர், இவர்களைக் குறிக்கும்.

8)     ஒரு மாநில அரசு அளவில் Inspector General of Registration என்ற அதிகாரி இருப்பார். இவரே அந்த மாநிலத்தில் நடக்கும் பத்திரப் பதிவின் தலைமை அதிகாரி. அவருக்கு கீழ் மாவட்ட, துணை மாவட்ட அதிகாரிகள் பலர் இருப்பர்.

9)     ஒவ்வொரு பத்திரப் பதிவு அதிகாரியிடம், இந்தப் பதிவுக்கு தேவைப்படும் புத்தகங்கள், முத்திரைகள் இருக்கும்.

10)  சில பத்திரங்களை கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று சொல்லி உள்ளது. சில பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை என்றும் சொல்லி உள்ளது. பொதுவாக அசையாச் சொத்துக்களின் உரிமை மாற்றங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

11)  பொதுவாக கோர்ட் கொடுக்கும் தீர்ப்புகள், டிகிரிகள் இவைகளைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், வழக்கில் சம்மந்தம் இல்லாத சொத்தைப் பொறுத்து ஏதாவது டிகிரியில் சொல்லி இருந்தால், அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

12)  கோர்ட்டே ஒரு அசையாச் சொத்தை அதன் உத்தரவின் பேரில் ஏலம் கொண்டு வந்து விற்பனை செய்து அதன்படி Sale Certificate கொடுத்தால், அதைப் பதிவு செய்யவேண்டிய கட்டாயம் இல்லை.

13)  ஆனால், பார்ட்டிகளின் விருப்பத்தின்பேரில், கோர்ட்டில் ஒரு சொத்து ஏலம் விடப்பட்டு, அதை ஏலம் எடுத்தவருக்கு கோர்டே பத்திரம் எழுதிக் கொடுத்தால், அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

14)  கோர்ட் அல்லது ஒரு அரசு அதிகாரி (Income Tax, Sales Tax)  ஒரு சொத்தை ஜப்தி செய்திருந்தால் அதை பதிவு செய்யத் தேவையில்லை. அதை பதிவு அதிகாரிக்கு தெரியப் படுத்தினால் போதும்.

15)  ஒரு பத்திரத்தை எழுதும்போது, அதை அந்த உள்ளூர் மொழியில் எழுத வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும். பதிவு அதிகாரிக்கு தெரியாத மொழியில் எழுதி இருந்தால், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் பதிவுக்குக் கொடுக்க வேண்டும்.

16)  பத்திரத்தில், எந்த அடித்தல், திருத்தல், சேர்த்தல், இடைச்செருகல், என்று என்ன மாற்றம் செய்திருந்தாலும், அதற்குப் பக்கத்தில் பார்ட்டிகளின் ஒப்புதல் கையெழுத்து இருக்க வேண்டும். இல்லையென்றால், அதை பதிவு செய்ய அதிகாரி மறுக்க உரிமையுண்டு.

17)  பத்திரத்தில் சொத்தைப் பற்றி குறிப்பிடும்போது, தெளிவான விபரங்கள், அல்லது வரைபடங்கள், சர்வே எண்கள், (சொத்தை சரியாக அடையாளம் காட்டும் விரபங்கள்) கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பதிவு மறுக்கப்படும்.

18)  எந்தப் பத்திரத்தையும், அதை எழுதிய தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் அதைப் பதிவுக்கு கொடுத்து விட வேண்டும். (உயில் பத்திரத்துக்கு இந்த காலவரம்பு கிடையாது, எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்).

19)  ஒரே பத்திரத்தில், பலர் வெவ்வேறு தேதிகளில் கையெழுத்துச் செய்து இருந்தால், அவரவர் கையெழுத்துச் செய்திருந்த தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவுக்கு கொடுக்க வேண்டும்.

20)  ஒருவேளை அந்த நான்கு மாதங்களுக்குள் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டால், அதே பதிவு அதிகாரி மூலமாகவே மாவட்ட அதிகாரிக்கு மனுச் செய்து, தகுந்த காரணம் சொல்லி இருந்தால், மேலும் நான்கு மாதங்கள் கால அவகாசம் பெற்றுக் கொள்ளலாம்.

21)  ஒருவேளை, ஒரு பத்திரத்தை, தெரியாமல் வேறு ஒரு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டால், அந்தப் பத்திரம் செல்லுபடி ஆகாது. எனவே இதைத் தெரிந்த நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் சரியான அலுவலகத்தில் “மறுபதிவு” (Re-registration) செய்து கொள்ள வேண்டும்.

22)  இந்தியாவுக்கு வெளியே ஒரு பத்திரம் எழுதப்பட்டால், அது இந்தியாவுக்குள் வந்த நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்து விட வேண்டும்.

23)  உயில் பத்திரத்தை பதிவு செய்ய கால அவகாசம் ஏதும் இல்லை. உயில் எழுதி பல ஆண்டுகள் கடந்தாலும், அதை எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து வைக்கலாம்.

