A
bench of two Judges of Delhi High Court (Chief Justice G.Rohini and Justice Sangita Dhingra Sehgal)
issued notice to the Union of India seeking a clarification on apparent
contradiction between Sec.375 IPC and Sec.377 IPC.
Sec.375
IPC - Rape
Sec.377
IPC – Unnatural sex
ஒரு பெண்ணிடம் அவளின்
விருப்பத்துக்கு மாறாக உடலுறவு கொண்டால் அது ரேப் என்னும் குற்றம் ஆகும்; இந்தியன்
பீனல் கோடு செக்ஷன்: 375:
அவளின் விருப்பத்துக்கு மாறாக
என்பது –
(1)அவள் சம்மதம் இல்லாமல்;
(2)அவள் விருப்பத்துக்கு
எதிராக;
(3) அவளை மிரட்டி சம்மதிக்க
வைத்தால் (கொலை செய்துவிடுவதாக அல்லது காயப்படுத்தி விடுவதாக மிரட்டி);
(4) அவளின் கணவனாக இல்லாதபோது,
அவளைத் திருமணம் செய்து மனைவியாக ஏற்றுக் கொள்வேன் என்று பொய்யான வாக்குறுதி
கொடுத்த சம்மதம் பெற்றிருந்தால்;
(5) அவளை மயக்கத்துக்கு
உட்படுத்தி அல்லது அவள் மனநிலை சரியில்லாதபோது அவளின் சம்மதம் பெற்றிருந்தால்;
(6) அந்த பெண் 18 வயதுக்கு
குறைவாக இருக்கும்போது, அவளிடம் சம்மதம் வாங்கி இருந்தாலும், வாங்காமல்
இருந்தாலும்;
(7) அவளால் சம்மதம் கொடுக்க
முடியாத நிலையில் இருந்தால்;
இந்த சூழ்நிலைகளில் ஒரு
பெண்ணிடம் உடலுறவு வைத்திருந்தால், அது ரேப் எனப்படும் என்று இந்திய தண்டனைச்
சட்டம் செக்சன் 375 சொல்கிறது;
இதற்கு விதிவிலக்குகள் இரண்டு:
1-வது விதிவிலக்கு: மருத்துவ ரீதியாக செயல்படும்போது, அது ரேப்
ஆகாது;
2-வது விதிவிலக்கு: ஒருவர் அவரின் மனைவியுடன்
உடலுறவு கொள்வது ரேப் ஆகாது; (ஆனால், அந்த மனைவி 15 வயதுக்கு குறைவானவராக இருக்கக்
கூடாது);
இந்தக் குற்றத்துக்கு
குறைந்தபட்சம் ஏழு வருட சிறைத்தண்டனையும் அதிக பட்சமாக ஆயுள் தண்டனையும் உண்டு;
இந்தக் குற்றத்தை ஒரு போலீஸ்
அதிகாரி அல்லது அரசு அதிகாரி செய்திருந்தால் (அந்தப் பெண் அவரின் பொறுப்பில்
இருக்கும்போது செய்திருந்தால்) குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்
அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும்;
375ஏ: இந்த ரேப்பில் அந்தப்
பெண் இறந்துவிட்டால் – குற்றவாளிக்கு 20 ஆண்டுசிறை;
375பி: சட்டப்படி பிரிந்து
வாழும் மனைவியை ரேப் செய்திருந்தால் – 2 வருடசிறை;
375சி: தன்னிடம் வேலை செய்யும்
பெண்ணை ரேப் செய்திருந்தால் -5 வருட சிறை;
375டி; கேங்க் ரேப் என்னும்
கூட்டாக பலர் சேர்ந்து ரேப் செய்திருந்தால் – 20 வருடசிறை;
375ஈ: இதே வேலையைத் தொடர்ந்து
செய்பவனாக இருந்தால் – அவன் ஆயுள் இயற்கையாய் முடியும் காலம்வரை சிறை;
**
Sec.377: Unnatural offences:
இயற்கைக்கு மாறாக ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் உடலுறவு வைத்துக் கொண்டால்,
அது இயற்கைக்கு மீறிய உடலுறவு என்று பெயர்; Unnatural offence.