24)  அசையாச் சொத்தின் (Immovable property) உரிமை மாறும் பத்திரங்களான, கிரயம், அடமானம், தானம், செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, விடுதலை, கோர்ட் டிகிரி, போன்ற பத்திரங்களை அந்த சொத்து இருக்கும் பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய வேண்டும்.

25)  அசையாச் சொத்தின் உரிமை மாறும் தன்மை இல்லாத கோர்ட் டிகிரிகளை எந்த பதிவு அலுவலகத்தில் வேண்டுமானாலும் (வழக்கின் பார்ட்டிகளின் விருப்பத்தின் பேரில்) பதிவு செய்து கொள்ளலாம்.

26)  உடல்நிலை சரியில்லாதவர், பத்திரம் பதிவு செய்ய வேண்டி இருந்தால், பதிவாளர் அவர் இல்லம் சென்று பதிவு செய்து கொடுக்கலாம்.

27)  ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர் அதை பதிவுக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அல்லது அவரின் முகவர் (Agent) அதை பதிவுக்குத் தாக்கல்  செய்ய வேண்டும். அல்லது அந்த பத்திரத்தின் மூலம் உரிமை பெறுபவர் அதை பதிவுக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

28)  பவர் ஏஜெண்டுகள் பத்திரத்தை எழுதிக் கொடுக்கலாம், அதைப் பதிவு செய்து கொடுக்கலாம்.

29)  பவர் பத்திரத்தின் மூலம் பவர் ஏஜெண்டுகளை நியமிக்கும்போது, இந்தியாவுக்குள் அந்தப் பவர் பத்திரம் எழுதி இருந்தால், இந்தியாவில் உள்ள ஒரு பதிவு அதிகாரி முன்னர் அதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

30)  இந்திய எல்லைக்கு வெளியே ஒரு பவர் பத்திரம் எழுதப் பட்டிருந்தால், அந்த நாட்டில் உள்ள நோட்டரி பப்ளிக் என்னும் அந்த நாட்டின் வக்கீல் முன்னர், அல்லது அப்படி ஒருவர் இல்லையென்றால், அந்த நாட்டில் உள்ள இந்தியப் பிரதிநிதியான கான்சல் அதிகாரி முன்னர் அதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

31)  உடல்நிலை சரியில்லாதவர், சிறையில் இருப்பவர், அரசு அதிகாரி இவர்கள் இப்படி ஒரு பவர் பத்திரம் கொடுத்திருந்தால் அதை பதிவு அதிகாரி முன்னர் சென்று பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

32)  ஒரு பத்திரத்தை பதிவுக்கு கொடுத்தால், அதை அவர்தான் எழுதிக் கொடுத்தார் என்பதை பதிவு அதிகாரி முன்னர் சென்று ஒப்புக் கொள்ள வேண்டும். இதை Admission of execution என்கிறது சட்டம்.

33)  அவர் அந்தப் பத்திரத்தை எழுதிக் கொடுக்கவில்லை என்று மறுத்தால், பதிவு அதிகாரி அந்தப் பத்திரத்தை பதிவு செய்யாமல் பதிவை மறுத்து விட வேண்டும்.

34)  ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டு விட்டால், அதை எழுதிய தேதியிலிருந்து அந்தப் பத்திரம் அமலுக்கு வருவதாகச் சட்டம் கருதுகிறது. (பத்திரத்தில் எழுதிய தேதி தான் சொத்து விற்பனை செய்த தேதி. மாறாக பத்திரம் பதிவு செய்த தேதியை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. பலர், பத்திரப் பதிவு தேதியையே தவறுதலாக, பத்திரத்தின் தேதியாக நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு).

35)  ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதுவே முன்னுரிமை பெறும். அதற்குப் பின்னர் எழுதிய பத்திரம் செல்லாது. அதாவது  இரண்டு பதிவு செய்த பத்திரங்களுக்குள், எது முந்தி எழுதப்பட்டதோ அதுவே செல்லும். அதை பின்னர் பதிவு செய்திருந்தாலும் பரவாயில்லை.

36)  ஒரு பத்திரம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இந்த பதிவுச் சட்டத்தில் சொல்லி இருந்து, அது பதிவு செய்யப்படாமல் இருந்தால், அதை ஒரு சாட்சியமாக கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியாது. அந்த பத்திரத்தின் படி சொத்து சட்டப்படி கைமாறி இருக்காது.

37)  பத்திரப் பதிவு சட்டப்படி பதிவு செய்ய வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை என்னும் பத்திரங்கள் அப்படியே செல்லும். அது பதிவு செய்யப்பட்ட பத்திரத்துக்கு முந்தி எழுதப்பட்டிருந்தால், அதுவே முந்தி நிற்கும்.

38)  ஒரு பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கும்போது, பதிவாளர் அன்றைய தேதி, நேரம், இடம் (பதிவு செய்யும் அலுவலம்) இவைகளை அந்தப் பத்திரத்தில் குறிக்க வேண்டும். பார்ட்டிகளின் கையெழுத்துச் சம்மதத்தைப் பெற்று, சாட்சிகள் அடையாளம் சொன்ன பின்னர் பதிவாளர் அந்த பத்திரத்தை பதிவு செய்து, அதற்கு ஒரு வரிசை எண் கொடுத்து, அதற்குறிய சான்றிதழ் அளிக்க வேண்டும். அவ்வாறு பதிவாளர் பதிவுச் சான்றிதழ் கொடுத்து விட்டால், அந்தப் பத்திரப் பதிவு பூர்த்தி ஆகி விட்டதாக சட்டம் கருதுகிறது.

39)  பதிவாளர், அங்கு பதிவு செய்ய பத்திரங்களை பார்வையிட பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். (புத்தகம்-1ல் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை மட்டும்).

40)  ஒரு பத்திரத்தில் பல இடங்களில் உள்ள சொத்துக்களை எழுதி இருந்தாலும், அந்த சொத்துக்களில் ஏதாவது ஒரு சொத்து இருக்கும் இடத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் அந்தப் பத்திரத்தை பதிவு செய்யலாம். அந்த பதிவு விபரத்தை சம்மந்தப்பட்ட மற்ற பதிவு அலுவலகத்திற்கு “குறிப்பானை” அனுப்பி விட வேண்டும்.

41)  மாநில பதிவுத் துறை தலைமை அதிகாரி (IG of Registration) அந்த மாநிலத்தின் அவருக்கு கீழ் உள்ள எல்லாப் பதிவு அதிகாரிகளையும் மேற்பார்வையிட அதிகாரமுண்டு. ஏதாவது விதிமுறைகளை ஏற்படுத்தினால், அதை அரசுக்கு தெரிவித்து அரசிதழில் வெளியிடுட்டு நடைமுறைப்படுத்த அவருக்கு அதிகாரமுண்டு.

42)  ஒரு பதிவாளர், ஒரு பத்திரத்தை பதிவுக்கு மறுத்தால், அதன் காரணத்தை அவர் புத்தகம்-2ல் பதிவு செய்து கொண்டு, அதே காரணத்தை அந்தப் பத்திரத்திலும் எழுதி திரும்பக் கொடுத்து விட வேண்டும்.

43)  அவ்வாறு பதிவுக்கு மறுத்த பத்திரத்தின் உத்தரவின் மீது, 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளருக்கு அப்பீல் செய்து கொள்ளலாம். அங்கு அனுமதி கிடைத்தால், மீண்டும் அந்தப் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம். அங்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் சிவில் கோர்ட்டில் வழக்குப் போடலாம்.

44)  பத்திரங்களில், வேண்டுமென்றே தவறு செய்திருந்தால், பதிவாளர் அவர்மீது இந்திய தண்டனைச் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும்.

45)  பதிவாளர், நல்லெண்ணத்தின் பேரில் தெரியாமல் செய்த தவறுகளுக்கு தண்டனை ஏதும் இல்லை.

46)  அரசு அதிகாரிகள், நீதிபதிகள், இவர்கள் எழுதிக் கொடுக்கும் பத்திரங்களின் பதிவுக்கு அவர்கள் நேரில் பதிவு அலுவலகம் வரத் தேவையில்லை.

**

 


வழக்குகள் - 8

வழக்குகள் 8

இந்தியாவுக்கு வெளியே நடக்கும் குற்றங்கள்

1902-ல் நேபாளத்தில் (பழைய பிரிட்டீஸ் இந்திய எல்லைக்கு வெளியே) ஒரு குற்றத்தை காளிச்சரண் செய்கிறார். அவர் அப்போதைய பிரிட்டீஸ் சிட்டிசன் ஆவார்.

ஆனால் அவரை பிரிட்டீஸ் இந்திய நீதிமன்றமான கொராக்பூர் செசன்ஸ் நீதிமன்றம் விசாரனை செய்து தண்டிக்கிறது. அப்போதுதான் தெரிய வருகிறது. அவர் பிரிட்டீஸ் சிட்டிசன் என்றும், குற்றம், பிரிட்டீஸ் இந்திய எல்லைக்கு வெளியே நேபாளத்தில் நடந்தது என்று.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டீஸ்-இந்திய நீதிமன்றம், நேபாள மன்னர் அரசாங்கத்திடம் முன் அனுமதி பெற்று இருக்கவேண்டும். இதை வழக்குப் போடுவதற்கு முன்னரே பெற்று இருக்க வேண்டும் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 188-ல் சொல்லப் பட்டுள்ளது. அவ்வாறு பெறவில்லை என்றால் அந்த வழக்கின் தீர்ப்பு செல்லாது. எனவே காளிசரணை விசாரனைக்கு உட்படுத்திய பின்னரே இது தெரிய வந்ததால், அதற்குப் பின்னர் நேபாள அரசின் அனுமதியைப் பெறுகிறார்கள். இது சரியா?

இது போலவே பிரிட்டீஸ் இந்தியாவுக்குள்ளே பல சமஸ்தானங்கள் தனியாக இயங்கிக் கொண்டிருந்தன. பிரிட்டீஸ்-இந்திய சிட்டிசன், அதன் பகுதி இல்லாத வேறு சமஸ்தான எல்லைக்குள் குற்றம் செய்திருந்தால்,  அவர்கள் மீது வழக்குப் போட வேண்டுமென்றால், அந்த சமஸ்தானத்தின் முன் அனுமதி பெற்றுத் தான் கிரிமினல் வழக்குப் போட முடியும்.