இந்த குற்றத்துக்கு 10 வருடம் சிறைதண்டனை; இது ஜாமினில் விடமுடியாத
குற்றம்; சமாதானம் ஏற்படுத்திக் கொள்ள முடியாத குற்றம்;
**
2013ல் குற்றங்களுக்கான சட்டம்
திருத்தம் செய்யப்பட்டது;
இங்கு ஒரு வழக்கு 2013ல் கோர்ட்டுக்கு
வருகிறது: அது –
ஒரு ஆண், அவர் மனைவியை சுமார்
20 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்; அவர்களுக்குள் உடலுறவு
நடக்கிறது; ஆனாலும், அந்த மனைவி, தன்னை, தன் கணவர், மனைவியின் விருப்பத்திற்கு
மாறாக உடலுறவு கொண்டார், எனவே அது ரேப் ஆகும் என்றும், மேலும் தன்னிடம் இயற்கைக்கு
மாறாகவும் உடலுறவு கொண்டார் என்றும் போலீஸில் எப்ஐஆர் (புகார்) கொடுத்தார்; வழக்கு
பதிவு செய்யப்பட்டு கோர்ட்டுக்கு போகிறது:
கோர்ட்டில் தீர்ப்பு; (1)
மனைவியுடன் அவள் விருப்பத்துக்கு மாறாக உடலுறவு கொண்டது ரேப் ஆகாது என்றும்; (2)
இயற்கைக்கு மாறாக மனைவியுடன் உடலுறவு கொண்டது குற்ற நடவடிக்கைக்கு உட்படும்
என்றும் கோர்ட் கூறியது;
**
உடலுறவு: ஒரு பெண்ணிடம் உடலுறவு
கொள்ளலாம்; ஆனால், அவளின் சம்மதம் வேண்டும்; அவளின் சம்மதம் இல்லாமல் அவளிடம்
உடலுறவு கொண்டால் அது ரேப்; அந்த சம்மதத்தையும், வெளிப்படையாகப் பெற்றிருக்க
வேண்டும்; அவளை ஏமாற்றி அந்த சம்மதத்தை பெற்று இருக்க கூடாது; ஆனால் இதற்கு
விதிவிலக்காக, மனைவியிடம் அவளின் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டால் அது ரேப்
இல்லை என செக்சன் 375-ன் விதிவிலக்கு-2 சொல்கிறது;
இயற்கைக்கு மாறான உடலுறவு: இயற்கைக்கு மாறான உடலுறவை
யாரிடம் வைத்துக் கொண்டாலும் அது குற்றமே! ஒரு பெண்ணிடம் வைத்துக் கொண்டாலும், ஒரு
ஆணிடம் வைத்துக் கொண்டாலும் (ஆணும் ஆணும்), அல்லது ஒரு மிருகத்திடம் வைத்துக்
கொண்டாலும், அவை எல்லாம் இயற்கைக்கு மாறான உடலுறவு;
இப்போது ஒரு சந்தேகம்
எழுகிறது;
ஒருவர், தன் மனைவியிடம், இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்துக் கொண்டால் அது குற்றமா
என்பதே கேள்வி;
நாஸ் பவுன்டேஷன் வழக்கு: டில்லி ஐகோர்ட்டில் நாஸ் பவுன்டேசன் ஒரு பொதுநல
ரிட் வழக்கு போடுகிறது: டில்லி ஐகோர்ட் தீர்ப்பின்படி, செக்சன் 377 (இயற்கைக்கு
மாறான உடலுறவு) என்பது சம்மதமில்லாமல் இருந்தால் மட்டுமே குற்றம்; மற்றபடி, இருவர்
தனியே ஒரு இடத்தில் இத்தகைய உறவை அவர்கள் இருவரின் சம்மதத்துடன் உறவு
கொண்டிருந்தால், அது செக்சன் 377ன்படி குற்றமில்லை என்ற தீர்ப்பை டில்லி ஐகோர்ட்
வழங்கியது;
இதை எதிர்த்து வழக்கு சுப்ரீம்
கோர்ட்டுக்கு போனது; அங்கு, இந்திய அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 21ன்படி (தனி
மனிதனின் பிரைவசி) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377ன்படி பாதிப்புக்கு உள்ளாகிறது
என்றும், ஒருவன், தன் விரும்பம்போல உடலுறவு கொள்ள அவனுக்கு தனிப்பட்ட உரிமை
உள்ளது; அதில் சட்டம் தலையிட முடியாது என்று வாதம்;
MSM (Men who have sex with men):
2006 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 25 லட்சம் பேர்
எம்எஸ்எம் நபர்களாம்;
Former Judge of Australian High Court Justice
Michael Kirby observed:
“Thus popular morality or public
disapproval of certain acts is not a valid justification for restriction of the
fundamental rights under Article 21. Popular morality, as distinct from a
constitutional morality derived from constitutional values, is based on
shifting and subjecting notions of right and wrong. If there is any type of ‘morality’
that can pass the test of compelling state of interest, it must be ‘constitutional’
morality and not public morality.”
டில்லி ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது; அதன்படி செக்சன் 377 இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது அல்ல
என்று தீர்ப்பு;
The right to live with dignity has been
recognised as part of Art.21 and the matter has been dealt with in Francis
Coralie Mullin v. Administrator, Union Territory of Delhi and others, (1981) 1
SCC 608 wherein the Court observed: “8.But the question which arises is whether
the right to life is limited only to protection of limb or faculty or does it
go further and embrace something more….. Now obviously, any form of torture or
cruel, inhuman or degrading treatment would be offensive to human dignity and
constitute an inroad into this right to live and it would, on this view, be
prohibited by Art.21 unless it is in accordance with procedure prescribed by
law, but no law which authorises and no procedure which leads to such torture
or cruel, inhuman or degrading treatment can ever stand the test of reasonableness
and non-arbitrariness: it would plainly be unconstitutional and void as being
violative of Art 14 and 21.”
**