Sec.188 of the Criminal Procedure Code provides that no charge as to an offence committed beyond the limits of British India, or by a British subject in the territories of any Native Prince or Chief of India, shall be enquired into in British India unless the Political Agent for the territory in which the offence is said to have been committed, certifies that the charge ought to be enquired into in British India.

இந்த வழக்கில் காளிச்சரண் ஒரு பிரிட்டீஸ் இந்தியர். அவர் பிரிட்டீஸ் இந்திய எல்லைக்கு வெளியே உள்ள நேபாளத்தில் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார். எனவே சிஆர்பி சட்டம் பிரிவு 188ன்படி நேபாள மன்னர் அரசின் முன் அனுமதியைப் பெற்று வழக்குப் போடவில்லை. மாறாக, வழக்கை விசாரித்த பின்னர் அப்படிப்பட்ட அனுமதியைப் பின்னர் பெற்றுள்ளார்கள். எனவே அந்த குற்ற விசாரனை செல்லாது என்று தீர்ப்பு.

வேறு ஒரு வழக்கான, Queen-Empress v. Ram Sundar, (1896) ILR 19 All 109  என்ற வழக்கில் இதே போன்று நடந்துள்ளது. இதில் குற்றவாளியான ராம் சுந்தரும் மற்ற ஒருவனும் நேபாளத்தில் ஆள் கடத்தல் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை பிரிட்டீஸ் இந்திய மாஜிஸ்டிரேட் விசாரித்து தண்டனை கொடுத்து இருக்கிறார். நேபாள மன்னர் அரசின் முன் அனுமதி பெறவில்லை. ஆனால் பின்னர் பெற்று இருக்கிறார்கள். இந்த தண்டனைத் தீர்ப்பு செல்லாது என்று அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்புச் சொல்லியுள்ளது.

மற்றொரு வழக்கான, The Sessions Judge v. Sundara Singh, 6 Ind Cas 308, என்ற வழக்கில், இந்தக் குற்றவாளி பிரிட்டீஸ் இந்திய பிரஜை. இவன் கொள்ளை வழக்கில் சம்மந்தப்படுகிறான். இவன் கொள்ளையடித்த பகுதியானது புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குள் உள்ளது. இவன் மீது வழக்குப் போட வேண்டுமானால், கொள்ளை நடந்த இடத்தில் உள்ள கோர்ட்டில்தான் வழக்குப் போட முடியும். அந்த இடம் புதுக்கோட்டை சமஸ்தானம் என்பதால், அந்த சமஸ்தான அரசின் அனுமதி பெற்றுத்தான், பிரிட்டீஸ் இந்திய எல்லையில் உள்ள கோர்ட்டில் வழக்குப் போட முடியும். இந்த வழக்கில் அப்படி முன் அனுமதியைப் பெறவில்லை. எனவே வழக்கு விசாரனை சட்டப்படி செல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்புச் சொல்லி உள்ளது.

மற்றொரு வழக்கான, Sirdar Meru v. Jetha Bhai Amirbhai, (1906) 8 Bom. LR 513, என்ற வழக்கில், மேரு என்பவனை தாக்கி அவன் காலை ஒடித்து விடுகிறார்கள். இது நடந்தது பரோடா சமஸ்தான எல்லைக்குள் (இது பிரிட்டீஸ் இந்திய எல்லை இல்லை).  எனவே மேருவை ஆனந்த பகுதியில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள். (இது பிரிட்டீஸ் இந்திய எல்லைக்குள் உள்ளது). வழக்கை ஆனந்த் பகுதியில் உள்ள மாஜிஸ்டிரேட் கோர்டில் போடுகிறார்கள். அந்த மாஜிஸ்டிரேட் அந்த வழக்கை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். கிரிமினல் நடைமுறைச் சட்டம் 179-ன்படி, குற்றம் நடந்த இடத்தில் வழக்குப் போடலாம். அல்லது அதன் தொடர்ச்சியாக நடந்த குற்றநிகழ்வு இடத்தில் வழக்குப் போடலாம். உதாரணமாக: பரோடா சமஸ்தான எல்லைக்குள் அவன் காலை ஒடித்து விட்டார்கள். அவனை ஆனந்த நகரில் உள்ள மருத்துவ மனையில்  சேர்த்த பின்னர் அதனால் இறந்து விட்டால், இந்த வழக்கை, குற்றம் நடந்த இடமான பரோடாவிலும் போடலாம். அவன் அந்தக் காயத்தால் இறந்துவிட்ட ஆனந்த் நகரிலும் போடலாம். அப்படி இறப்பு நடந்து ஆனந்த நகரில் உள்ள கோர்ட்டில் (பிரிட்டீஸ் இந்திய கோர்ட்) போடும்போது பரோடா சமஸ்தானத்தின் முன் அனுமதி  தேவையில்லை. மாறாக, கால் ஒடிந்தது பரோடா சமஸ்தான எல்லையில். ஆனந்த் நகரில் சிகிச்சைக்காக மட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளார். இங்கு ஒரு குற்ற நிகழ்வும் நடக்கவில்லை. எனவே ஆனந்த் நகர கோர்ட்டில், பரோடா சமஸ்தானத்தின் முன் அனுமதி இல்லாமல்  வழக்குப் போட முடியாது என்று மாஜிஸ்டிரேட் மறுத்து விட்டார்.

**.


Sunday, June 28, 2020

JACTITATION SUIT

JACTITATION

A suit for #jactitation of marriage is not by any means a novel description of suit: it was a suit in which relief was given in England in the Ecclesiastical Courts, and when the jurisdiction of those Courts was transferred to the Divorce Court by the Act of 1857, the jurisdiction of the Ecclesiastical Courts in suits for jactitation of marriage was transferred to the Divorce Court. 

In England it was not only a well-known suit within the jurisdiction of the Ecclesiastical Courts, but it was considered proper that that jurisdiction should be continued by the Divorce Court in England, and there can be no doubt that unless a man is entitled by means of the Civil Courts to put to silence a woman who falsely claims to be his wife, the man and others may suffer considerable hardship, and his heirs may be harassed by false claims after his death. 

Hindu Marriage - Father's consent

Hindu marriage father’s consent

Hindu marriage without the consent of girl’s father:

The plaintiff ( a Hindu boy) married a girl on 14th May 1894. The girl’s father had not allowed the girl to live with that boy, because of the reason that his (girl’s father) consent was not obtained for that marriage. Therefore the boy filed the suit against his father-in-law.

The marriage was celebrated by the girl’s mother and without the consent of the defendant (girl’s father). The girl’s father did not support his wife and daughter and therefore they (mother and daughter) had been living with the girl’s mother’s brother. The girl had attained marriageable age and father did not care about her and therefore the mother secretly married the girl to the plaintiff-boy.

The usual rites of marriage were gone through, and that the relationship between the boy and the girl was not such as to render the marriage illegal under the Hindu Law.

The Lower Court raised the question whether under such circumstances (i.e. without the consent of the father of the girl) the marriage was valid according to Hindu Law. The Lower Court found that it was a valid marriage and decreed the suit.

The girl’s father filed the appeal before High Court of Allahabad in 1897.

The father contended that the marriage of the plaintiff with his daughter, without his consent was not a valid marriage.

The uniform course of rulings, dating back to 1843, has laid down that the want of a guardian’s consent would not invalidate a marriage actually and properly celebrated.

The Madras High Court after carefully reviewed on the subject by Justice Muthusami Ayyar and Justice Shepard and held in the case of Venkatacharyulu v. Rangacharyulu, iLR 14 Mad. 316, that:

“Where there is gift in marriage (kanniyaa-thanam கன்னியாக தானம்) by the legal guardian and the marriage rites were duly solemnized, the marriage is irrevocable. The mother is a legal guardian of the daughter, though the father is a preferential guardian.

If the girl was given away in marriage by her mother and all the necessary rites were duly performed that would make the marriage a valid marriage, and in the absence of force or fraud, such marriage would not be regarded as void by reason of the father of the girl not consenting to it.”

The Madras High Court further held that:

“It was also held by the High Courts at Calcutta and Bombay that when the marriage rite was duly solemnized and there was no fraud or force, the doctrine of ‘factum valet’ appliedd and the marriage was irrevocable.

Doctrine of Factum Valet:

This doctrine was applied by the British Courts in India, while administering Hindu Law, on grounds of equity, justice and good conscience.

The full maxim is: Factum valet quod fieri non debet. It literally means ‘what should not be done, yet being done, shall be valid.’

To understand this doctrine: That under the Hindu Law, the father’s consent is necessary to give his daughter in marriage. Suppose the mother, without the consent of the father, gives in marriage of her daughter, such marriage is not valid normally under the Hindu Law. But by applying this doctrine, such marriage should not be done, yet being done, it shall be valid.

The substantial question was – whether a gift of the bride by the father or her proper legal guardian, is of the essence of Hindu marriage as a religious ceremony.

As a religious ceremony it becomes complete when the saptapadi (7 steps before the sacred fire) is performed, and there are several Smritis to that effect.

Several Smritis:

Manu says:

The relation of wife is created, by the texts pronounced, when the girl is taken by the hand. Be it known that those texts end with the texts prescribed for walking seven steps.

Vasishta says:

In connection with the formation of the relation of husband and wife, agreement is first prescribed. Then taking by the hand is prescribed. It is said that mere agreement is defective, and that of the two, taking by the hands is indispensable.

Yama says:

Not by the pouring of water nor by the words of gift, is the relation of husband and wife formed, but it is formed by the rite of taking the bride by the hand, and when they walk together the seventh step. (completion of the 7th step).

Justice Muthusamy Ayyar further held:

I may here mention that the marriage ritual prescribed for Brahmans, and now in general use amongst them is what is known as the Brahma marriage. And this is the form customarily adopted, even where the father accepts a price for the girl. And the marriage is in substance of ‘asura’ kind.

The ritual, so far as it extends to saptapadi, may be divided into three parts.

1) the Vakda-nam – the promise to give the girl;

2) the Kanyaka-danam – the actual gift of the birde;

3) the Panigrahanam – the marriage rite which commences with taking the bride by hand;

And such marriage ends with the seventh step taken around the consecrated fire (saptapadi).

The Vak danam and Kannyaka danam may be treated as forming one essential part, and the marriage rite as the other.

It must be remembered that the ritual is prescribed for a minor or a child, for according to Hindu Law and custom, a Brahman girl, must be married before she attains her maturity (puberty), and therefore, at a time when she is not in a position to choose a suitable husband for herself.

Two principles therefore form together the groundwork of the marriage ceremony:

(1) A natural or legal guardian acting in the interest of the girl with due regard to her welfare should choose a suitable husband for her;

(2) The choice should be consecrated by the marriage rite and thereby unalterably fixed.

Hence, two propositions of law may be taken to be established beyond controversy, viz, (1) where there is a gift by a legal guardian, and the marriage rite is duly solemnized, the marriage is irrevocable; and (2) where the girl is abducted by fraud or force, and married, and there is no gift either by a natural or legal guardian, there is a fraud upon the policy of the religious ceremony, and there is therefor no valid religious ceremony.

 


Saturday, June 27, 2020

வழக்குகள் 6

வழக்குகள் 6

சிவில் கோர்ட்டில் (1) கடனை வசூல் செய்ய வழக்குப் போட்டு, பணத்துக்கான டிகிரியை பெறுவர் (money decree); (2) சொத்தின் மீது வழக்குப் போட்டு சொத்தின் சுவாதீனம் கேட்பர் (suit for possessoin of the property); (3) சொத்தின் மீதான அடமானக் கடனுக்கு வழக்குப் போட்டு அதே சொத்தை ஏலத்தில் விற்பனை செய்யும்படி கேட்பர் (decree to sell the property; (4) வேறு காரணங்களுக்காகவும் வழக்குப் போடுவர்.

இதில், பணத்தை வசூல் செய்ய வாங்கிய money decree-யை வசூல் செய்ய கடன்காரரின் சொத்தை ஏலம் போடும்படி கோர்ட்டை கேட்பர். அப்போது வேறு ஒருவர் வந்து அதை ஆட்சேபனை செய்யலாம். எப்படியென்றால், “சொத்து எனக்குச் சொந்தம், அந்தக் கடன்காரின் சொத்து இது இல்லை” என்று ஆட்சேபம் செய்யலாம். அப்போது executing Court அவரின் ஆட்சேபனை சரி என்றால், அந்த சொத்து விற்பனையை தள்ளிவிடலாம்.

ஆனால், அடமானக் கடனை வசூல் செய்ய போட்ட வழக்கில் அடமானச் சொத்தையே ஏலம் போட கேட்டு, அதற்கு டிகிரி வாங்கி இருப்பார். அப்படிப்பட்ட டிகிரி மீது, அந்தச் சொத்தை ஏலத்துக்குக் கொண்டு வந்தால், அதை மறுத்து எந்த வெளிப் பார்ட்டிகளும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது. ஏனென்றால், அந்த டிகிரியே அந்த சொத்தை விற்பதற்காக கொடுத்த டிகிரி. எனவே executing Court அந்த டிகிரியில் சொல்லி உள்ளதை மாற்றி ஏதும் செய்து விட முடியாது. ஒரு டிகிரியை நிறைவேற்றும் போது, அந்த டிகிரியில் என்ன சொல்லி உள்ளதோ அதை அப்படியே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, நிறைவேற்றும் கோர்ட்டுக்கு (executing Court) உண்டு.

The Court executing a decree cannot take upon itself to alter or vary that decree. Its powers are confined to construing a decree when necessary and executing a decree in its terms so long as the law allows the decree to be executed.

There is an essential difference between “the execution of a decree for money by the sale of the property” and “the execution of a decree for sale of property specified in the decree”.

In the first case (sale of property through money decree) – any third person can intervene in the execution of a decree and show that the decree could not be executed against particular property, if that property was not the property of the judgment-debtor, but was the property of the person opposing.

Similarly, in the case of a decree for money, where the judgment-debtor dies, his representative is entitled to oppose the execution of the decree against any particular property by showing that property was not the property of the judgment-debtor and was the property of the representative, was for example, that it was his self-acquired property.

In such cases, when such objection is taken before the Court executing the decree for money, that Court has power to inquire into and decide on any such objection taken to the execution of the decree against any particular property.     

In the Second case (the decree is a decree for sale of property) – the Court executing the decree must sell the property decreed to be sold and leave any one objecting to the execution of the decree against that particular property to such remedy as he may have by a suit or by resistance to the possession of the purchaser.

**

 


வழக்குகள் 5

வழக்குகள் – 5

பிரதிவாதியின் சொத்து ஏலத்துக்கு வருகிறது. அதை வாதி ஏலம் எடுக்கிறார். கோர்ட் மூலம் formal possession சொத்து ஒப்படைப்பு செய்யப் படுகிறது. ஆனால் உண்மையில் அவருக்கு சொத்தின் சுவாதீனம் கிடைக்கவில்லை. பிரதிவாதியே சொத்தில் அனுபவத்தில் இருந்து வருகிறார்.

எனவே வாதி, ஒரு வழக்குப் போட்டு அதில் சொத்தின் physical possession என்னும் உண்மையான சுவாதீனத்தைக் கேட்கிறார். ஆனால் பிரதிவாதி, “ஏலம் விடப்பட்ட தேதியில் இருந்து நான் தான் சுவாதீனத்தில் இருக்கிறேன். ஏலத்தேதியிலிருந்து வழக்குத் தேதிவரை 12 வருடங்களுக்கு மேலாகி விட்டது. எனவே வாதி சுவாதீனம் கேட்க முடியாது” என்று சொல்கிறார்.

ஆனால் கீழ்கோர்ட், “சொத்தின் ஏலத் தேதியை கணக்கில் எடுக்க முடியாது. கோர்ட் சொத்தை ஒப்படைத்த தேதியைத் தான் கணக்கில் எடுக்க வேண்டும். அன்றிலிருந்து கணக்கெடுத்தால், 12 வருடங்கள் முடிவடையவில்லை. எனவே வாதிக்கு சுவாதீனம் கொடுக்கலாம்” என்று தீர்ப்புக் கூறி விட்டது.

அதை எதிர்த்து பிரதிவாதி, மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அப்பீல் கோர்ட், “கோர்ட் formal possession கொடுத்த தேதியை கணக்கில் எடுக்க முடியாது. ஏலத் தேதியைத்தான் கணக்கில் எடுக்க முடியம். எனவே 12 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று தள்ளுபடி செய்து விட்டது.

அதை எதிர்த்து வாதி, அலகாபாத் ஐகோர்ட்டில் 1897-ல் அப்பீல் செய்கிறார்.

ஐகோர்ட்டில்:

If possession was delivered to the auction purchaser through the Court in the manner required by CPC, that delivery of possession gave to the auction-purchaser, as against the judgment-debtor whose rights were purchased by him, a conclusive title, and must, as observed by the Calcutta High Court in the case of Juggobundhu Mukerjee v. Ram Chunder Bysack, ILR 5 Cal.584, be deemed to be equivalent to actual possession.

On the date of delivery of possession the auction-purchaser must be held to have obtained actual possession as against the judgment-debtor, and it is only during the period following that date that the possession of the judgment-debtor, if he continued in possession, could be regarded as adverse.

This view is supported by the Full Bench ruling of the Calcutta High Court in the case of Joggobandhu Mitter v. Purnananund Gossami, ILR 16 Cal. 530. In which it was held that limitation should be computed in a suit for possession against the judgment-debtor from the date of of delivery of formal possession.

எனவே கீழ்கோர்ட் சொன்னபடி, கோர்ட் சுவாதீனம் கொடுத்த தேதியைத் தான் கணக்கில் எடுக்க வேண்டும். ஏலத் தேதியை எடுக்கக் கூடாது. எனவே சொத்தைக் கோர்ட் மூலம் சுவாதீனம் (formal possession) பெற்ற தேதியிலிருந்து 12 வருடங்கள் ஆகவில்லை. எனவே வாதிக்கு சொத்தின் சுவாதீனத்தைக் கொடுக்கலாம் என்று தீர்ப்புக் கூறியது.

**.


வழக்குகள் - 4

வழக்குகள் 4

சொத்துக்களை பாகஸ்தர்களுக்குள் முந்திக்கொண்டு வாங்கும் உரிமை:

முஸ்லீம் சொத்துக்களில் Preferential right to purchase or Pre-emption right to purchase என்ற உரிமை உள்ளது.

இந்த உரிமை என்பது, சொத்து கூட்டாக இருக்க வேண்டும், ஒரு பாகஸ்தர் தனது பாகத்தை வெளியாருக்கு விற்க நினைத்தால், அவர் அதை வெளியாருக்கு முதலில் விற்க முடியாது. அந்தச் சொத்தின் மற்ற பாகஸ்தர்களிடம்தான் விற்க முடியும். அவர்கள் வாங்க மறுத்து விட்டால் மட்டுமே, வெளியாருக்கு விற்க முடியும். இதைத்தான் முஸ்லீம் சட்டத்தில் Pre-emption right (பிரிஎம்ஷன் உரிமை) அல்லது உருது மொழியில் Shaffa என்று சொல்லியுள்ளது.

இந்துக்களில் கூட்டுக் குடும்பத்தில் உள்ள குடியிருக்கும் வீட்டை விற்கும்போது மட்டும், பாகஸ்தர்களுக்குள் இந்த Pre emption உரிமையை கொண்டு வர முடியும். மற்ற சொத்துக்களுக்கு இந்த உரிமை கிடையாது.

1897-ல் அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கு:

ஒரு பொதுப் பாதைவழியைப் பொறுத்து இந்த வழக்கு வருகிறது. பாதைவழி உரிமையுள்ள ஒருவர் அவரின் உரிமையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்கிறார். விற்பனை செய்பவரின் பங்காளி அதை ஆட்சேபனை செய்கிறார். அவருக்குத் தான் முதலில் விற்பனை செய்ய வேண்டும் என்று வழக்குப் போடுகிறார்.

ஆனால் பிரதிவாதியோ, “எனக்கு இந்த பாதைவழியில் ஏற்கனவே பங்கு உள்ளது. எனவே நான் வெளியார் இல்லை. பங்கு இருக்கும் எனக்கு எதிராக, Pre emption உரிமையை வாதி கேட்க முடியாது” என்று கூறுகிறார்.

பிரதிவாதியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட கீழ்கோர்ட், வாதியின் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. அதை எதிர்த்து வாதி, ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.

ஐகோர்ட்டில் வாதியின் வாதம்:

முகமதிய சட்டத்தில், பிரதிவாதிக்கு இதேபோன்ற Pre emption உரிமை இருந்தாலும், அதை வாதிக்கு எதிராக பயன்படுத்த முடியாது. அதை ஒரு வெளிநபரிடம்தான் பயன்படுத்த முடியும் என்கிறார். வாதிக்கும் அவரின் பங்காளிக்கும் உள்ள கூட்டுரிமையில், பிரதிவாதி வெளிநபர் ஆவார் என்கிறார்.

The Rule laid down in Book XXXVIII, Chapter I, of the Hedaya, Vol. III, p.566:

When there is a plurality of persons entitled to the privilege of shaffa the right of all is equal is as much applicable when the purchaser is a person having the right of pre-emption as when he is a stranger.

கல்கத்தா ஐகோர்ட்டின் மூன்று முன் தீர்ப்புகள்:

Baboo Moheshee Lal v. G.Christian, 6 WR 250:

இந்த வழக்கில், Pre emption உரிமை என்பது, முகமதியர் சட்டத்தில், கூட்டு உரிமையாளர்களிடம் கேட்க முடியாது. வெளியாரிடம் தான் கேட்க முடியும் என்று சொல்லி உள்ளது.

The right of pre-emption could, under Muhammadan law, only be against strangers or third parties not co-parceners.

மற்றொரு வழக்கான Teeka Dharee Singh v. Mohur Singh, 7 WR 260:

இந்த வழக்கில், சொத்தை வாங்குபவர் வெளிநபர் இல்லையென்றால், அவர் ஏற்கனவே சொத்தில் ஒரு உரிமைதாரராக இருந்தால், அவர்மீது, Pre emption உரிமை கேட்க முடியாது என்று சொல்லியுள்ளது.

The very fact that of the purchaser not being a stranger, but one who is already either a shareholder or a neighbour, proves that the Mohammadan law of pre-emption never intended to apply to such a case.

மற்றொரு வழக்கான Lalla Nowbut Lall v. Lalla Jewan Lall, ILR 4 Cal 831:

இது ஒரு முழு பெஞ்ச் தீர்ப்பாகும். இதன்படி, ஒரு கோபார்சனர், மற்றொரு கோபார்சனர் மீது Pre-emption உரிமை கோர முடியாது. வெளியாள் வாங்கும்போதுதான் கேட்க முடியும்.

A Full Bench held that by the Muhammadan law one coparcener has no right of pre-emption as against another coparcener.

ஹிதாயா சட்டத்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

Hamilton’s Hedaya Vol III Book 38 Ch-I, appears to have been misunderstood in this respect. That rule merely prescribes that any one partner (or coparcener) of a property has a right of shaffa as against a stranger who purchases a share from his coparcener, who may purchase shares from one another.

The object of the rule, as explained in that chapeter, and in Ch-3, is to prevent the inconvenence which may result to families and communities from the introduction of a disagreeable stranger as a coparcener or near neighbour.

But is is obvious that no such annoyance can result from a sale by one coparcener to another. The only result of such sale would be to give the pruchaser a larger share in the joint property than he had before, and perhaps larger than the other coparceners have.

Justice Ameer Ali’s work on Muhammadan Law, Vol-I page 590:

 When one co sharer conveys his share to another co sharer, no other co-sharer, if any, can have a right of pre-emption, the rights of all being equal, and the reason on which the right is founded, therefore, being absent.

In other words, no right of pre-emption arises in favour of a coparcener when the purchaser himself is a co-sharer of the vendor and the claimant.

ஹிதயா சட்ட விளக்கத்தின்படி, இந்த உரிமையானது, கூட்டுக் குடும்பச் சொத்தில் வெளியாரை உள்ளே விடக்கூடாது என்ற கொள்கையில் ஏற்படுத்தப் பட்டது என்பது தெளிவாகிறது.

The Takmila Bahr-ur-Raik (Part-II) Book on Pre-emption: Egyptian Edition, p.143:

It is given in the Tatar Khaniyah that a neighbour purchased a house and there was another neighbour on the other side who claimed pre-emption; the house would be equally divided between the purchaser and the neighbour.

**.